Sunday 12 July 2020

கள்ளிக்காட்டு நாயகனுக்காக..







தேனீ காற்றில் மிதந்து வரும் ஈரப்பதம் நீர்...

கள்ளிக்காட்டில் தீடிரென எழுந்த முத்தமிழ் ஊற்று நீர்...

கருவாச்சி காவியத்தில் பெண்மையை தீட்டிய ஓவியர் நீர்..

வில்லோடு நிலவை கட்டி போட்டவர் நீர்...

தண்ணீர் தேசத்தில் காதலை பிணைத்தவர் நீர்...

சிற்பியாக உம்மை நீயே செதுக்கும்  கலைஞன் நீர் ...

தமிழை ஆற்றுப்படையாக்கிய தலைமகன் நீர்...


உமது கற்பனையில் வானத்தையே தொட்டவர் நீர்...

உமது ஜன்னலின் வழியே எம்மையும் அதிசயிக்க வைத்தவர் நீர்.. 

சிகரத்தை நோக்கிய உமது பயணத்திற்கு பாகன் நீர்..

தமிழுக்கும் நிறமுண்டு என்பதை உரக்க சொல்லியவர் நீர்...

மௌன சப்தத்தின் வழியே கலையுணர்வை ஊட்டிய அமுதன் நீர்...

மூன்றாம் உலகப்போரில் நாடும் உழவும் சந்திக்கும் பேரிடரை தெரிவித்தவர் நீர்..

பெய்யென பெய்து விடுகிற மழைத்துளியின் காதல் மேகம் நீர்.. 

ஒரு கிராமத்துப் பறவையாய் பிறந்து சில கடல்களை கடந்து பறக்கும் கழுகு நீர்...

கொஞ்சம் தேனீரில் வானத்தை இரசிக்க வைத்தவர் நீர்...

இதனால் சகலமானவர்களுக்கும் வாழ்க்கையை புரிய வைத்தவர் நீர்...

ஓர் போர்களத்தில் இரண்டு பூக்களின் தேனை ஒன்றாக விற்பனை செய்தவர் நீர்...

உமது குளத்தில் கல் எறிந்தவர்களையும் திரும்பி பார்க்க வைத்தவர் நீர்...

காவி நிறத்திலும் காதலை மிளிர செய்வர் நீர்...

ரத்த தானத்தில் தமிழ் மரபை வெளிப்படுத்திய கோமகன் நீர்...

கொடிமரத்தின் வேர்களை போல உறுதியானவர் நீர்...

கல்வெட்டுகளில் நீங்காத காவியத் தலைவன்  நீர்..

கவிராஜன் கதையில் பாரதியை மீண்டெழ செய்த  பக்தன் நீர்...

திருத்தி எழுதிய தீர்ப்புகளுக்கு உமது போனாவில் உயிர் கொடுத்தவர் நீர்...

வைகறை மேகங்களால் தத்துவத்தை பொழிந்தவர் நீர்...

பழைய பனை ஓலைகளில் தமிழ்த்தாய் வீட்டை மேய்ந்தவர் நீர்...
 
கேள்விகளால் வேள்வியை உண்டாக்கிய தீக்கதிர் நீர்...

நேற்று போட்ட கோலத்தை இன்று வரை ரசிக்க வைக்கும் மனத்தின் ஊடுருவி நீர்..

எல்லா நதியிலும் மிதந்து வரும் தமிழ் ஓடத்தின் படகோட்டி நீர்..

வடுகபட்டியில் இருந்து வால்காவுக்கு தமிழை தூது விடுத்தவர் நீர்.. 

பாற்கடலின் தமிழ் சிப்பியில் வைரம் பதித்த முத்து நீர்...

இதுவரை நான் கோர்க்க முயன்றது உமது எழுதுகோலின் உதிரத்தை சேமித்த நூல்களே ஆகும்...

என்னுள் தமிழ் தாக்கத்தை பெரிதாக ஏற்படுத்திய மாமனிதர் நீர்..

என்னுள் இருக்கும் பெண்மையை உணர செய்தவரும் நீர்..

இயற்கையை இப்படியும் ரசிக்கலாம் என்று கற்பித்தவர் நீர்..

தமிழே தழைக்கும் தமிழர்களையும் வளர்க்கும் என்பதை மெய்பித்தர் நீர்..

உம்மை நேரில் கண்டதும் ஆசி பெற்றதும் நான் அடைந்த பெருபேறு..

பல நேரங்களில் உமது பேனாவின் உதிரத்தை தாங்கும் வெள்ளைத்தாளாக இருந்திருக்கலாமே என்று எண்ணாதா நாட்களே இல்லை..

இசையுடன் வரிகளை நுகரும்போதே இவ்வரிகள் உம்முடையது தான் என்பதை ஆணித்தரமாக  உணர்வேன்..




ஆயிரம் தான் கவியை  நீர் எழுதினாலும் உமது காந்தக்குரலில் மெல்லிசையோடு கேட்கையில் பிறந்த குழந்தையை போல இன்புறுவேன்..

