Wednesday 9 January 2019

நன்றியில் உயர்ந்தவர்கள்


புதிரான உலகிற்கு அன்புடன் வரவேற்கிறேன்.

Friday 4 January 2019

செல்லினம்




இணைய முகவரி 
https://sellinam.com

கணினி மற்றும் மடிக்கணினி போன்றவைகளில் தட்டச்சு செய்வது மிகவும் கடினமான ஒரு சவாலாக இருந்தது முன்பு ஒரு காலத்தில். ஆனால் இன்று நம் அனைவரின் கைகளிலும் திறன்பேசி வந்துவிட்டது. அதன் பயன்பாடு மிகவும் அதிகரித்து வருகிறது. இன்னும் சொல்ல போனால் ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டி போட்டு தனது செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வரிசையில் இன்று நாம் பார்க்க இருக்கும் இணையம் தமிழுக்காக உருவாக்கப்பட்ட தமிழ் தட்டச்சு செயலி பக்கம்.

சீன நாட்டில் மூன்று விசைப்பலகை கொண்டு தட்டச்சு செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் நாம் ஒரு விசைப்பலகையில் தட்டச்சு செய்வது ஒரு பெரிய சாதனையாக நினைக்கிறோம். அதிலும் தமிழில் தட்டச்சு செய்வது ஒரு போருக்கு ஒத்திகை பார்ப்பது போல இருக்கும். அதனை எல்லாம் சுக்குநூறாக மாற்றியது என்றும் சொல்லலாம்.  இதில் ஒரு பெருமை ஒன்று உண்டு கர்வம் என்று கூட சொல்லலாம். தமிழுக்காக உருவாக்கப்பட்ட இந்த செயலி தமிழரான முத்து நெடுமாறன் அவர்களால் உருவாக்கப்பட்டது என்பது பெருமைக்குரியது. 

2003ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட செல்லினம். அதே ஆண்டு ஆகஸ்டு 14ஆம் நாள் மலேசியாவில் மெக்சிஸ் செல்பேசி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியில் செல்லினத்தின் செயல்முறை பலருக்கும் செய்து காட்டப்பட்டது.இன்று அதிக திறன்பேசிகளில் தரவிறக்கம் செய்யப்பட்டு பயனபடுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


வெல்க கணித்தமிழ்.



Thursday 3 January 2019

குழந்தைகள் ஜாக்கிரதை


தலைப்பு :பெண்களுக்கான சட்டங்கள் மற்றும் அறியாத தகவல்கள்

சட்டம் ;

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடைபெறும் இதே நாட்டில் தான் அதற்கான தீர்வுகளையும் சொல்கிறது. ரஷ்யாவில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தற்காப்பு என்ற பெயரில் தன்னை வன்புறுத்தும் நபரின் பிறப்பு உறுப்புகளை அறுத்து கொலை செய்யும் சட்டம் புதுப்பிக்கபுதுப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால் நமது இந்தியாவில்  நான்கு முனை துப்பாக்கியில் அவனுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதன் தொடர்பான சட்டங்கள் பற்றி பேசினோம்.

குறிப்பாக பிபிசி செய்தியாளர் ஓப்ரா மற்றும் பூலான்தேவி போன்றவர்களின் வாழ்க்கையில் அவர்கள் சந்தித்தை பற்றி பகிர்ந்து கொண்டோம்..

திடுக்கிடும் தகவல்கள்;

செக்ஸ் டூரிசம் பற்றி புதிதாக மற்றும் திடுக்கிடும் தகவலை பற்றி பார்த்தோம். யாருக்கும் தெரியாத ஒன்றாக இந்த தகவல் இருந்தது.

இந்தியாவில் இதற்காக ஒரு பெரிய சந்தையே உள்ளன. சென்னை பெங்களூர் ஐதராபாத் மும்பை டெல்லி கோவா போன்ற பிரபலமான நகரங்களில் இற்கான ஒரு பெரிய சந்தை இருப்பது பிரம்மிக்க வைக்கிறது.

செக்ஸ் டூரிஸம்!!!

தமிழகத்தையே உலுக்கிக்கொண்டு இருக்கும்  செக்ஸ் டூரிஸம் இதை பத்தி தான் நம்ம இன்னிக்கு பேசப்போறோம்.

