Saturday, 2 January 2016

ஒன்று முதல் பத்து வரை..!!


ஐந்து ஐந்து..!!


1. பஞ்சவர்ணம் என்பது கருப்பு,சிவப்பு,பச்சை,மஞ்சள் மற்றும் வெள்ளை.

2.பஞ்சலோகம் என்பது பொன்,வெள்ளி,செம்பு,ஈயம் மற்றும் இரும்பு.


3.பஞ்ச வாசம் என்பது ஏலம்,லவங்கம்,கற்பூரம்,திப்பிலி மற்றும் ஜாதிக்காய்.

4.பஞ்ச ரத்தினம் என்பது பொன்,சுகந்தி,மரகதம்,மாணிக்கம் மற்றும் முத்து.

5.பஞ்ச பூதம் என்பது ஆகாயம்,நீர்,காற்று,நெருப்பு மற்றும் நிலம்.

6.பஞ்ச பாண்டவர்கள் என்பவர்கள் அர்ஜீனன்,பீமன்,நகுலன்,தர்மன் மற்றும் சகாதேவன்.


ஒன்பது ஒன்பது..!!

1.பைசா கோபுரம் ஒன்பது மாடிகள் கொண்டது.

2.ஆஸ்கார் சிலை ஒன்பது பவுண்டு (4 கிலோ) எடை கொண்டது.

3.ஆக்யஸ் எனும் தேளுக்கு ஒன்பது கொடுக்குகள் உள்ளன.

4.செவ்வாய் கிரகத்தில் ஆண்டுக்கு ஒன்பது மாதங்கள் பகலாக இருக்கும்.

5.சூரிய ஒளி பூமியை வந்தடைய ஒன்பது நிமிடங்கள் ஆகும்.

6.ஈரான்-ஈராக் போர் ஒன்பது ஆண்டுகள் நடைப்பெற்றன.


ஒன்று முதல் பத்து வரை..!!

1.ஒரு செல் உயிரினம் அமீபா.

2.இரண்டு தலைநகர் கொண்டது ஜம்மு-காஷ்மீர்.

3.மூன்று வயிறுள்ள விலங்கு ஒட்டகம்.

4.நான்கு வேதங்கள் ரிக்,யசுர்,சாமம் மற்றும் அதர்வணம்.

5.ஐந்து வைட்டமின் அடங்கிய பழம் வாழைப்பழம்.

6.ஆறு கால்கள் கொண்டவை பூச்சியினம்.

7.ஏழு குன்றுகளின் நகரம் எனப்படுவது ரோம்.

8.எட்டு நூல்களின் தொகுப்பு எட்டுத் தொகை.

9.ஒன்பது கோள்களை உடையது சூரிய குடும்பம்.

10.பத்து கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டது பைபிள்.


நன்றி..!!

அருணா பப்ளிகேஷன்ஸ்-சென்னை..

Wednesday, 30 December 2015

சொற்கள் அல்ல; தூண்டுகோல்;

       சொற்கள் அல்ல;தூண்டுகோல்;


வெற்றி சுலபமல்ல; தோல்வி நிலையல்ல.

முடியாது என்பது மூடநம்பிக்கை!!
முடியுமா என்பது அவநம்பிக்கை!!
முடியும் என்பதே தன்னம்பிக்கை..!!

சூல்நிலையை காரணம் காட்டதே ..!!
சூல்நிலையை நீயே உருவாக்கு..!!

இந்த உலகம் ஏன் இப்படி இருக்கிறது என்று,
பார்ப்பவர்களை விட, ஏன் இப்படி இருக்க கூடாது என்று,நினைப்பவர்கள் தான் வெற்றி பெறுகிறார்கள்..!!

முடியும் வரை முயற்சி செய்யுங்கள்,
உங்களால் முடியும் வரை அல்ல..!!
நீங்கள் நினைத்த செயல் முடியும் வரை..!!

உங்களுடைய இலட்சியம் மலையைவிட உயர்வாக
இருந்து உங்கள் ஈடுபாடு கடலைவிட ஆழமாக இருந்தால் உங்கள் எதிர்காலம் சூரியனை விட பிரகாசமாக இருக்கும்..!!

விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவது இல்லை..!!

விதியை மதி ஆராய்ச்சி செய்யலாம் ..!!
ஆட்சி செய்ய முடியாது..!!

எழுந்தால் விருட்சமாய் எழு..!!
விழுந்தால் அருவியாய் விழு..!!
ஓடினால் நதியாய் ஓடு..!!
நின்றால் மலையாய் நில்..!!
வாழ்ந்தால் வரலாறாய் வாழ்..!!

மற்றவர்களைப் போல் நாம் இல்லையே
என்று எண்ணாதீர்கள்..!!
உங்களைப்போல் இல்லையே என்று மற்றவர்களை
நினைக்க வையுங்கள்..!!

ஒரே குறிக்கோள்
அளவற்ற ஊக்கம்
சோர்வற்ற முயற்சி
தளர்வற்ற நெஞ்சுருதி
சளைக்காத உழைப்பு
சாதிக்க கற்றுக் கொள்..!!
வெற்றி நிச்சயம்..!!

காரணம் சொல்பவர்கள் வெற்றி பெறுவதில்லை
வெற்றி பெறுபவர்கள் காரணம் சொல்வதில்லை..!!

வெற்றி வரும்போது அதற்கு தலையில் இடம்
கொடுக்கதே..!!
தோல்வி வரும்போது அதற்கு இதற்கு இடம்
கொடுக்கதே..!!

தலை குனிந்து படிப்பது,
தலை நிமிர்ந்து நிற்கவே..!!

கனவுகள் மெய்ப்பட வேண்டும்..!!

இன்னும் நிறைய உள்ளன அதை அடுக்கிக் கொண்டே செல்லலாம்..ஒவ்வொருவருமே தனது வாழ்க்கைப் பயணத்தை தேடு பொருள் இல்லாமல் நகர்த்திக் கொண்டு இருக்கிறார்கள் ..ஒரு சிலர் வாழ்க்கையை  புரிதலோடு நகர்த்துக்கின்றன..தடுமாற்றம் அடையும் போது இது போன்ற சொற்கள் ஒரு துணிச்சலை தருக்கின்றன என்பது எனது கருத்து..நான் இது போன்ற கருத்தால் தான் என் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கியுள்ளேன்..நாம் சென்றடைய வேண்டிய தூரம் அதிகம் ..ஆனால் சில சந்தர்ப்பக் காரணத்தால் தளர்ந்து செல்கிறோம்."முடியாது என்பது முயலாலது மட்டுமே" .என் வாழ்வில் நான் மிகவும் முக்கியமாக கருத்தில் கொண்ட சொற்கள்  அண்மையில் விதைக்கப்பட்ட அப்துல் கலாம் ஐயாவின் கோட்பாடுகளும் என் பார்வில் நான் காணும் எனது தமிழ் ஆசிரியர் முனைவர்.இரா.குணசீலன் ஐயாவின் வார்த்தைகளும்  தான் எனது வேத வாக்குகள்..
 









      



அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...