Showing posts with label நாளொரு இணையம். Show all posts
Showing posts with label நாளொரு இணையம். Show all posts

Friday 4 January 2019

செல்லினம்




இணைய முகவரி 
https://sellinam.com

கணினி மற்றும் மடிக்கணினி போன்றவைகளில் தட்டச்சு செய்வது மிகவும் கடினமான ஒரு சவாலாக இருந்தது முன்பு ஒரு காலத்தில். ஆனால் இன்று நம் அனைவரின் கைகளிலும் திறன்பேசி வந்துவிட்டது. அதன் பயன்பாடு மிகவும் அதிகரித்து வருகிறது. இன்னும் சொல்ல போனால் ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டி போட்டு தனது செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வரிசையில் இன்று நாம் பார்க்க இருக்கும் இணையம் தமிழுக்காக உருவாக்கப்பட்ட தமிழ் தட்டச்சு செயலி பக்கம்.

சீன நாட்டில் மூன்று விசைப்பலகை கொண்டு தட்டச்சு செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் நாம் ஒரு விசைப்பலகையில் தட்டச்சு செய்வது ஒரு பெரிய சாதனையாக நினைக்கிறோம். அதிலும் தமிழில் தட்டச்சு செய்வது ஒரு போருக்கு ஒத்திகை பார்ப்பது போல இருக்கும். அதனை எல்லாம் சுக்குநூறாக மாற்றியது என்றும் சொல்லலாம்.  இதில் ஒரு பெருமை ஒன்று உண்டு கர்வம் என்று கூட சொல்லலாம். தமிழுக்காக உருவாக்கப்பட்ட இந்த செயலி தமிழரான முத்து நெடுமாறன் அவர்களால் உருவாக்கப்பட்டது என்பது பெருமைக்குரியது. 

2003ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட செல்லினம். அதே ஆண்டு ஆகஸ்டு 14ஆம் நாள் மலேசியாவில் மெக்சிஸ் செல்பேசி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியில் செல்லினத்தின் செயல்முறை பலருக்கும் செய்து காட்டப்பட்டது.இன்று அதிக திறன்பேசிகளில் தரவிறக்கம் செய்யப்பட்டு பயனபடுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


வெல்க கணித்தமிழ்.



Thursday 3 January 2019

தமிழ் விக்கிப்பீடியா


இணைய முகவரி
https://ta.m.wikipedia.org/wiki/முதற்_பக்கம்

கூகுள் மற்றும் யாகு போன்ற தேடு தளத்தில் ஏதேனும் ஒரு குறிப்பு கொண்டு தேடினால் முதலில் வருவது விக்கிப்பீடியா தான். ஆனால் பெரும்பாலும் ஆங்கில விக்கிப்பீடியா தான் முதலில் வரும். விக்கிப்பீடியா ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. செப்டம்பர் 2003 அன்று உருவாக்கப்பட்டது தமிழ் விக்கிப்பீடியா.

இந்திய மொழிகளின் விக்கியின் வரிசையில் தமிழ் இரண்டாம் இடமும் தென்னிந்திய மொழிகளின் விக்கியில் தமிழ் முதல் இடத்தையும் பிடித்துள்ளது. இதுவரை தமிழ் விக்கிப்பீடியாவில் 119099  கட்டுரைகள் எழுத்தப்பட்டுள்ளது.

தமிழ் விக்கிப்பீடியா தளத்தில் கூகுள் போன்ற பல வசதிகளை கொண்டுள்ளது. தமிழ் விக்சனரி, தமிழ் விக்கிமூலம் மற்றும் தமிழ் விக்கிமீடியா போன்ற பல்வேறு விதமாக வசதிகளில் இயங்கி வருகிறது.

செய்திகளை தேடுவதற்கான இடத்தில்  தட்டச்சு செய்வதற்கான வசதிகளையும் உள்ளடக்கியது. குறிப்பாக தமிழ் யூனிக்கோடு பாமினி மற்றும் ஓல்டு டைப்ரைட் போன்ற விசைப்பலகைகளும் உண்டு. இதன்மூலம் தமிழில் எளிதாக செய்திகளை சேகரிக்கவும் தேடவும் இயலும்.

தமிழ் விக்கிப்பீடியாவில் ஆதாரங்களை கொண்டு கட்டுரைகள் தொகுத்து எழுதலாம். அதற்கான ஆதாரங்கள் தவறு எனில் கட்டுரைகள் மறுக்கப்படும் மேலும் கட்டுரையை திருத்தும் செயலை யார் வேண்டுமானாலும் செய்யலாம். கூகுள் போன்றே இதற்கும் விக்கிப்பீடியா கணக்கு தேவை. அதனால் மட்டுமே இதனை செய்ய முடியும்.

தமிழ் விக்கிப்பீடியாவில் கணக்கு உருவாக்கிய பிறகு பயனர் பக்கத்தை உருவாக்கலாம். மேலும் ஒரு கட்டுரையின் மூலம் பல கட்டுரைகளை ஒரே இடத்தில் வாசிக்க இயலும். தமிழின் பயன்பாடுகளே தமிழ் விக்கிப்பீடியா தளத்தை முன்னிலை வகிக்க வழி வகுக்கிறது.


தமிழ் விக்கிப்பீடியா கட்டற்ற கலைக்களஞ்சியம் மட்டுமில்லை கற்பனைக்கும் எட்டாத ஒரு முயற்சி. 

