Monday, 20 July 2020

என்ன வாழ்க்கை இது...



நமது கையில் இருக்கும் விரல்களை போல தான் நம் வாழ்க்கையும் இருக்கும் என்பதை என்றேனும் கவனித்தது உண்டா நாம் ? என்னது கைவிரல் போல வாழ்க்கையா?  பொதுவா கைரேகை வைச்சு தானா வாழ்க்கையை சொல்வாங்க இவங்க என்னடா கைவிரல் சொல்றாங்களே?  என்று ஆச்சரியமாகவும் நமக்கு இருக்க குட்டி மூளையை கசக்கி யோசிக்கவும் வேண்டாம். நானே சொல்றேன், ஆம் கைவிரல் போல தான் நம் வாழ்க்கை.

ஒரு பழமொழி இருக்கும் விரல்கள் பத்தும் மூலதனம் அதை கொஞ்சம் ஆழமாக புரிந்து கொள்ள முயற்சி செய்யலாமே. விரல்கள் இல்லையென்றால் நம்மால் இயங்க முடியாது அல்லவா ? நம் வாழ்க்கைக்கு மூலதனமே விரல்கள் தான்.

இன்னொரு வழக்கமொழி இருக்கும் நமது கையில் இருக்கும் விரல்கள் கூட ஒரே மாதிரி இல்லை அதில் கூட ஏற்ற இறக்கங்கள் இருக்கிறது அல்லவா ? அப்புறம் எப்படி நம் வாழ்க்கையை மற்ற ஒருவருடன் ஒப்பிட்டு பார்த்து வாழ முடியும் என்பதை நாம் சொல்லிவிட்டு கடந்து போகிறோம். ஆனால் வாழ்க்கையில் பயன்படுத்துகிறோமா என்று பார்த்தால் இல்லையே. வடிவேல் சொல்ற மாதிரி பேச்சு பேச்சாத தான் இருக்கணும் என்ற வசனங்கள் தான் நினைவுக்கு வரும். 

இன்னும் நம்மில் சிலர், அட நானே பல நேரங்களில் மனச்சோர்வு என்னை சூழ்ந்து கொண்டிருக்கும் போது என்னடா வாழ்க்கை இது. நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது. ச்சை இதுக்கு நாம் ஒரு பறவையா பிறந்து இருக்கலாம் எங்கயாச்சும் தூரமா பறந்து போயிருக்கலாம் என்று வாழ்க்கையை நொந்து கொண்ட பல தருணங்களும் உண்டு. 

அம்மா சாப்பாடு சமைச்சு போட்டாங்க அதுல கொஞ்சம் உப்பு காரம் வேலைய காட்டுச்சுன்னா கூட நாம சொல்லுவோம் இதுக்கு நான் வெளில சாப்பிட்டு வந்துருப்பேன் என்று அவர்களை கடிந்து கொண்டிருப்போம். தங்கும் வீட்டில் வசதிகள் இல்லையென்றாலும் விரக்தி அடைந்து கொள்வோம். 

இது எல்லாமே மனிதரின் இயல்பு தான். ஆனால் ஒரு நிமிடம் நம்மை சுற்றி நாம் பார்த்தால் நாம் இந்த நொடியில் வாழும் வாழ்க்கை எவ்வளவு அழகானது பாதுகாப்பானது ஆரோக்கியமானது பயனுள்ளது என்று தெரியும். ஆம் நமக்கு கிடைத்த உடை உணவு இருப்பிடம் வாழ்க்கை கூட பலருக்கும் கிடைப்பதில்லை. அன்றாட வாழ்க்கையில் ஒரு நொடி கடத்த கூட வழி தெரியாமல் வலியுடன் பயணிக்கும் மனிதர்களே இங்கு அதிகம். 

வாழ்க்கையில் பலவீனமாக நினைக்கும் நொடியில் ஒருமுறை உங்களை சுற்றி பார்த்து பெருமூச்சு விட்டு பாருங்கள். என்னடா வாழ்க்கை இது என்பதற்கு விடை கிடைக்கும்.

என்னப்பா உனக்கு வாழ்க்கை பிடிக்கலையா  புரியலையா ? நான் ஏதோ சொல்றேன் நீ ஏதோ புரிஞ்சுக்கற முடிவு நீயே எடுப்பா..!! தேடுங்கள் கிடைக்கும்.. 


கேள்விகளுக்கு விடைத் தேடும் பயணம் தொடரும்....

15 comments:

  1. வழி தெரியாமல் வலியுடன் பயணிக்கும் மனிதர்களே அதிகம்.. அருமையான பதிவு

    ReplyDelete
  2. nice dr.keep it up...quick to be a best poet in tamil industry....

    ReplyDelete
  3. Enada ..life nu nenaichathundu....ipdi kuda aduthukalanu soli kuduthu erukinga ...spr

    ReplyDelete