தேனீ காற்றில் மிதந்து வரும் ஈரப்பதம் நீர்...
கள்ளிக்காட்டில் தீடிரென எழுந்த முத்தமிழ் ஊற்று நீர்...
கருவாச்சி காவியத்தில் பெண்மையை தீட்டிய ஓவியர் நீர்..
வில்லோடு நிலவை கட்டி போட்டவர் நீர்...
தண்ணீர் தேசத்தில் காதலை பிணைத்தவர் நீர்...
சிற்பியாக உம்மை நீயே செதுக்கும் கலைஞன் நீர் ...
தமிழை ஆற்றுப்படையாக்கிய தலைமகன் நீர்...