"தமிழகத்தை மிரட்டும் செக்ஸ் டூரிஸம்"

சர்வதேச அளவில் வளர்ந்துவரும் சமூக விரோதச் சுற்றுலா இது.

குழந்தைகளை மட்டுமே வன்புணரும் உளவியல் நோயான "பீடோ ஃபைலிக்"மன நோயாளிகளின் கூட்டங்களால் நடத்தப்படும் பெரும் வணிகம் இது.

அமெரிக்காவின் FBI தொடங்கி INTREPOLE வரைக்கும் இந்த கும்பலை பிடிக்க தனிப்படைகளை அமைத்திருக்கின்றன

“நமது நாட்டில் முதன்முதலாக கோவாவில் தொடங்கியது சைல்டு செக்ஸ் டூரிஸம்.

 உலகம் முழுவதுமிருந்து பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ள பெண்களைத் தேடி தாய்லாந்துக்கு வரும் கூட்டத்தைப் போல கோவாவுக்குக் குழந்தைகளைத் தேடி ஒரு கூட்டம் வருகிறது.

 ‘எஸ்கார்ட்’ என்கிற பெயரில் 10 வயது முதல் 15 வயது வரையிலான ஆண், பெண் குழந்தைகளை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களுடன் தங்கவைத்துக்கொள்வார்கள்.

ஒரு நாள், மூன்று நாள், ஒரு வாரம், ஒரு மாதம் என பேக்கேஜெல்லாம் உண்டு. ஒரு நாளைக்கு ஆயிரங்களில் தொடங்கி லட்சங்கள் வரை கட்டணங்கள் கைமாறும்.

 இயற்கைக்கு மாறான என்னென்ன வழிகள் இருக்கின்றனவோ அத்தனை வழிகளிலும் குழந்தைகளை அவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார்கள்.

 இதற்காக அங்கு அரசியல் பிரமுகர் துணையோடு நடக்கும் கட்டப் பஞ்சாயத்துகளில் கோடிகளில் பணம் விளையாடுகின்றன.

 அவர்களுடன் குழந்தைகள் கழிக்கும் ஒவ்வொரு நிமிடங்களுமே நரகத்துக்குச் சமம்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக கோவா மட்டுமல்லாமல், நாட்டின் முக்கிய நகரங்களில் ‘பீடோ ஃபைலிக்’ நோயாளிகள் சுற்றுலாப் பயணிகளாக சாரை சாரையாக வருகிறார்கள்.

தமிழகத்தில் சென்னை - வடபழனி, சாலிகிராமம், கே.கே.நகர், தி.நகர், கோடம்பாக்கம், போரூர் இங்கெல்லாம் பாலியல் தொழிலைவிட கூடுதல் வருமானம் கொட்டும் தொழிலாக மாறியிருக்கிறது ‘சைல்டு செக்ஸ் டூரிஸம்’.

ஆண்குழந்தைகளும்  பெண் குழந்தைகளும் இந்த தொழிலுக்காக குறி வைத்து கடத்தபடுகிறார்கள்.

இதுபோன்ற பலவற்றை கலந்துரையாடலில் தெரிந்து கொண்டோம். ஒவ்வொரு பெண்களும் சராசரியாக பாலியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.

இது தீர்வாக இல்லாமல் ஒரு தேடலாக முடித்தோம்.

பயணம் தொடரும்...

தமிழ் விக்கிப்பீடியா


இணைய முகவரி
https://ta.m.wikipedia.org/wiki/முதற்_பக்கம்

கூகுள் மற்றும் யாகு போன்ற தேடு தளத்தில் ஏதேனும் ஒரு குறிப்பு கொண்டு தேடினால் முதலில் வருவது விக்கிப்பீடியா தான். ஆனால் பெரும்பாலும் ஆங்கில விக்கிப்பீடியா தான் முதலில் வரும். விக்கிப்பீடியா ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. செப்டம்பர் 2003 அன்று உருவாக்கப்பட்டது தமிழ் விக்கிப்பீடியா.