Wednesday 2 January 2019

தமிழ்மணம்


இணைய முகவரி
http://tamilmanam.net

கூகுள் போன்ற தேடு தளத்தில் முன்பு ஒரு காலத்தில் தமிழில் தேடுவதற்கான வசதிகள் இருக்காது.ஏன் தமிழ் தட்டச்சு கூட இல்லாத காலமும் உண்டு. ஆனால் இன்று தமிழ் தட்டச்சு செய்ய பல்வேறு வழிமுறைகள் உண்டு. மடிகணினி கணிப்பொறி மற்றும் திறன்பேசி என எல்லாவற்றிலும் தமிழ் வந்து விட்டது. இன்று தேடு தளத்தில் தங்கிலீஷ் - இல் தட்டச்சு செய்தாலும் தமிழை உள்வாங்கி கொள்ளும் அளவிற்கு தளங்கள் இருக்கிறது.

முன்பெல்லாம் விக்கிப்பீடியா போன்ற தளத்தில் மட்டுமே அனைத்து செய்திகளும் கிடைக்கும் என்று இருந்தது. ஆனால் கூகுள் போன்ற நிறுவனங்களில் திறந்தவெளி மென்பொருள்கள் இயங்குதளம் என பல்வேறு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. அதன் வரிசையில் தமிழ்மணம் என்ற இயங்குதளம் உலகில் பல்வேறு பகுதிகளில்  வசிக்கும் தமிழர்களின் தமிழ் ஆர்வலர்களின் பிளாக்கர் என்ற வலைத்தளத்தை ஒரே இடத்தில் பார்க்க இயலும்.

இங்கு சினிமா முதல் கல்வி வரை அனைத்துமே ஒரே பகுதியில் பார்க்க இயலும்.மேலும் இந்த இயங்குதளம் கருத்துரையாளர்கள் பார்வையாளர்களின் எண்ணிக்கை பிடித்த கட்டுரைகளுக்கு ஓட்டு போடும் வசதி என பல்வேறு வகையில் இயங்கி வருகிறது.

உண்மையில் தமிழில் மணத்தை உலகெங்கும் எடுத்து செல்கிறது. இந்த தமிழ்மணம். தமிழ் அவமானம் அல்ல அடையாளம்.

Tuesday 1 January 2019

கே.எஸ்.ஆர்.மகளிர் கல்லூரி

இணைய முகவரி :

சங்கம் முதல் நவீனம் வரை எழுத்தாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். அதனை மாற்றுவதே இந்த இணையத்தின் இலக்கு.

பல்வேறு துறையை சார்ந்த மாணவிகள் இணைந்து எழுதி வரும் இணையம். இங்கு பல்வேறு துறை சார்ந்த அறிவுகளையும் மற்றும் தனித்திறன்களும்  வெளிப்படுத்தி வருகின்றனர். இதுவரை ஆயிரம் கட்டுரைகள் எழுதப்பட்டு உள்ளது.

மேலும் ஒரு இணையத்தளம் பெண்களை கொண்டு இயங்க முடியும் என்பதை கடந்து நம்மை வியப்பில் ஆழ்த்தும் இணையம்.

கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி. இது பெண்களின் உரிமைக் குரல்.

Monday 31 December 2018

வேர்களைத்தேடி


ஒவ்வொரு வருடங்களும் ஏதோ ஒரு சிலகொள்கையுடன் ஆரம்பிக்கிறோம். தினம்தினம் ஒரு புதிய நாள் தான் ஆனால் புத்தாண்டு அன்றும் பிறந்தநாள் அன்றும் ஏதோ இனம்புரியாத மகிழ்ச்சியும் ஆர்வமும் ஏற்படும். அன்றுமுதல் நாம் எதையாவது ஒன்றை கடைப்பிடித்து வரவேண்டும்.நானும் அப்படியே தொடங்குகிறேன்.  சரியாக மூன்று ஆண்டுகள் கழித்து எனது வலைத்தளத்தை இன்றுமுதல் புதுப்பிக்க உள்ளேன். இன்றுமுதல் எனது பக்கத்தில் நாளொரு இணையம், பெண் ஆளுமைகள் மற்றும் நூல் விமர்சனம் ஆகிய இரண்டும் வாரத்தில் ஒருமுறை மட்டும் அறிமுகம் செய்ய உள்ளேன்.

அதன் தொடக்கமாக இன்று வேர்களைத்தேடி என்ற இணையதளத்தை பற்றி பார்க்கலாம்.

இணைய முகவரி http://www.gunathamizh.com/p/2.html?m=1

தமிழ் இலக்கியத்தை படித்தால் நீயே மனிதன். ஆம் இலக்கியத்தை படிக்க படிக்க தேடல் உருவாகும். அதற்கு இனங்க உருவாக்கப்பட்ட தளம் இது. சங்கம் முதல் நவீனம் வரை ஒரே தளத்தில் யாவருக்கும் எளிதில் புரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அறிவுத் தேடல் வாழ்க்கை தேடல் சமூக விழிப்புணர்வு அறிவியல் தொழில்நுட்பம் வணிகம் மற்றும் பிற.

இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளடக்கிய இணையத்தளம். போட்டித்தேர்வு மற்றும் வாழ்க்கை தேர்வுக்கு சிறந்த இணையத்தளம்.

வேர்களைத்தேடி. மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை..

நன்றி.. அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்...

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...