Friday, 19 February 2016

தமிழால் சொல்ல முடியும் எண்களின் பெயர்..!!



==தமிழில் கீழ்வாய் எண்கள்==



* 15/16 = 0.9375 = முக்காலே மூன்று வீசம்

* 3/4 = 0.75 = முக்கால்

* 1/2 = 0.5 = அரை

* 1/4 = 0.25 = கால்

* 1/5 = 0.2 = நால்மா/நான்மா

* 3/16 = 0.1875 = மூன்று வீசம்

* 3/20 = 0.15 = மூன்றுமா

* 1/8 = 0.125 = அரைக்கால்

* 1/10 = 0.1 = இருமா

* 1/16 = 0.0625 = வீசம்

* 1/20 = 0.05 = மா

* 3/64 = 0.046875 = முக்கால் வீசம்

* 3/80 = 0.0375 = முக்காணி

* 1/32 = 0.03125 = அரை வீசம்

* 1/40 = 0.025 = அரை மா

* 1/64 = 0.015625 = கால் வீசம்

* 1/80 = 0.0125 = காணி

* 3/320 = 0.009375 = அரைக்காணி முந்திரி

* 1/160 = 0.00625 = அரைக் காணி

* 1/320 = 0.003125 = முந்திரி

* 3/1280 = 0.00234375 = கீழ் முக்கால்

* 1/640 = 0.0015625 = கீழ் அரை

* 1/1280 = 0.00078125 = கீழ்க் கால்

* 1/1600 = 0.000625 = கீழ் நால்மா

* 3/5020 = 0.000597609 = கீழ் மூன்று வீசம்

* 1/2560 =0.000390625 = கீழ் அரைக்கால்

* 1/3200 = 0.0003125 = கீழ் இருமா

* 1/5120 = 0.000195312= கீழ் மாகாணி

* 1/6400 = 0.00015625 = கீழ் மா

* 3/25600 = 0.000117187 = கீழ் முக்காணி

* 1/12800 = 0.000078125 = கீழ் அரைமா

* 1/25600 = 0.000039062 = கீழ்க்காணி

* 1/51200 = 0.000019531 = கீழ் அரைக்காணி

* 1/102400 = 0.000009765 = கீழ் முந்திரி}

*1/2,150,400= இம்மி

*1/23,654,400= மும்மி

*1/165,580,800= அணு

*1/1,490,227,200= குணம்

*1/7,451,136,000= பந்தம்

*1/44,706,816,000= பாகம்

*1/312,947,712,000= விந்தம்

*1/5,320,111,104,000= நாகவிந்தம்

*1/74,481,555,456,000= சிந்தை

*1/1,489,631,109,120,000= கதிர்முனை

*1/59,585,244,364,800,000= குரல்வளைப்பிடி

*1/3,575,114,661,888,000,000= வெள்ளம்

*1/357,511,466,188,800,000,000= நுண்மணி

*1/2,323,824,530,227,200,000,000= தேர்த்துகள்

ஊழல் குறைவான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 76-வது இடம்..!!


உலக நாடுகளின் ஊழல் நிலவரம் குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்னும் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.இதில் அந்த நாடுகளின் ஊழலற்ற நிர்வாகம் ,ஊழலுக்கு எதிரான நடவடிக்கையின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படுகிறது.

2015-ம் ஆண்டு இந்த தரவரிசைப் பட்டியல் கணக்கீட்டு 168 நாடுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.இதில் 2014-ம் ஆண்டையப் போலவே ஐரோப்பிய நாடான டென்மார்க் ஊழலற்ற நாடாக முதலிடத்தையும்,பின்லாந்துக்கு 2-வது இடமும்,சுவிடனுக்கு 3-வது இடமும் கிடைத்தன.


ஆப்பிரிக்க நாடான சோமாலியாவும்,ஆசியா நாடான வடகொரியாவும் ஊழல் மலிந்த நாடுகள் பட்டியலில் கடைசி 2 இடங்களைப் பிடித்தன.இந்த பட்டியலில்இந்தியாவுக்கு 76-வது இடம் கிடைத்தது.2014-ம் ஆண்டு 85-வது இடத்தில் இருந்த இந்தியா 9 இடங்கள் முன்னேறி இருக்கிறது.


2014-ல் இருந்ததை விட இந்தியாவில் 2015-ல் ஊழல் சற்று குறைந்து காணப்படுகிறது.எனினும் இதில் இந்தியா பெற்றுள்ள மொத்த மதிப்பு 2014-ம் ஆண்டைப் போலவே 100-க்கு 38 ஆக இருக்கிறது.


இது குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் தலைவர் ஜோஸ் உகாஸ் கூறுகையில் ஆசிய நாடுகளில் இந்தியா, இலங்கையைப் பொறுத்தவரை ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தலைவர்கள் அறிவித்த எதிர்ப்புகள் அவ்வளவாக நிறைவேறவில்லை.

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2015-ல் 64 நாடுகள் ஊழலை கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் கண்டுள்ளன.53 நாடுகள் இதில் பின்தங்கின.மற்ற நாடுகளின் நிலையில் ஏற்ற இறக்கம் எதுவும் இல்லை என்றார். 

Image result for ஊழல்


வரலாற்று நாயகன் சார்லஸ் டார்வின்..!!




