Sunday 26 July 2020

எனது வாழ்வில் எமது கலாம்...



வரைபடம் : எஸ். சௌந்தர்யா 



காலமும் போற்றும் கலாம் அவர்கள். இன்றும் நினைவு இருக்கிறது நான் ஆறாம் வகுப்புப் படிக்கும் போது பள்ளி நேரம் முடிந்து வீடுத் திரும்பும் போது சகாக்கள் உடன் விளையாடிக் கொண்டு சாலையை கடக்கும் போது உம்மையும் சேர்ந்தே கடந்தேன். பெருந்துறையில் ஒரு பள்ளியின் ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்ள வந்தீர்கள். நன்கு நினைவு இருக்கிறது. நீங்கள் மகிழுந்தில் போகும் போது உங்களுக்கு மக்களோடு மாட்கள் போல இருந்து நானும் டாட்டா காட்டினேன். அப்போது உங்களின் கையை மட்டும் பார்த்தேன்.  அப்படியே நாட்கள் ஓடியது. மீண்டும் தங்களை சந்திக்க  இரண்டு வாய்ப்புகள் கிடைத்தது ஈரோட்டின் மாபெரும் விழாவான புத்தகத் திருவிழாவில் கடல் போல திரண்டக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த தங்களை பார்க்க முடியாமல் தவறவிட்டேன்.

நான் கல்லூரி வாழ்க்கையை துவங்கும் போது மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரிக்கு வந்தீர்கள். ஆனால் அங்கு வேறு கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி இல்லை என்று சொல்லி விட்டார்கள் மீண்டும் தங்களை பார்க்க முடியவில்லை. ஆனால் நான் மனம் தளரவில்லை. நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது முடிவுச் செய்தேன். நான் நிச்சயம் ஒரு அறக்கட்டளை உருவாக்குவேன் அதில் நிறைய குழந்தைகள் பெரியவர்கள் என அனைவருக்கும் கல்வியும் பாதுகாப்பும் கொடுப்பேன் அந்த அறக்கட்டளையை தங்கள் கைகளால் திறப்பேன் என்று எனக்கு நானே சத்திய பிரமானம் எடுத்துக் கொண்டேன். அந்த சத்தியம் நினைவுக்கு வந்ததால் நான் மனம் தளரவில்லை.

அதை நோக்கியே படித்துக் கொண்டே பயணித்தேன். ஒவ்வொரு நாளும் உ ம்மை நினைக்காமலும் உமது அந்த பத்துக் கட்டளைகளை நினைக்கமாலும் இன்று வரை தூங்கி எழுவது தவறியது இல்லை. நீங்கள் அடிக்கடி சொல்லுவீர்கள் முடியும் வரை முயற்சி செய், கனவு காணுங்கள், உலகிற்கு உன்னை அறிமுகம் செய், உன் கையெழுத்து ஆட்டோகிராப் ஆவதில் தான் உன் வெற்றி, காலையில் நீ குறித்த நேரத்தில் எழுவது தான் முதல் வெற்றி என்று இவைகளை நினைக்காத நாட்கள் இன்று வரை என் நாட்குறிப்பில் தவறியது இல்லை.

முதலாமாண்டு முடித்து விட்டு இரண்டாம் ஆண்டு செல்லும் போது எனது பக்கத்து வீட்டுத் தம்பியிடம் எனது தங்கைகளிடம் கூறிக் கொண்டு இருந்தேன். தங்களின் பத்துக் கட்டளைகள் பற்றி. இந்த விடுமுறையில் நாம் ஐயாவின் கட்டளையை முன்னெடுத்து செய்ய வேண்டும் என்று பேசிவிட்டு வந்தேன். எப்போதும் போல அம்மாவுடன் விளையாடிக் கொண்டு டிவி அறையில் படுத்துக் கொண்டு இருந்தேன் தொலைபேசியில் முகத்தை புதைத்தப்படி. அம்மா சேனல்களை மாற்றி கொண்டு இருந்தார் எதார்த்தமாக ஒரு செய்தி அதை என்னிடம் சொன்னார் அம்மா என்னை கோபமடைவதற்கு தான் இப்படி சொல்கிறார் என்று சண்டைப் போடத் திரும்புக்கிறேன். பார்த்த அந்த நொடி இன்றும் கணத்துக் கொண்டிருக்கிறது.கண்களின் ஓரம் சொல்ல முடியாத அளவிற்கு ஏமாற்றமும் வருத்தமும் கண்ணீரும் தான் வருகிறது.

