நமது கையில் இருக்கும் விரல்களை போல தான் நம் வாழ்க்கையும் இருக்கும் என்பதை என்றேனும் கவனித்தது உண்டா நாம் ? என்னது கைவிரல் போல வாழ்க்கையா? பொதுவா கைரேகை வைச்சு தானா வாழ்க்கையை சொல்வாங்க இவங்க என்னடா கைவிரல் சொல்றாங்களே? என்று ஆச்சரியமாகவும் நமக்கு இருக்க குட்டி மூளையை கசக்கி யோசிக்கவும் வேண்டாம். நானே சொல்றேன், ஆம் கைவிரல் போல தான் நம் வாழ்க்கை.
Monday, 20 July 2020
Friday, 17 July 2020
எழுதினேன் ஒரு கவிமடல்...
தலைப்பைச் சேருங்கள் |
மட்டற்ற பேரின்ப மகிழ்ச்சியில்..
யாரும் எழுதாத எழுத்துகளையும் பேசாத வார்த்தைகளையும் யாராலும் பயன்படுத்தாமல் இருக்க முடியாது.. பலரின் பேச்சுக்களாலும் எழுத்துக்களாலும் வளர்ந்தவர்கள் தான் நாம்.. நான் வணிகவியல் துறை மாணவி என்பது கூட பலருக்கு தெரியாது.. நான் தமிழ்த்துறை மாணவி என்று கருதும் பலர் இங்குண்டு.. தமிழ் எனது தாய்மொழி எனது அடையாளம்.. மேடைகளில் பேசுபவர்களை பார்க்கும் போதும் பல புத்தகங்களில் புழுக்களாக இருந்து வாசிக்கும் போதும் நான் வியந்தது உண்டு.. எம் பாரதியே எனது வீரத்தின் அடையாளம்.. அவருக்கு அடுத்து நான் தமிழை இரசிக்க அவற்றில் இயங்க மற்றொரு காரணம் எனது கள்ளிக்காட்டு நாயகன் தான்.. தமிழை இயற்கையுடன் இப்படியும் ஒப்பிட்டு எழுதலாம் பேசலாம் என்று அவரிடம் இருந்து தான் கற்றுக் கொண்டிருக்கிறேன்..
கோடி இரசிகைகளில் நானும் ஒன்று.. எத்தனை பேருக்கு இவர் பதில் அனுப்புவார் என்று தெரியவில்லை..எல்லாரையும் போல நானும் அவருக்கு ஒரு வாழ்த்து செய்தி அனுப்பினேன்.. அவருடைய நெருக்கடியான வேலைநேரத்திற்கு இடையில் எனது கவிமடல் அவருடைய பார்வைக்கு செல்லுமா என்று நினைத்தேன்.. ஆனால் எதிர்பார்க்கவில்லை அதனை படித்து எனக்கு பதிலுரை மின்னஞ்சல் செய்தி அனுப்புவார் என்று.. மின்னஞ்சல் கூட இரண்டாவது மகிழ்ச்சி தான் அவ்வளவு பெரிய மாமனிதனின் எழுத்துகளை இரசித்து வாழ்ந்து கொண்டிருப்பவள் நான்..அவருடைய பேனாவின் எழுத்துகளை தாங்கும் வெள்ளைத்தாளாக இருந்திருக்க கூடாதா என்று எண்ணாத தினங்கள் இல்லை.. இன்று அவருடைய மின்எழுதுகோலில் எனது பெயரை எழுதியது கூட ஒரு கவிதையாக கருதுகிறேன்..
என்னை எனக்கு அடையாளம் காட்டியவர் எனது ஆசான் முனைவர் இரா. குணசீலன் அவர்கள் தான். எனது பெயரை நான் விரும்பும் எனது கள்ளிக்காட்டு நாயகன் எழுதியதில் மீண்டும் உயிர்ப்புற்று எழுகிறேன்..இந்த ஆண்டில் பெரிதும் உடன்பாடு இல்லாமல் தான் இருந்தேன். வேலை மற்றும் நட்பு வட்டத்தில் பெரிதும் இழப்பை மட்டும் சந்தித்து வந்தேன். ஒன்றரை மாதங்கள் சமுகத்தளத்தில் இருந்து இடைவெளி எடுத்தேன். கள்ளிக்காட்டு நாயகன் அவர்களின் பிறந்த நாளுக்கு மீண்டும் இணையம் வர வேண்டும் என்று முடிவு செய்தேன். அதுபோலவே வந்தேன். அவருக்கு ஒரு படையல் விருந்து படைத்தேன் அதனை ருசித்து எனக்கு பதில் தந்ததும் எனது பெயரை உச்சரித்தும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..
எல்லாருக்கும் ஒரு ஆசை இருக்கும் தான் எழுதும் எழுத்துக்களை தான் நேசிக்கும் மனிதர்களின் பார்வைக்கும் அவரின் மனதிற்கும் செல்ல வேண்டும் அதற்கு ஒரு பதிலுரை வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு என்றுமே இருக்கும். அது நிறைவேறினால் அதற்கு இணை வேறு எதுவும் இருக்காது. அந்த பரவச நிலையில் தான் நான் இருக்கிறேன். பலருக்கு இது ஒரு பெரிய விஷயமாக தெரியாது. ஆனால் இந்த குறுஞ்செய்தி எனக்கு கிடைத்த அரிய பெரிய பொக்கிஷம்.அதனால் என்னுடைய இந்த மகிழ்ச்சியை எனது தமிழ் உறவுகளுடன் பகிர்ந்து மகிழ்ச்சியை இரட்டிப்பு ஆகுகிறேன்..
என்னை இணைய உலகிற்கு அறிமுகப்படுத்தியது எமது கல்லூரியும் எனது ஆசானும் தான்.. என்னை கவிஞருக்கு அடையாளம் காட்டியது எனது அன்பு அண்ணன் கேசவன் அவர்கள் தான். இவர்களுக்கு என் றும் நன்றியுடன் இருப்பேன்..
நான் அவருக்கு படைத்த விருந்தை ருசிக்காதவர்கள் மேலே உள்ள இணைப்பை சொடுக்கி ருசிக்கவும்.. எனக்கு எட்டிய தமிழில் இயற்றிய சிறிய படைப்பு..
நன்றி..
கேள்விகளுக்குவிடைத் தேடும் பயணம் தொடரும்...
Tuesday, 14 July 2020
கிடைத்து விடும் தேடுங்கள்...
💖... முதலும் நீ.. முடிவும் நீ.. 🌱
போதும் என்று உமது வாழ்வை நொந்து விடாதே.. இரசிக்க தெரிந்தால் உமது வாழ்வை விட வேறு எதுவும் சுவாரசியமாக இருக்காது..
Subscribe to:
Posts (Atom)
அயோத்தி..
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...
-
தேனீ காற்றில் மிதந்து வரும் ஈரப்பதம் நீர்... கள்ளிக்காட்டில் தீடிரென எழுந்த முத்தமிழ் ஊற்று நீர்... கருவாச்சி காவியத்தில் பெண்மையை தீட்டிய...
-
வரைபடம் : சஞ்சுனா தேவி ஆகஸ்ட் 15 அன்று மட்டும் நம்ம பயபுல்லைங்களுக்கு எங்க இருந்து தான் தேசப்பற்று வருதுனே தெரியல..
-
முன்னுரை; உணவு, உடை, இருப்பிடம் என்பது குடிசையில் இருந்து மாட மாளிகையில் வாழ்பவர்கள் அனைவரது அடிப்படைத் தேவைகள் ஆகும்.பூமி எப்ப...