சார்லஸ் டார்வின் இவர் பரிணாம வளர்ச்சி சித்தாந்தத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர்.
இவர் 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ம் நாள் இங்கிலாந்து நகரில் பிறந்தார்.
இவரது தாத்தாவும்  தந்தையும் மருத்துவர்களாக  இருந்ததால் இவரையும் மருத்துவம் படிக்க எடின்பர்க் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தார் இவரது தந்தை.
இவர் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சை  பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.அப்போதெல்லாம் மயக்க மருந்து இன்றி அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதால் அந்தக் குழந்தை பட்ட வேதனையைக் கண்டும் கேட்டும் மருத்துவத்தின் மீது இருந்த ஆர்வத்தை இழந்தார்.
இது இவரது தந்தைக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அடுத்த இவர் கேம்ஃப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இறையியல் பட்டம் பெற்றார்.
அப்போது அதே பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் பேராசிரியராக இருந்த ஜான் ஸ்டீஃபன் ஹேன்ஸ்லோ என்பவரிடம் நெருங்கிய நட்பு கொண்டார் டார்வின்.
அவர் மூலமாக கேப்டன் ராபர்ட்  என்பவரின் நட்பு இவருக்கு கிடைத்தது.எனவே ராபர்ட் தலைமையில் தென் அமெரிக்க கடலோரப் பகுதியில் ஆய்வு செய்ய செல்லவிருந்த HMS  BEAGLE என் கப்பலில் இவருடன் டார்வினும் 1831-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி தனது ஆய்வு பயணத்தைத் தொடங்கினர்.
ஐந்து ஆண்டுகள் நீடித்த அந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த அந்த பயணம் தான் பரிணாம வளர்ச்சி சித்தாந்தம் உருவாவதற்கு அடிப்படை காரணமாக அமைந்தது.இந்த பயணத்தின்  போது அந்தக் கப்பல் உலகையே ஒரு வலம் வந்தது.
பல இடரும்,இன்னல்கறும் நிறைந்த அந்த பயணத்தில் தான் சேகரித்த விபரங்களையும் ஆய்வுகளையும் வைத்து அவர்  THE VOYAGE OF THE BEAGLE என்ற புத்தகத்தை வெளிட்டார்.
சிறிது நாட்கள் கழித்து பல ஆய்வுக்குப் பிறகு 1859-ம் ஆண்டு உலகையே வியப்பில் ஆழ்த்திய இயற்கையில் உயிரினங்களின் தோற்றம் என்ற புத்தகத்தை வெளிட்டார்.
அடுத்ததாக மனித பரம்பரை 1871-ம் ஆண்டு வெளியானது.இந்த நூலில் மனிதனின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி மிக விரிவாக எழுதியுள்ளார்.
இந்நூல் உராங்குட்டன்,சிம்பான்சி,கொரில்லா போன்ற குரங்குகளுக்கு உள்ள நான்கு கைகளும் ரோமமயமாய் உள்ள ஒரு மிருக பாரம்பரியத்திலிருந்து சீர் பெற்று தோன்றியவனே மனிதன் எனத் தகுந்த ஆதாரங்களுடன் காட்டுகிறார்.
இவருக்கு எழுதுவதில் அதிக ஆர்வம் இல்லை என்றாலும் மொத்ததில் பதினெட்டு நூல்களை எழுதியுள்ளார்.
அவர் கடைசியாக எழுதிய நூல் மனிதனும் மிருகங்களும் தம் உணர்ச்சிகளை வெளியிடும் விதம் என்பதாகும்.
மனிதகுல மூதாதையரின் முகவரியை உலகிற்குக் காட்டிய முன்னோடி அறிவு ஒளியான சார்லஸ் டார்வின் 1882-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி அடங்கிப் போனார்.  










முகநூலில் இருக்கும் பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தும் சைபர் குற்றவாளிகள்..!!



சமீபத்தில் பிரபல ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரை ஒன்று தீவிர பேஸ்புக் பயனர்களை சற்றே கலக்கத்தில் ஆழ்த்தில் உள்ளது.குறிப்பாக பேஸ்புக்கில் நொடிக்கு நொடி தம்படம்(செல்ஃபி) பதிவேற்றும் பெண்களுக்கு எச்சரிக்கையாகவே அமைந்துள்ளது.முகநூலில் இருக்கும் மிகப்பெரிய குறைப்பாடு யாருடையக் கணக்கில் இருந்தும் யார் வேண்டுமானாலும் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.இந்த ஒரு விஷசயத்தை பயன்படுத்திக் கொண்டுள்ள சைபர் குற்றவாளிகள் ஆபாச வலைத்தளங்களை பிரபலப்படுத்த முகநூலில் இருக்கும் புகைப்படத்தை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.இதற்காக இயங்கும் குழுக்கள் முகநூலில் இருக்கும் அழகானப் பெண்களின் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்துக் கொண்டு அவர்களை தன்னோடு தொடர்புடைய மற்றொரு குழுவிற்கு அனுப்புகிறது.

அந்தக் குழு குறிப்பட்ட அந்த பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக மார்ப் செய்து தங்களின் ஆபாச வலைத்தளங்களுக்கு பயன்படுத்திக்  கொள்கிறது.இப்படி சிக்கும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகம் என்பது பல்வேறு ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.இது தொடர்பாக சைபர் குற்றங்கள் நிபுணர் கிஸ்லே சவுத்ரி கூறுகையில் இன்று நாம் சந்திக்கும் மிக அச்சுறுத்தலான சைபர் குற்றங்களில் ஒன்று தான் முகநூலில் உள்ள பெண்களின் புகைப்படத்தை ஆபாச வலைத்தளங்களுக்கு பயன்படுத்துவது தான்.கவரும் விதமாக இருக்கும் பெண்களின் புகைப்படத்தை தான் இத்தகைய குற்றங்களுக்கு பெரிதும் பயன்படுத்துப்படுகிறது.இது தொடர்பாக நாங்கள் மிகத் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...