இந்திய மொழிகளின் விக்கியின் வரிசையில் தமிழ் இரண்டாம் இடமும் தென்னிந்திய மொழிகளின் விக்கியில் தமிழ் முதல் இடத்தையும் பிடித்துள்ளது. இதுவரை தமிழ் விக்கிப்பீடியாவில் 119099  கட்டுரைகள் எழுத்தப்பட்டுள்ளது.

தமிழ் விக்கிப்பீடியா தளத்தில் கூகுள் போன்ற பல வசதிகளை கொண்டுள்ளது. தமிழ் விக்சனரி, தமிழ் விக்கிமூலம் மற்றும் தமிழ் விக்கிமீடியா போன்ற பல்வேறு விதமாக வசதிகளில் இயங்கி வருகிறது.

செய்திகளை தேடுவதற்கான இடத்தில்  தட்டச்சு செய்வதற்கான வசதிகளையும் உள்ளடக்கியது. குறிப்பாக தமிழ் யூனிக்கோடு பாமினி மற்றும் ஓல்டு டைப்ரைட் போன்ற விசைப்பலகைகளும் உண்டு. இதன்மூலம் தமிழில் எளிதாக செய்திகளை சேகரிக்கவும் தேடவும் இயலும்.

தமிழ் விக்கிப்பீடியாவில் ஆதாரங்களை கொண்டு கட்டுரைகள் தொகுத்து எழுதலாம். அதற்கான ஆதாரங்கள் தவறு எனில் கட்டுரைகள் மறுக்கப்படும் மேலும் கட்டுரையை திருத்தும் செயலை யார் வேண்டுமானாலும் செய்யலாம். கூகுள் போன்றே இதற்கும் விக்கிப்பீடியா கணக்கு தேவை. அதனால் மட்டுமே இதனை செய்ய முடியும்.

தமிழ் விக்கிப்பீடியாவில் கணக்கு உருவாக்கிய பிறகு பயனர் பக்கத்தை உருவாக்கலாம். மேலும் ஒரு கட்டுரையின் மூலம் பல கட்டுரைகளை ஒரே இடத்தில் வாசிக்க இயலும். தமிழின் பயன்பாடுகளே தமிழ் விக்கிப்பீடியா தளத்தை முன்னிலை வகிக்க வழி வகுக்கிறது.


தமிழ் விக்கிப்பீடியா கட்டற்ற கலைக்களஞ்சியம் மட்டுமில்லை கற்பனைக்கும் எட்டாத ஒரு முயற்சி. 

கிரண்பேடி



அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற கருத்தை இன்று இருக்கும் பெண்கள் தூள் தூளாக்கி விட்டனர் என்று கூட சொல்லலாம். ஆண்களுக்கு நிகராக பெண்களும் போட்டி போட்டு தனது திறமைகளை நிலைநாட்டி வருகின்றனர். விளையாட்டு முதல் தொழில்நுட்பம் வரை பெண்கள் சாதிக்காத துறையே இல்லை என்று கூறினாலும் மிகையாகாது. அந்த வரிசையில் நம் எல்லாருக்கும் பரீட்சையமான ஒருவரை இன்று, முதல் நபராக அறிமுகப்படுத்த உள்ளேன்.

முதல் பெண் காவலர் என்பதற்கு சிறந்த உதாரணமான விளங்கி வரும் கிரண்பேடி அவர்களே இன்று நமது தளத்தில் பெண் ஆளுமைகள் பக்கத்தில் பார்க்க உள்ள நபர்.


அறிமுகம் படிப்பு 
ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர்.
அரசியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.


பதவிகள்

போக்குவரத்து காவல்துறை, போதைத் தடுப்பு அதிகாரி, பயங்கரவாதத்துக்கு எதிரான வல்லுனர் நிர்வாகி, கால்ஸா பெண்கள் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.


தனித்திறமைகள்

விவாதங்கள் பேச்சுப் போட்டியில் பரிசுகளைத் தட்டிச் சென்றவர். 

டென்னிஸ் - ல் தேசிய மற்றும் ஆசிய டென்னிஸ் போட்டிகளில் சாம்பியன்ஷிப் பெற்றவர்.


