வரைபடம் : சஞ்சுனா தேவி.
ஒரு பெண்ணின் காற்சிலம்புக்கு அவ்வளவு சக்தி உண்டு. ஆம் இன்று வரை யாராலும் மறு(றை)க்க முடியாது அந்த பேதையின் கோப திவலைகள். கண்ணகி என்றால் இன்றும் நினைவு வருகிறது அல்லவா.
அந்த ஒரு சிலம்பு
ஒரு நாட்டை
ஒரு அரசை
ஒரு குலத்தை
ஒரு காலத்தை
ஒரு கற்பை
ஒரு கோபத்தை
ஒரு அநியாயத்தை
ஒரு தவறான நீதியை
ஒரு சொல்
ஒரு செயல்
ஒரு அழிவு
ஒரு வேள்வி
ஒரு வரலாற்றை ஏற்படுத்தியது என்றால் நம்மால் ஏற்க முடியாமல் இருக்க முடியுமா? முத்தா பவளமா என்பதில் ஆரம்பித்து சங்க காலத்தில் பெரிய காப்பியமாக பேசப்பட்ட ஒரு பாடுப்பொருள் அல்லவா அந்த மங்கையின் காற்சிலம்பு...!!
ஒரு ஆண் எத்தனை பெண்களுடன் இருந்தாலும் அவன் யோக்கியன் தான். அன்றைய காலத்தில் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்று தானே வாழ்க்கையை கடந்து வந்தனர். இன்றும் அந்த மாதிரி பெண்கள் உண்டு. கிராம பகுதிகளில் மட்டும். தன் கணவன் வேறு ஒருவருளுடன் தொடர்பு இருந்தும் தன் கணவனின் உயிருக்காக மதுரையை எறித்தாள் என்றால் எந்த அளவுக்கு ஒரு பெண்ணின் காதல் ஆழமாக இருந்தது என்று புரிகிறது அல்லவா..
அது ஒரு வரலாற்று குறிப்பு. ஆனாலும் இன்றைய தினத்தில் காற்சிலம்பு தான் நவீன உலகில் கொலுசு என்று அழைக்கப்படுகிறது. பெண்களின் கால் கொலுசு இன்றும் பல இளைஞர்களுக்கு விருப்பம் அதிகம் தான். அப்பாவுக்கு தன் மகள் கொலுசு போட்டால் மகிழ்ச்சியாம். காதலன் தன் காதலிக்கு கொலுசு மாட்டி விடுவதால் மகிழ்ச்சியாம். கணவனுக்கு முதலிரவில் தன் மனைவி கொலுசு சத்தத்தின் இசை மகிழ்ச்சியாம். தாத்தாவுக்கு தன் பேத்தியின் கொலுசு அணிந்த கால்களால் மார்ப்பை உதைக்கும் போது மகிழ்ச்சியாம். அண்ணனுக்கு தனது தங்கைக்கு கொலுசு பரிசாக கொடுப்பது மகிழ்ச்சியாம். தம்பிக்கு அக்காவின் கொலுசை மறைத்து வைப்பதால் மகிழ்ச்சியாம். இப்படி பல மகிழ்ச்சியை மட்டும் பார்த்து இரசிக்கும் அதே கொலுசுக்கு இன்னொரு பக்கமும் உண்டு. ஆம் அது அவளுக்கு ஒரு சிறையும் கூட தான்.
ஒரு பெண்ணின் காற்சிலம்பு இன்பத்தை மட்டும் அல்ல. அப்பெண்ணின் எண்ணங்களையும் தெரியப்படுத்தும். படிக்கும் பெண்களின் கால் கொலுசு சில நேரங்களில் கட்டிப்போடப் படுக்கிறது. அதுவே அவள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் போது அதுவே அவளின் மௌனத்தின் சப்தமாக ஒலிக்கிறது.
பெண்களின் கால் கொலுசுக்கு மயங்காத ஆண்களும் இல்லை. அதனை சிறையாக பூட்டி வைக்கும் பெண்களும் இல்லை. பறக்கின்ற வயதில் எதற்கு சிறை..?
காலில் வைத்த மருதாணி சிவக்கலாம். ஆனால் ஒரு போதும் அந்த சிவப்பு பெண்க ளின் உதிரமாக வந்துவிடக் கூடாது...விடியலை நோக்கிய பயணத்தில் ஒரு வழிப்போக்கனாக கடந்துவிட மனமில்லை...
கேள்விகளுக்கு விடைத் தேடும் பயணம் தொடரும்.........,
மௌனத்தின் சப்தமாக ஒலிக்கிறது.
ReplyDeleteஅருமையான வரி.
நன்றி ஆலன்.
Deleteகால் கொலுசு ல இப்படி ஒரு கதையா அருமை அக்கா.
ReplyDeleteஆம் வித்யா. மகிழ்ச்சி
DeleteNice one sis
ReplyDeleteநன்றி சகோ
Deleteசெல்ல கொலுசின் சிணுங்கல் அறிந்து சேவை செய்வேன்.
ReplyDeleteAvalin kolusil theriyum aval manathu.
உண்மையே அக்கா
DeleteMass ka😎
ReplyDeleteநன்றி டா
Delete👌👌👌
ReplyDelete🙂🥰
Deleteஅருமையான பதிவு அக்கா 👌பெண் என்பவள் தெய்வத்திற்கு சமமானவர்கள்
ReplyDeleteதங்க கால்களுக்கு
ReplyDeleteவெள்ளி விலங்கு...
உண்மையே. தங்களின் ஹைக்கூ அழகு நந்தித்தா.
DeleteNice one
ReplyDeleteகேள்விகளுக்கு விடை தேடும் தங்களின் பயணம் தொடரட்டும்
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் ஐயா.
Deleteஉக்கிரம் தெறிக்கும் பதிவு
ReplyDeleteமகிழ்ச்சி நன்றி சகோ.
DeleteSpr Akka the feel of your lines can be felt while reading it Ka❣️
ReplyDeleteபெரு மகிழ்ச்சி டா.நன்றி
Deletearumaiyana pathivuu🔥
ReplyDeleteநன்றி ரம்யா
Delete