Sunday 22 November 2015

கலாம் கேட்கச் சொன்ன கேள்விகள்..??


1.தேசத்தில் எல்லோருக்கும் தேவையான,சத்தான உணவு கிடைக்கிறதா..??


2.நம் நாட்டு குடிமக்களின் சராசரி ஆயுள் எவ்வளவு ஆண்டுகள்..??


3.பிறந்த குழந்தைகளில் இறந்து போகாமல் பிழைக்கும் குழந்தைகள் எவ்வளவு..??

4.குடிநீர் கிடைக்கிறதா..?? அது சுகாதரமானதாய் இருக்கிறதா..??

5.மனிதர்களின் வீடுகளிலும்,அலுவலகங்களிலும்,சுகாதாரமான சுற்றுச்சூழலும் கழிப்பிடமும் உள்ளனவா..??




6.நல்ல  மருத்துவ வசதிகள் உள்ளனவா.?                                                                        


7.மாணவர்கள்,தாங்கள் விரும்பும் துறைகளில் ஈடுபடும் விதமாக நல்ல கல்வி நிறுவனங்கள் உள்ளனவா..??

8.இன்றைய நவீன உலகில் ,பணம் சம்பாதிக்கும் விதமாக திறமைகளை மனிதர்கள் வளர்ந்துக் கொள்ளும் வசதிகள் நம் தேசத்தில் உள்ளனவா..??

9.சாலைகள் ,தட்டுப்பாடில்லாத மின்சாரம் ,தடையில்லா  தொலைத்தொடர்பு ஆகிய வசதிகள் உள்ளனவா..??      

10.குடிமக்கள் பாதுகாப்பாக உணர்கிறார்களா..??


இது அவருடைய கேள்விகள் மட்டும் அல்ல இந்தியராகிய நம் அனைவரும் கேட்க வேண்டிய ஒன்று..நம் பாரதம் நமது உரிமை...

Thursday 12 November 2015

நம்ம நாட்டிலா..!!! நம்ம அரசாங்கமா..!!!






          நமது நாட்டில் எழுதப்படிக்கத் தெரியாதோர் 27 கோடிப்பேர்,வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழ்வோர் 41 கோடிப்பேர்,குடிநீர் கூடக் கிடைக்காமல் திண்டாடுவோர் 15 கோடிப்பேர்,கழிப்பிட வசதி கூட இல்லாமல் அவதிப்படுவோர் 60 கோடிப்பேர்,சத்தான உணவின்றி வாடும் குழந்தைகள் 43 விழுக்காட்டினர்,தேவையான அடிப்படை மருந்துகள் கூட இல்லாமல் இன்னலுறும் கிராமத்தினர் 75 விழுக்காட்டினர்.ஆனால் புகையிலை உற்பத்தி செய்து விற்று நம் மக்களின் உடல்நலத்தைக் கெடுக்கும் ஒரு நிறுவனத்தில் அரசாங்கத்தின் பங்கு முதலீடு 34.58 விழுக்காடு என்பது அதிர்ச்சியளிக்கிறது.அதுவும் எல்.ஐ.சி(13.72%) யூ.டி.ஐ(11.4%)ஜென்ரல் இன்ஷுரன்ஸ் என அரசின் பல்வேறு காப்பீட்டு நிறுவனங்கள் இந்தப் புகையிலை நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன.அதாவது எதிர்காலத்தில் நம் உடல் நலம் கெட்டுவிட்டால் மருத்துவச் செலவிற்கு வேண்டும் என மாதந்தோறும் இன்ஷீரன்ஸ் நிறுவனத்தில்  கட்டும் பணம்,நம்மையே புகையிலை என்னும் போதைக்கு அடிமையாக்கி நம் உடல் நலம் கெட வைக்கிறது என்று அறியும்பொழுது அரசின் பணமுதலீட்டுக் கொள்கை,மக்களை விட பணமே பிரதானம் என்பதுதான் என எண்ண வைக்கிறது..மேலும் அழகான கறுப்பு நிறப்பெண் வேண்டும் என்று மணமகள் தேவை விளம்பரத்தில் நாம் என்றாவது பார்த்தது உண்டா..?? நிறக்குறைவான பெண்களைக் கேலி செய்து சித்தரிப்பதும், தரம் தாழ்த்திப் பார்பதும் ,சமுதாயத்தின் சர்வ சாதாரண செயலாகிவிட்டது.இதுதான் அவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதுடன் தன்னம்பிக்கையையும் தகர்க்கிறது.இமு போன்ற சமுதாயத் தாக்கத்தினால்தான் இப்போது நம் நாட்டில் சிவப்பு நிறமாக்கும் முகப்பூச்சுகளுக்காக செய்யும் செலவு ஆண்டிற்கு 1100 கோடி ரூபாயை எட்டியுள்ளது.இது இந்திய அரசு சென்ற ஆண்டு விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டிற்காக முதலில் ஒதுக்கிய 765 கோடியைவிட அதிகம் என்பது உள்ளத்தை உறுத்துவதாக உள்ளது..இதுப்போன்ற நிறுவனத்தில் முதலீடு செய்யும் அரசு மேலே இல்லாத நபர்களுக்கு ஏன் உதவக் கூடாது..???? இது நமது உரிமை..வாருங்கள் நண்பர்களே  இனியொரு விதி செய்வோம்...!!