விருதுகள்

போதை மருந்து மற்றும் வன்முறைக் கட்டுப்பாடு என்ற தலைப்பில் சமர்பித்த கட்டுரைக்கு இந்தியத் தொழில்நுட்பக் கல்விக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குகியது.

It is always possible என்ற நூலுக்கு  ஜவகர்லால் நேரு பெலோஷிப் விருது வழங்கப்பட்டது.(திகார் சிறையின் குற்றத்தன்மை எப்படி மனிதத் தன்மையாக மாற்றம் பெற்றது என்பதை விவரிக்கிறது இந்நூல்.)

பிலிப்பைன்ஸ் நாட்டின் உயரிய விருதான ராமன் மக்ஸஸாய் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அமெரிக்க வாழ் இந்திய முஸ்லிம்கள் மற்றும் கனடிய முஸ்லிம்களும் இணைந்து ப்ரைடு ஆப் இந்தியா அவார்ட் வழங்கி பெருமைப்படுத்தினர்.


நூல்கள்

37 உண்மை கதைகளை தொகுத்து what went wrong என்ற நூலை எழுதினார்.

சுயசரிதையான I Dare It is Always Possible என்ற நூலையும் எழுதியுள்ளார்.

Narcontrol இதழை தொடங்கினார். ஆசிரியராக பணியாற்றினார். 


அமைப்புகள்

போதைக்கு அடிமையானவர்களின் மீட்சிக்கான மறுவாழ்வு இல்லத்தை உருவாக்கினார்.

போக்குவரத்தில் உதவி செய்யும் பூத்-களை நிறுவினார். 

நவஜோதி என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் போதை ஒழிப்பதற்கான முயற்சியில் ஈடுப்பட்டார்.

நகர மக்களின் குறை நிவர்த்திப் பிரிவு என்ற அமைப்பை ஏற்படுத்தினார் கிரண்.

சிறைக் கைதிகளின் குழந்தைக்களுக்கு கல்வி கற்பிக்க Crime Home Children திட்டத்தையும் சேரியில் வரும் குழந்தைகள் பிச்சைக்காரர்களாகவும் திருடர்களாய் மாறாமல் தடுக்க Gali School கல்விக் கற்பிக்கும் முறையை ஏற்படுத்தினார்.

சிறைத்துறை ஐ. ஜி யாக திகார் சிறையில் நியமிக்கப்பட்டார். அங்கு 9700 கைதிகள் இருந்தனர். 64403 விவகாரங்கள் பரிசீலிக்கப்பட்டு 71 சதவீதம் தீர்வு காணப்பட்டது.


முடிவாக

சிறைக் கைதிகளும் சாதாரண மனிதர்கள்தான். சரியான வழிகாட்டுதலின் மூலம் அவர்களை மாற்ற முடியும் என்றார் தலாய்லாமா. (திபெத்திய ஆன்மிகத் தலைவர்) அவருடைய கருத்துக்கு செயல் வடிவம் தந்தவர் இவரே.

இன்னும் நிறைய உள்ளன. படிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்பட கூடாது என்று முற்று பெறாமல் முடிகிறேன். நமக்கு தெரிந்த கிரண்பேடியின் மறுபக்கத்தில் சிறிதே இங்கு பதிவு செய்து உள்ளேன்.

தேடல் உங்களிடம் வைக்கிறேன்.




Wednesday 2 January 2019

தமிழ்மணம்


இணைய முகவரி
http://tamilmanam.net

கூகுள் போன்ற தேடு தளத்தில் முன்பு ஒரு காலத்தில் தமிழில் தேடுவதற்கான வசதிகள் இருக்காது.ஏன் தமிழ் தட்டச்சு கூட இல்லாத காலமும் உண்டு. ஆனால் இன்று தமிழ் தட்டச்சு செய்ய பல்வேறு வழிமுறைகள் உண்டு. மடிகணினி கணிப்பொறி மற்றும் திறன்பேசி என எல்லாவற்றிலும் தமிழ் வந்து விட்டது. இன்று தேடு தளத்தில் தங்கிலீஷ் - இல் தட்டச்சு செய்தாலும் தமிழை உள்வாங்கி கொள்ளும் அளவிற்கு தளங்கள் இருக்கிறது.