உமது தோழிமார் கதையில் இன்றும் வாழ்கிறேன்..

ஏன்னடியம்மா குத்த வச்ச கவிகளில் பெண்ணின் உதிரத்தின் வலியை உணர்ந்தேன்..

அழைப்பாயா என்பதில் ஒரு தாயின் ஏக்கத்தின் ஸ்பரிசத்தை உணர்ந்தேன்..

எவனோ ஒருவன் வாசித்த இருட்டில் இருந்து நான் யாசித்த தருணங்களும் உண்டு..

கண் தூங்காமல் வாடும் நாட்களில் பூங்காற்றை நீ தூதுவிட்டதில் உறங்கிய நாட்களும் உண்டு..

சில வேளைகளில் நல்லை அல்லை என்பதையும் என்னை அறிய செய்தவர் நீர்..

இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.. நான் உமது மீது வைத்துள்ள அன்பும் நன்றியும் வானில் இருக்கும் நட்சத்திரங்களையும் விட எண்ணற்றவை.. 

உமக்கு தமிழ் ஆசான் கலைஞர் என்பது போல எனக்கு நீங்கள் தான் கவியரசன்..

ஒவ்வொரு நாளுமே நீர் இன்புற்று உடல் நலத்துடனும் வளத்துடனும் பல்லாண்டு தமிழ் போல வீரமாக வாழ வேண்டும் ஐயா..வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா..

பேரன்பு கடலில் இருந்து இனிய அகவை தின நல்வாழ்த்துகள் ஐயா.. வைரமும் கருப்பு தான் அதுபோல எமது வைரமுத்து நீரும் விலைமதிக்க முடியாத முத்து தான் ஐயா.. கபிலன் மற்றும் மதன் கார்க்கி என்ற இரண்டு சிப்பிகளுக்கு நடுவே இருக்கும் வைரம் பதித்த முத்து என்றுமே அழகு தான்.


பின் குறிப்பு: இந்த அரிய ஒரு சந்திப்பை ஏற்படுத்தி கொடுத்த எனது அன்பு அண்ணன் கேசவன் அவர்களுக்கு எனது பூத உடல் மண்ணை சேரும் வரை நன்றியுடன் நினைவு கொள்ளும்.. 



24 comments:

Swanthitha Murugan said...

No words could describe, how wow he is!! Well said vaishu😍

Unknown said...

Fabulous Dr ❣️✨🔥

ManoRana(Kuppa Vandi) said...

Vairathitkana vairamana pathivu. Valthukkal

Monisha said...

அருமை

@** ❣️❣️வாழ்க தமிழ்❣️❣️ **@ said...

Nice akka .... wonderful ...all the best your next journey...

YUVARANI said...

Fabulous 🤝👆👌👌

Vidhya Chandran said...

அருமையான வரிகளைக் கொண்ட கவிதை .... மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது

Ramya manoharan said...

😍😍🔥🔥🔥

வைசாலி செல்வம் said...

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.

வைசாலி செல்வம் said...

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.

வைசாலி செல்வம் said...

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.

வைசாலி செல்வம் said...

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.

வைசாலி செல்வம் said...

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.

வைசாலி செல்வம் said...

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.

இரா.பூபாலன் said...

வைரமுத்துவின் பிறந்தநாளுக்கு கவிதைப் படையல்... சிறப்பு வைஷாலி.

வாழ்த்துகள்

இரா.பூபாலன்
98422 75662

www.raboobalan.blogspot.com

வே.நடனசபாபதி said...

கவிப்பேரரசின் படைப்புகளைக் கொண்டே அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து பாடியது அருமை. அவருக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! அருமையான தங்களது பதிவுக்கு பாராட்டுகள்!

Anu patricia said...

Awesome Akka🔥

வைசாலி செல்வம் said...

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் ஐயா.

வைசாலி செல்வம் said...

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் ஐயா. மகிழ்ச்சி

வைசாலி செல்வம் said...

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் தங்கையே.

Unknown said...

What a lines Vaishy... These lines say how u inspired by him... No one can replace his place dr... My favourite writer... My hearty wishes to Vairamuthu Sir...

வைசாலி செல்வம் said...

ஆம் உண்மையே.. நான் அவர் மீது வைத்துள்ள அன்பு என்பதை விட பற்றுக்கு ஈடு ஏதுமில்லை. தங்களின் வருகைக்குப் கருத்துரைக்கும் நன்றிகள் சகோ.

Nandhitha said...

கள்ளிகாட்டு நாயகன் மீது நீங்கள் வைத்துள்ள பற்று மற்றும் அவரின் எழுத்துகள் மீது கொண்டுள்ள அலாதி பிரியம் தங்களின் வரிகள் வாயிலாக அறியலாம்... மிக அருமையான வாழ்து மடல்...அக்கா...

வைசாலி செல்வம் said...

நன்றி டா. பேரின்ப மகிழ்ச்சி.

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...