தலைப்பு :பெண்களுக்கான சட்டங்கள் மற்றும் அறியாத தகவல்கள்
சட்டம் ;
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடைபெறும் இதே நாட்டில் தான் அதற்கான தீர்வுகளையும் சொல்கிறது. ரஷ்யாவில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தற்காப்பு என்ற பெயரில் தன்னை வன்புறுத்தும் நபரின் பிறப்பு உறுப்புகளை அறுத்து கொலை செய்யும் சட்டம் புதுப்பிக்கபுதுப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால் நமது இந்தியாவில் நான்கு முனை துப்பாக்கியில் அவனுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதன் தொடர்பான சட்டங்கள் பற்றி பேசினோம்.
குறிப்பாக பிபிசி செய்தியாளர் ஓப்ரா மற்றும் பூலான்தேவி போன்றவர்களின் வாழ்க்கையில் அவர்கள் சந்தித்தை பற்றி பகிர்ந்து கொண்டோம்..
திடுக்கிடும் தகவல்கள்;
செக்ஸ் டூரிசம் பற்றி புதிதாக மற்றும் திடுக்கிடும் தகவலை பற்றி பார்த்தோம். யாருக்கும் தெரியாத ஒன்றாக இந்த தகவல் இருந்தது.
இந்தியாவில் இதற்காக ஒரு பெரிய சந்தையே உள்ளன. சென்னை பெங்களூர் ஐதராபாத் மும்பை டெல்லி கோவா போன்ற பிரபலமான நகரங்களில் இற்கான ஒரு பெரிய சந்தை இருப்பது பிரம்மிக்க வைக்கிறது.
செக்ஸ் டூரிஸம்!!!
தமிழகத்தையே உலுக்கிக்கொண்டு இருக்கும் செக்ஸ் டூரிஸம் இதை பத்தி தான் நம்ம இன்னிக்கு பேசப்போறோம்.
"தமிழகத்தை மிரட்டும் செக்ஸ் டூரிஸம்"
சர்வதேச அளவில் வளர்ந்துவரும் சமூக விரோதச் சுற்றுலா இது.
குழந்தைகளை மட்டுமே வன்புணரும் உளவியல் நோயான "பீடோ ஃபைலிக்"மன நோயாளிகளின் கூட்டங்களால் நடத்தப்படும் பெரும் வணிகம் இது.
அமெரிக்காவின் FBI தொடங்கி INTREPOLE வரைக்கும் இந்த கும்பலை பிடிக்க தனிப்படைகளை அமைத்திருக்கின்றன
“நமது நாட்டில் முதன்முதலாக கோவாவில் தொடங்கியது சைல்டு செக்ஸ் டூரிஸம்.
உலகம் முழுவதுமிருந்து பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ள பெண்களைத் தேடி தாய்லாந்துக்கு வரும் கூட்டத்தைப் போல கோவாவுக்குக் குழந்தைகளைத் தேடி ஒரு கூட்டம் வருகிறது.
‘எஸ்கார்ட்’ என்கிற பெயரில் 10 வயது முதல் 15 வயது வரையிலான ஆண், பெண் குழந்தைகளை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களுடன் தங்கவைத்துக்கொள்வார்கள்.
ஒரு நாள், மூன்று நாள், ஒரு வாரம், ஒரு மாதம் என பேக்கேஜெல்லாம் உண்டு. ஒரு நாளைக்கு ஆயிரங்களில் தொடங்கி லட்சங்கள் வரை கட்டணங்கள் கைமாறும்.
இயற்கைக்கு மாறான என்னென்ன வழிகள் இருக்கின்றனவோ அத்தனை வழிகளிலும் குழந்தைகளை அவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார்கள்.
இதற்காக அங்கு அரசியல் பிரமுகர் துணையோடு நடக்கும் கட்டப் பஞ்சாயத்துகளில் கோடிகளில் பணம் விளையாடுகின்றன.
அவர்களுடன் குழந்தைகள் கழிக்கும் ஒவ்வொரு நிமிடங்களுமே நரகத்துக்குச் சமம்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக கோவா மட்டுமல்லாமல், நாட்டின் முக்கிய நகரங்களில் ‘பீடோ ஃபைலிக்’ நோயாளிகள் சுற்றுலாப் பயணிகளாக சாரை சாரையாக வருகிறார்கள்.
தமிழகத்தில் சென்னை - வடபழனி, சாலிகிராமம், கே.கே.நகர், தி.நகர், கோடம்பாக்கம், போரூர் இங்கெல்லாம் பாலியல் தொழிலைவிட கூடுதல் வருமானம் கொட்டும் தொழிலாக மாறியிருக்கிறது ‘சைல்டு செக்ஸ் டூரிஸம்’.
ஆண்குழந்தைகளும் பெண் குழந்தைகளும் இந்த தொழிலுக்காக குறி வைத்து கடத்தபடுகிறார்கள்.
இதுபோன்ற பலவற்றை கலந்துரையாடலில் தெரிந்து கொண்டோம். ஒவ்வொரு பெண்களும் சராசரியாக பாலியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.
இது தீர்வாக இல்லாமல் ஒரு தேடலாக முடித்தோம்.
பயணம் தொடரும்...