அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற கருத்தை இன்று இருக்கும் பெண்கள் தூள் தூளாக்கி விட்டனர் என்று கூட சொல்லலாம். ஆண்களுக்கு நிகராக பெண்களும் போட்டி போட்டு தனது திறமைகளை நிலைநாட்டி வருகின்றனர். விளையாட்டு முதல் தொழில்நுட்பம் வரை பெண்கள் சாதிக்காத துறையே இல்லை என்று கூறினாலும் மிகையாகாது. அந்த வரிசையில் நம் எல்லாருக்கும் பரீட்சையமான ஒருவரை இன்று, முதல் நபராக அறிமுகப்படுத்த உள்ளேன்.
முதல் பெண் காவலர் என்பதற்கு சிறந்த உதாரணமான விளங்கி வரும் கிரண்பேடி அவர்களே இன்று நமது தளத்தில் பெண் ஆளுமைகள் பக்கத்தில் பார்க்க உள்ள நபர்.
அறிமுகம் படிப்பு
ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர்.
அரசியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
பதவிகள்
போக்குவரத்து காவல்துறை, போதைத் தடுப்பு அதிகாரி, பயங்கரவாதத்துக்கு எதிரான வல்லுனர் நிர்வாகி, கால்ஸா பெண்கள் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.
தனித்திறமைகள்
விவாதங்கள் பேச்சுப் போட்டியில் பரிசுகளைத் தட்டிச் சென்றவர்.
டென்னிஸ் - ல் தேசிய மற்றும் ஆசிய டென்னிஸ் போட்டிகளில் சாம்பியன்ஷிப் பெற்றவர்.
விருதுகள்
போதை மருந்து மற்றும் வன்முறைக் கட்டுப்பாடு என்ற தலைப்பில் சமர்பித்த கட்டுரைக்கு இந்தியத் தொழில்நுட்பக் கல்விக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குகியது.
It is always possible என்ற நூலுக்கு ஜவகர்லால் நேரு பெலோஷிப் விருது வழங்கப்பட்டது.(திகார் சிறையின் குற்றத்தன்மை எப்படி மனிதத் தன்மையாக மாற்றம் பெற்றது என்பதை விவரிக்கிறது இந்நூல்.)
பிலிப்பைன்ஸ் நாட்டின் உயரிய விருதான ராமன் மக்ஸஸாய் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அமெரிக்க வாழ் இந்திய முஸ்லிம்கள் மற்றும் கனடிய முஸ்லிம்களும் இணைந்து ப்ரைடு ஆப் இந்தியா அவார்ட் வழங்கி பெருமைப்படுத்தினர்.
நூல்கள்
37 உண்மை கதைகளை தொகுத்து what went wrong என்ற நூலை எழுதினார்.
சுயசரிதையான I Dare It is Always Possible என்ற நூலையும் எழுதியுள்ளார்.
Narcontrol இதழை தொடங்கினார். ஆசிரியராக பணியாற்றினார்.
அமைப்புகள்
போதைக்கு அடிமையானவர்களின் மீட்சிக்கான மறுவாழ்வு இல்லத்தை உருவாக்கினார்.
போக்குவரத்தில் உதவி செய்யும் பூத்-களை நிறுவினார்.
நவஜோதி என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் போதை ஒழிப்பதற்கான முயற்சியில் ஈடுப்பட்டார்.
நகர மக்களின் குறை நிவர்த்திப் பிரிவு என்ற அமைப்பை ஏற்படுத்தினார் கிரண்.
சிறைக் கைதிகளின் குழந்தைக்களுக்கு கல்வி கற்பிக்க Crime Home Children திட்டத்தையும் சேரியில் வரும் குழந்தைகள் பிச்சைக்காரர்களாகவும் திருடர்களாய் மாறாமல் தடுக்க Gali School கல்விக் கற்பிக்கும் முறையை ஏற்படுத்தினார்.
சிறைத்துறை ஐ. ஜி யாக திகார் சிறையில் நியமிக்கப்பட்டார். அங்கு 9700 கைதிகள் இருந்தனர். 64403 விவகாரங்கள் பரிசீலிக்கப்பட்டு 71 சதவீதம் தீர்வு காணப்பட்டது.
முடிவாக
சிறைக் கைதிகளும் சாதாரண மனிதர்கள்தான். சரியான வழிகாட்டுதலின் மூலம் அவர்களை மாற்ற முடியும் என்றார் தலாய்லாமா. (திபெத்திய ஆன்மிகத் தலைவர்) அவருடைய கருத்துக்கு செயல் வடிவம் தந்தவர் இவரே.
இன்னும் நிறைய உள்ளன. படிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்பட கூடாது என்று முற்று பெறாமல் முடிகிறேன். நமக்கு தெரிந்த கிரண்பேடியின் மறுபக்கத்தில் சிறிதே இங்கு பதிவு செய்து உள்ளேன்.