அப்போது நான் என்னையே நொந்துக் கொண்டு தங்களை ஏசினேன். ஆம் எப்படி என்னை ஏமாற்றலாம்?எதற்கு இப்படி ஒரு தண்டனை எனக்கு கொடுத்தீர்கள்? இன்னும் கொஞ்சம் பொருத்து இருக்கக் கூடாதா?  அவ்வளவு வேகமா?  என்னையும் அழைத்துச் சென்று இருக்கலாமே ? என்று அன்பின் உச்சத்தால் தங்கள் மீது முதன் முதலாக கோபமடைந்தேன். ஆம் இன்று வரை எனது எல்லா நாட்களும் உமது முகத்தை பார்த்தே விடிகிறது.  எனது அறையில் உமது படத்தை பார்த்தப் பிறகே கண்களை விழிக்கிறேன் இன்று வரை. அந்தச் செய்தி என்ன என்று என்னால் மனதால் எழுத்துக்களால் கூட சொல்லவோ வெளிப்படுத்தவோ முடியவில்லை. நீங்கள் என்னை விட்டு வெகுதூரம் சென்று விட்டீர்களே. 

மனதில் ஆயிரம் ஆசைகளோடு இருந்தேன் அந்த செய்தியைப் பார்த்த அந்தகணம் நான் என்னிலையை இழந்தேன். மௌனமாக முதன் முதலாக சப்தம் போட்டு குமுறி குமுறி அழுந்தேன். தம்மை மண்ணில் விதைக்கும் வரை செய்தியை மாற்றவில்லை. இரவு பகல் தொடர்ந்த பார்த்தேன். உணவு கூட உட்கொள்ளவில்லை அந்த மூன்று நாட்கள். அதன் பிறகு பல நாட்கள் உறங்கக் கூடவில்லை. நீங்கள் மறைவதற்கு முன்பு தான் நான் நினைத்தேன் தங்களை எப்படியாவது சிறப்பு விருந்தினராக எமது கல்லூரிக்கு அழைக்க வேண்டும் தங்களின் பாதங்களில் சரணடைந்து ஆசிப் பெற வேண்டும் என்று நினைத்தேன். அத்தனையும் பாறைகள் மேல் மோதிய அலைகளை போல் முட்டி மோதி பிய்த்து சென்றதுப் போன்ற தங்களின் இறப்புச் செய்தி என்னை வாட்டி வதைத்து விட்டது. அன்று அழுந்தேன் எனது அறக்கட்டளையை உமது கைகளால் திறக்க நினைத்தேன் இன்று அது இயலாமல் போனது என்றும், இப்படி நடக்கும் என்று தெரிந்தால் உ ம்மை பார்த்து பேசியிருப்பேனே என்று நினைத்து நினைத்து இன்று வரை நொந்துக் கொள்வேன். அன்று தான் வலித்ததுத் தெரிந்தது வாய்ப்புகளை தவற விட்டத்தின் வலி. அத்தனை வாய்ப்புகள் கிடைத்தும் உ ம்மை சந்திக்க முடியாமல் தவற விட்டு விட்டேன் நான் பாக்கியம் இல்லாதவள். ஈரோடு புத்தகத் திருவிழாவில் தங்களின் ஒலிக்கோப்புகளை போடும் போதெல்லாம் அழுவேன் உடல் நடுங்கும் எனது ஆசானிடம் கேட்டேன் இன்று எனது கலாம் இருந்து இருந்தால் நம் கல்லூரிக்கு நான் அவரை சிறப்பு விருந்தினராக அழைத்தால் வந்து இருப்பார் தானே என்று கணத்த மனத்துடன் கேட்டேன் அவரும் ஆம் என்று கூறி என்னை தேற்றினார்.