Monday 2 November 2015

விளை நிலமா ...?? விலை நிலமா...??





நமது விவசாயம் என்பது சிந்து சமவெளியில் தொடங்கி இன்று வரை பின்பற்றப்படுக்கின்றன..நமது விவசாய வளர்ச்சியைக் கண்டு தான் அன்று பிரிட்டிஷ் நாடு நம்மை அடிமைச் செய்து நமது நாட்டை கைப்பற்றியது..பிறகு நம்மை வழி நடத்திச் செல்ல அண்ணல் காந்தி  இருந்தார்..அவர் கூறிய அன்பு பொன்மொழி  விவசாயம் தான் இந்தியாவின் முதுகெழும்பு என்பது ..ஆனால் இன்று  விவசாயம் என்றால் என்ன..??? ஒரு நாடு வளம் பெற வேண்டும் என்றால் முதலில் விவசாயம் மேன்மை அடைய வேண்டும்..ஆனால் இன்று விளை நிலம் தான் விலை நிலம் ஆனதே...!!! பிறகு எப்படி விவசாயம்..??? நாம்  அடுத்த தலைமுறைக்கு எதை  அளிப்பது உணவா..?? பணமா..?? மரணமா..?? தற்பொழுது கிடைக்கும் உணவிலே ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்கிறது..இந்நிலைத் தொடர்ந்தால்..?? நமது விவசாயம் விளை நிலமாகவே இருக்கட்டும்.. விவசாயம் தொடரட்டும்..நாளைய தலைமுறைக்கு விவசாயம் பற்றி தெரிந்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கலாம்..விவசாயிகளுக்கு அன்பு நன்றிகள்..உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.... 

Sunday 1 November 2015

தமிழ் நாடு அரசே...!!! இதைக் கொடு இலவசமாக....!!!




      கல்வி,மின்சாரம்,குடிநீர். இதைக் கொடு இலவசமாக..!!!! 

நமது அடிப்படைத் தேவை  உணவு,உடை,இருப்பிடம் இவை அனைவருக்கும் கிடைக்கிறது  என்பது  உண்மை..ஒரு சிலருக்கு கிடைப்பது இல்லை ...ஆனால்  நமது  அரசு  எவ்வளவோ சலுகை அளிக்கிறது அதில் ஏன் இதை அளிக்கக் கூடாது..??? அளிக்கும்  ஆனால் அனைவருக்கும் இல்லை..அடுத்து அரசு அளிக்க வேண்டிய முக்கியமான  இலவசம்  கல்வி,மின்சாரம்,குடிநீர் இவற்றை வழங்கினால் கூட  நமது நாட்டில் வறுமை அளவைக் குறைக்கயியலும்..எவன் ஒருவன் கல்வி கற்கின்றானோ அவனால் தனது நிலையை மாற்ற இயலும்...அடுத்தது மின்சாரம் நாம் மூன்று நிலையில்  மின்சாரக் கட்டணம் செலுத்தி வருக்கின்றோம்..அதாவது,வீடுகள் ,விவசாயம் மற்றும் தொழிற்சாலைகள் இவற்றில் வேறுபாடுகள் உள்ளன..அடுத்தது குடிநீர் ஐந்து ரூபாய் இல்லாமல் நம்மால் ஒரு குடுவைத் தண்ணீர் கூடக் குடிக்க இயலவில்லை..இலவசமாக கிடைத்தாலுமே சுகாதாரமாக கிடைப்பது இல்லை ...இவ்வாறு தொடர்ந்தால் அடுத்து நாம் மரணத்தின் பிடியில் தான்..இவை மூன்றுமே நமக்கு இலவசமாக கிடைத்தால் நமது நாடு வல்லரசு அடையும் என்பது உண்மையே.. சிந்தியுங்கள் நண்பர்களே..இது கிடைத்தால் நாம் யாரிடமும் கையேந்தத் தேவையில்லை..நாமும் வளர்ந்த நாடாக முடியும்..இது ஒரு தொடக்கப் புள்ளியே...வந்து இணையுங்கள் கோடுகளாக நண்பர்களே....

நன்றி.


   எனது கருத்தில் பிழைகள் இருப்பின் மன்னியுங்கள்......


அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...