Friday, 17 July 2020

நீயாக இருக்க ஆசையில்லையா...

வரைப்படம் : கமலி சு.சு


நம்மில் பலர், வாழ்ந்தா இவரை போல வாழ வேண்டும். இப்படி ஆடம்பரமாக இருக்க வேண்டும். 
ஒவ்வொரு கணமும் பயனுள்ளதாக வாழ வேண்டும். 
மனிதர்களுடன் இணைந்து வாழ வேண்டும். 
சில மனிதர்களை விட்டு விலகி வாழ வேண்டும். 
சிலரை ஏமாற்றி வாழ வேண்டும்.
சிலரை நம்பியே வாழ வேண்டும்.
சிலரை நம்பாமல் வாழ வேண்டும்.
சிலருடன் மகிழ்ந்து வாழ வேண்டும்.
சிலருடன் இணைந்து வாழ வேண்டும்.
சமுதாயத்தில் அந்தஸ்து உடன் வாழ வேண்டும்.
பெயருடன் புகழுடன் நலத்துடன் இப்படி பல விதங்களில் வாழ வேண்டும் என்று தானே நினைக்கின்றோம்..

ஆனால் என்றாவது ஒருநாள் நாம் நாமாக, இயல்பாக,சுதந்திரமாக, உற்சாகமாக நமக்கா வாழ்ந்து இருந்திருக்கிறோமோ ? 

இல்லையே..!! நாலு பேரு நாலு விதமா சொல்லுவாங்க. கேலி செய்வாங்க. நம்மை ஒதுக்கி வைப்பாங்க. இப்படி நம்மை பலர் நினைத்து வாழ்கிறார்களோ இல்லையோ. கணமும் தவறாமல் பிறரை பற்றி நினைத்து பயந்து, வியந்து, ஒலிந்து, அழுந்து, கோபமடைைந்து, நிம்மதி இழந்து வாழாமலே வாழ்ந்து முடிக்கின்றோம். 

ஒரு முறை தான் பிறப்பு.
ஒரு முறை தான் இறப்பு.
ஒரு முறை தான் வாழ்க்கை.
ஒரு முறை துணிந்தால் நீ நீயாக ஒரு முறை வாழ்ந்து விடலாம். இதனை குறள் வழியில் கீழே காண்போம்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. ( குறள் - 467 )



ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கியபின் அது பற்றி எண்ணிக் கொள்வோம் என்பது குற்றம்.

வாழ்ந்திடு உனக்கான வாழ்வை.. உனக்காக நீயே வாழ்ந்திடு. அதிகம் படி, தெரிந்து கொள், கவனமாக  இரு, முயற்சி செய், பணிவாக இரு, தெளிவாக இரு, அன்பாக வாழு. ஆனால் நீ நீயாக இரு..


கேள்விகளுக்கு விடைத் தேடும் பயணம் தொடரும்..



16 comments:

  1. getting good vibes 💫 from you akka💜

    ReplyDelete
  2. Kandipa ka...na kuda ..sila visayathula ..Apdi nenaipen...but apdi erutha enoda valkaiya avanga decided pandra mari eruthuchu so I planned not to think like that..👍💐

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி உன் வாழ்க்கை உன் எண்ணத்தில் தான் வித்யா. வாழ்த்துகள் தங்கையே.

      Delete