முன்பெல்லாம் விக்கிப்பீடியா போன்ற தளத்தில் மட்டுமே அனைத்து செய்திகளும் கிடைக்கும் என்று இருந்தது. ஆனால் கூகுள் போன்ற நிறுவனங்களில் திறந்தவெளி மென்பொருள்கள் இயங்குதளம் என பல்வேறு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. அதன் வரிசையில் தமிழ்மணம் என்ற இயங்குதளம் உலகில் பல்வேறு பகுதிகளில்  வசிக்கும் தமிழர்களின் தமிழ் ஆர்வலர்களின் பிளாக்கர் என்ற வலைத்தளத்தை ஒரே இடத்தில் பார்க்க இயலும்.

இங்கு சினிமா முதல் கல்வி வரை அனைத்துமே ஒரே பகுதியில் பார்க்க இயலும்.மேலும் இந்த இயங்குதளம் கருத்துரையாளர்கள் பார்வையாளர்களின் எண்ணிக்கை பிடித்த கட்டுரைகளுக்கு ஓட்டு போடும் வசதி என பல்வேறு வகையில் இயங்கி வருகிறது.

உண்மையில் தமிழில் மணத்தை உலகெங்கும் எடுத்து செல்கிறது. இந்த தமிழ்மணம். தமிழ் அவமானம் அல்ல அடையாளம்.

Tuesday 1 January 2019

கே.எஸ்.ஆர்.மகளிர் கல்லூரி

இணைய முகவரி :

சங்கம் முதல் நவீனம் வரை எழுத்தாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். அதனை மாற்றுவதே இந்த இணையத்தின் இலக்கு.

பல்வேறு துறையை சார்ந்த மாணவிகள் இணைந்து எழுதி வரும் இணையம். இங்கு பல்வேறு துறை சார்ந்த அறிவுகளையும் மற்றும் தனித்திறன்களும்  வெளிப்படுத்தி வருகின்றனர். இதுவரை ஆயிரம் கட்டுரைகள் எழுதப்பட்டு உள்ளது.

மேலும் ஒரு இணையத்தளம் பெண்களை கொண்டு இயங்க முடியும் என்பதை கடந்து நம்மை வியப்பில் ஆழ்த்தும் இணையம்.

கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி. இது பெண்களின் உரிமைக் குரல்.

சாதியற்ற சமூகம்



சாதியற்ற சமூகம் கனவில் மட்டுமே...

https://m.facebook.com/story.php?story_fbid=1996184460475775&id=100002527224258

ஒவ்வொரு வரிகளையும் படிக்கும் போது கண்கள் பிரிந்து  விரிந்து மூடினேன்.. இப்படியும் சிலர் இருந்தார்கள் என்று நினைக்கையில் பெண் ஒரு போதைப் பொருளாகவும் காட்சிப் பொருளாகவும் இருந்துள்ளனர். இப்பவும் சில இடங்களில் இருக்கின்றனர் என்று நினைக்கையில் நெஞ்சம் சத்தம் இடாமல் பலத்த மௌத்தால் வெதும்புகிறது..

சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லும் அதே பள்ளியின் தான் சாதிச் சான்றிதழ் கேட்கிறார்கள்.. சாதி என்பது ஒன்றே அதுவே மனிதம். சாதி வெறியர்கள் ஒழிந்தால் மட்டுமே இதற்கு விடியல் உண்டு.. உடம்பில் ஓடும் செங்குருதி நிறம் சிவப்பு தானே தவிர அதில் சாதி இல்லை.. அப்படி பார்த்தால் நாம் உண்ணும் உணவில் இருந்து அது ஜீரணமாகி வெளியேறும் மலம் முதல் எல்லாம் யாரை நீங்கள் தீண்டத்தாகதவர்கள் என்று நினைத்தீர்களோ அவர்களே அதனை உருவாக்கி சுத்தம் செய்கின்றனர். அதில் எப்படி சாதியை கண்டுப்பிடிப்பீர்கள்?

முடிக்க மனமில்லாமல் புதிரோடு செல்கிறேன்.தேடலின் தொடக்கம் தங்களிடம் ஒப்படைக்கிறேன்..

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...