Thursday, 9 July 2020

புறம் பேசுங்கள்...

என்னடா பொதுவாக புறம் பேசாதே அப்படின்னு தானே சொல்லுவாங்க. இது கொஞ்சம் புதுசா இருக்கே அப்படின்னு யோசிக்கறீங்களா..? அப்ப இந்த பதிவு உங்களுக்கு தான். 

புறம் பேசுவது எளிதானது தான். அதனால் தன்னை அறிந்தவனும் உண்டு தன்னிலை இழந்தவனும் உண்டு. தன்னை அறிந்தவன் புறம் பேச மாட்டான். தன்னிலை மறந்தவன் புறத்தையும் சரியாக பேச மட்டான். தன்னிலையே தெரியாதவன் எப்படி பிறரை மட்டும் சரியாக புரிந்து இருப்பான்.? 

புறம் பேசுவர்களை விட்டு தள்ளி இருங்கள் ஆனால் அவர்கள் பேசிய வார்த்தைகளை அசைபோடுங்கள். நம்மை விடவும் நம்மை சுற்றி இருப்பவர்களே நமது பலமும் பலவீனமும் பற்றி சரியாக தெரிந்து வைத்திருப்பார்கள்.

புறம் பேசுவது இழிவாக இருக்கலாம் ஆனால் அது இன்னொருவருக்கு அதுவே திருப்பு முனையாக கூட இருக்கலாம். காரணம் வார்த்தையில் வாழ்வும் காலமும் பிறக்கும். 

புறம் பேசுங்கள் ஆனால் தற்பெருமை மட்டும் பேசாதீர்கள். அது இதைவிட கொடியது. புறம் பேசுபவன் கூட தன்னிலை மறந்தவன். ஆனால் தற்பெருமை பேசுபவன் தன்னிலை அறிந்த முட்டாள். 

இப்ப நீங்களே முடிவு பண்ணிருங்க புறம் பேச போறீங்களா ?  இல்ல தற்பெருமையா ?

21 comments:

Anonymous said...

really superb...

வைசாலி செல்வம் said...

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.

YUVARANI said...

Super

Unknown said...

உண்மையான வரிகள் 👌💯

Unknown said...

Nice topic da kutty

Unknown said...

அருமை கண்மணி

Janani Eswaran said...

அருமை 👌 👌

Monisha said...

அருமை

Ramya manoharan said...

best🌸

Anu patricia said...

Super akka

said...

Nice

shobana said...

Super

வைசாலி செல்வம் said...

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.

வைசாலி செல்வம் said...

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.

வைசாலி செல்வம் said...

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.

வைசாலி செல்வம் said...

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.

வைசாலி செல்வம் said...

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.

வைசாலி செல்வம் said...

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.

வைசாலி செல்வம் said...

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.

Unknown said...

Nice

வைசாலி செல்வம் said...

நன்றி

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...