ஒவ்வொரு வருடங்களும் ஏதோ ஒரு சிலகொள்கையுடன் ஆரம்பிக்கிறோம். தினம்தினம் ஒரு புதிய நாள் தான் ஆனால் புத்தாண்டு அன்றும் பிறந்தநாள் அன்றும் ஏதோ இனம்புரியாத மகிழ்ச்சியும் ஆர்வமும் ஏற்படும். அன்றுமுதல் நாம் எதையாவது ஒன்றை கடைப்பிடித்து வரவேண்டும்.நானும் அப்படியே தொடங்குகிறேன். சரியாக மூன்று ஆண்டுகள் கழித்து எனது வலைத்தளத்தை இன்றுமுதல் புதுப்பிக்க உள்ளேன். இன்றுமுதல் எனது பக்கத்தில் நாளொரு இணையம், பெண் ஆளுமைகள் மற்றும் நூல் விமர்சனம் ஆகிய இரண்டும் வாரத்தில் ஒருமுறை மட்டும் அறிமுகம் செய்ய உள்ளேன்.
அதன் தொடக்கமாக இன்று வேர்களைத்தேடி என்ற இணையதளத்தை பற்றி பார்க்கலாம்.
இணைய முகவரி http://www.gunathamizh.com/p/2.html?m=1
தமிழ் இலக்கியத்தை படித்தால் நீயே மனிதன். ஆம் இலக்கியத்தை படிக்க படிக்க தேடல் உருவாகும். அதற்கு இனங்க உருவாக்கப்பட்ட தளம் இது. சங்கம் முதல் நவீனம் வரை ஒரே தளத்தில் யாவருக்கும் எளிதில் புரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அறிவுத் தேடல் வாழ்க்கை தேடல் சமூக விழிப்புணர்வு அறிவியல் தொழில்நுட்பம் வணிகம் மற்றும் பிற.
இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளடக்கிய இணையத்தளம். போட்டித்தேர்வு மற்றும் வாழ்க்கை தேர்வுக்கு சிறந்த இணையத்தளம்.
வேர்களைத்தேடி. மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை..
நன்றி.. அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்...