 என்னால் முடியும் வரை தங்களின் கட்டளையும் கனவும் ஆன மரங்கள் நடுவதையும் அதனை அன்பளிப்பாக வழங்குவதையும் இன்று வரை பின்பற்றி வருகின்றேன். என்னுடைய வாழ்வின் முக்கியமான தினங்களில் தங்களை நினைத்துக் கொண்டு மரங்களை நட்டு வளர்த்து வருகின்றேன். என்னால் முடியும் வரை என்னை சுற்றி இருப்பவர்களின் பசியை போக்கியும் கல்வியை புகட்டியும் வருகின்றேன். தங்களின் சிந்தனைகளை மனதிலும் தங்களின பெயரை எனது உடலிலும் சுமப்பதில் பேரின்பம் அடைகிறேன் ஐயா. 

இன்றுடன் ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டது தாங்கள் மண்ணில் விதைக்கப்பட்டு. ஆனால் நீங்கள் இன்றும் என் அருகில் தான் இருக்கிறீர்கள் ஐயா. இன்று வரை நான் உமது நினைவிடத்திற்கு வரவில்லை. வரவும் மாட்டேன். அப்படி வந்தால் அது நிச்சயம் உமது கனவில் ஒன்று நிறைவு செய்தேன் என்று சொல்ல மட்டுமே வருவேன்.அதுவரை எத்தனை வாய்ப்புகள் கிடைத்தாலும் நான் வர மாட்டேன்.எனது பெற்றோர்கள் உமது நினைவிடத்திற்கு வந்தனர் அங்கு இருந்து எனக்கு ஒன்று கொண்டு வந்தார்கள் அதை இன்றும் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். அது வேறெதுவும் இல்லை. நீ விதைக்கப்பட்ட இடத்தின் மண்ணை  எனக்கு கொண்டு வந்துக் கொடுத்தனர் அதை வைத்து இருக்கிறேன். நான் கட்டப் போகும் எனது அறக்கட்டளையின் பூமி பூஜையில் நிச்சயம் அந்த மண்ணை சேர்ப்பேன். அதற்காக பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். எனது உடல் மண்ணுக்குள் போவதற்குள் நிச்சயம் நான் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுவேன் ஐயா.

குருவிற்கு நிகரில்லை. குருவிற்கு நிறைவில்லை. 
எம் குருவே உமது பாதங்களை தொட்டு வணங்குகிறேன். நான் சிறந்த சீடனாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் உம்மை நாளும் சுமக்கும் சுமைதாங்கிய என்றும் இருப்பேன் என் உயிர் இருக்கும் வரை. எதைச் சொல்லி இப்பதிவை நிறைவு செய்வேன் என்று தெரியவில்லை. 

விடைத்தெரியாமலே கண்ணீருடன் நம்பிக்கையுடன் முடித்துக் கடந்துச் செல்கிறேன் ஐயா. 
My dearest kalam ji missing u lots & love u so much to the edge of sky.. need ur blessings & wishes kalam ji.. 

கேள்விகளுக்கு விடைத் தேடும் பயணம் தொடரும்..

7 comments:

Janani Eswaran said...

🔥🔥🔥♥️ அவர் உடல் மட்டுமே பிரிந்துள்ளது...!! கவலை வேண்டாம்♥️

Vidhya Chandran said...

Everyone missing kalam sir, eventhough your words touching the heart

Ramya manoharan said...

💜💜💜

Anu patricia said...

❣️

வைசாலி செல்வம் said...

ஆம் அக்கா.

வைசாலி செல்வம் said...

அன்பும் நன்றியும் டா.

வைசாலி செல்வம் said...

🙂

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...