Wednesday, 2 January 2019

தமிழ்மணம்


இணைய முகவரி
http://tamilmanam.net

கூகுள் போன்ற தேடு தளத்தில் முன்பு ஒரு காலத்தில் தமிழில் தேடுவதற்கான வசதிகள் இருக்காது.ஏன் தமிழ் தட்டச்சு கூட இல்லாத காலமும் உண்டு. ஆனால் இன்று தமிழ் தட்டச்சு செய்ய பல்வேறு வழிமுறைகள் உண்டு. மடிகணினி கணிப்பொறி மற்றும் திறன்பேசி என எல்லாவற்றிலும் தமிழ் வந்து விட்டது. இன்று தேடு தளத்தில் தங்கிலீஷ் - இல் தட்டச்சு செய்தாலும் தமிழை உள்வாங்கி கொள்ளும் அளவிற்கு தளங்கள் இருக்கிறது.

முன்பெல்லாம் விக்கிப்பீடியா போன்ற தளத்தில் மட்டுமே அனைத்து செய்திகளும் கிடைக்கும் என்று இருந்தது. ஆனால் கூகுள் போன்ற நிறுவனங்களில் திறந்தவெளி மென்பொருள்கள் இயங்குதளம் என பல்வேறு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. அதன் வரிசையில் தமிழ்மணம் என்ற இயங்குதளம் உலகில் பல்வேறு பகுதிகளில்  வசிக்கும் தமிழர்களின் தமிழ் ஆர்வலர்களின் பிளாக்கர் என்ற வலைத்தளத்தை ஒரே இடத்தில் பார்க்க இயலும்.

இங்கு சினிமா முதல் கல்வி வரை அனைத்துமே ஒரே பகுதியில் பார்க்க இயலும்.மேலும் இந்த இயங்குதளம் கருத்துரையாளர்கள் பார்வையாளர்களின் எண்ணிக்கை பிடித்த கட்டுரைகளுக்கு ஓட்டு போடும் வசதி என பல்வேறு வகையில் இயங்கி வருகிறது.

உண்மையில் தமிழில் மணத்தை உலகெங்கும் எடுத்து செல்கிறது. இந்த தமிழ்மணம். தமிழ் அவமானம் அல்ல அடையாளம்.

Tuesday, 1 January 2019

கே.எஸ்.ஆர்.மகளிர் கல்லூரி

இணைய முகவரி :

சங்கம் முதல் நவீனம் வரை எழுத்தாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். அதனை மாற்றுவதே இந்த இணையத்தின் இலக்கு.

பல்வேறு துறையை சார்ந்த மாணவிகள் இணைந்து எழுதி வரும் இணையம். இங்கு பல்வேறு துறை சார்ந்த அறிவுகளையும் மற்றும் தனித்திறன்களும்  வெளிப்படுத்தி வருகின்றனர். இதுவரை ஆயிரம் கட்டுரைகள் எழுதப்பட்டு உள்ளது.

மேலும் ஒரு இணையத்தளம் பெண்களை கொண்டு இயங்க முடியும் என்பதை கடந்து நம்மை வியப்பில் ஆழ்த்தும் இணையம்.

கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி. இது பெண்களின் உரிமைக் குரல்.

சாதியற்ற சமூகம்



சாதியற்ற சமூகம் கனவில் மட்டுமே...

https://m.facebook.com/story.php?story_fbid=1996184460475775&id=100002527224258

ஒவ்வொரு வரிகளையும் படிக்கும் போது கண்கள் பிரிந்து  விரிந்து மூடினேன்.. இப்படியும் சிலர் இருந்தார்கள் என்று நினைக்கையில் பெண் ஒரு போதைப் பொருளாகவும் காட்சிப் பொருளாகவும் இருந்துள்ளனர். இப்பவும் சில இடங்களில் இருக்கின்றனர் என்று நினைக்கையில் நெஞ்சம் சத்தம் இடாமல் பலத்த மௌத்தால் வெதும்புகிறது..

சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லும் அதே பள்ளியின் தான் சாதிச் சான்றிதழ் கேட்கிறார்கள்.. சாதி என்பது ஒன்றே அதுவே மனிதம். சாதி வெறியர்கள் ஒழிந்தால் மட்டுமே இதற்கு விடியல் உண்டு.. உடம்பில் ஓடும் செங்குருதி நிறம் சிவப்பு தானே தவிர அதில் சாதி இல்லை.. அப்படி பார்த்தால் நாம் உண்ணும் உணவில் இருந்து அது ஜீரணமாகி வெளியேறும் மலம் முதல் எல்லாம் யாரை நீங்கள் தீண்டத்தாகதவர்கள் என்று நினைத்தீர்களோ அவர்களே அதனை உருவாக்கி சுத்தம் செய்கின்றனர். அதில் எப்படி சாதியை கண்டுப்பிடிப்பீர்கள்?

முடிக்க மனமில்லாமல் புதிரோடு செல்கிறேன்.தேடலின் தொடக்கம் தங்களிடம் ஒப்படைக்கிறேன்..

Monday, 31 December 2018

வேர்களைத்தேடி


ஒவ்வொரு வருடங்களும் ஏதோ ஒரு சிலகொள்கையுடன் ஆரம்பிக்கிறோம். தினம்தினம் ஒரு புதிய நாள் தான் ஆனால் புத்தாண்டு அன்றும் பிறந்தநாள் அன்றும் ஏதோ இனம்புரியாத மகிழ்ச்சியும் ஆர்வமும் ஏற்படும். அன்றுமுதல் நாம் எதையாவது ஒன்றை கடைப்பிடித்து வரவேண்டும்.நானும் அப்படியே தொடங்குகிறேன்.  சரியாக மூன்று ஆண்டுகள் கழித்து எனது வலைத்தளத்தை இன்றுமுதல் புதுப்பிக்க உள்ளேன். இன்றுமுதல் எனது பக்கத்தில் நாளொரு இணையம், பெண் ஆளுமைகள் மற்றும் நூல் விமர்சனம் ஆகிய இரண்டும் வாரத்தில் ஒருமுறை மட்டும் அறிமுகம் செய்ய உள்ளேன்.

அதன் தொடக்கமாக இன்று வேர்களைத்தேடி என்ற இணையதளத்தை பற்றி பார்க்கலாம்.

இணைய முகவரி http://www.gunathamizh.com/p/2.html?m=1

தமிழ் இலக்கியத்தை படித்தால் நீயே மனிதன். ஆம் இலக்கியத்தை படிக்க படிக்க தேடல் உருவாகும். அதற்கு இனங்க உருவாக்கப்பட்ட தளம் இது. சங்கம் முதல் நவீனம் வரை ஒரே தளத்தில் யாவருக்கும் எளிதில் புரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அறிவுத் தேடல் வாழ்க்கை தேடல் சமூக விழிப்புணர்வு அறிவியல் தொழில்நுட்பம் வணிகம் மற்றும் பிற.

இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளடக்கிய இணையத்தளம். போட்டித்தேர்வு மற்றும் வாழ்க்கை தேர்வுக்கு சிறந்த இணையத்தளம்.

வேர்களைத்தேடி. மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை..

நன்றி.. அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்...

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...