Wednesday, 2 March 2016
Monday, 29 February 2016
Saturday, 27 February 2016
பங்கு சந்தை வர்த்தகம்..!!
அன்புடையீருக்கு வணக்கம்,
கடந்த பதிவு(ஏன் தேவை பங்கு சந்தையில் முதலீடு) இதுக் குறித்து இன்று ஒரு தொலைநோக்கு பார்வையை பார்க்கலாம் நண்பர்களே..!!
பங்குச்சந்தை என்றால் என்ன?
பொருட்களை வாங்கவும் விற்கவும் பலரும் கூடுமிடம் சந்தை எனப்படுவது போல, பங்குகளை வாங்கவும் விற்கவுமான இடமே பங்குச் சந்தை எனப்படும். ஆனால், காய்கறிக்கோ, மற்ற பொருட்களுக்கோ தேவைப்படுவது போல, பங்குச்சந்தைக்கு ஒரு குறிப்பிட்ட இருப்பிடம் தேவையில்லை. கணிணி மூலமாகவும், முகவர்கள்(Brokers) மூலமாகவும் பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியும். இன்றைய தேதியில் உலகப் பொருளாதாரம் பங்குச்சந்தையைப் பெரும்பாலும் சார்ந்துள்ளது என்றால் அது மிகையன்று. எனவே பங்குச் சந்தையைப் பற்றி நாம் அறிந்துகொள்வது இன்றியமையாதாகிறது.
பங்குச்சந்தையைப் பற்றி அறிந்துகொள்ளுமுன் வேறு சிலவற்றைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.அவற்றைப் பார்ப்போமா?
முதலீடு செய்யும் வழிகள் :
மிகவும் கடினமாக உழைத்து நாம் சேமித்த பணத்தை, சரியான முறையில் முதலீடு செய்வது அவசியம். முதலீடு செய்வதற்குப் பல வழிகள் உள்ளன. அவற்றின் சாதக பாதகங்களைப் பார்க்கலாமா?
அசையும் சொத்துகள்;
நகை,வங்கிச்சேமிப்புகள்,கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகள் முதலியவை இவ்வகைச் சாரும்.தங்கள் என்பது நல்ல முதலீடாக கருதப்படுகிறது.ஆனால் அதை பாதுகாப்பு குறித்து சற்று பயம் தான்.ஆனால் தங்கத்தை வாங்கி அதை விற்றால் அதிக இலாபம் ஈட்டலாம்.விலை உயரும் போது நல்ல இலாபம் பெற இயலும்.
வங்கிச் சேமிப்புகள்(Bank Deposits) நடுத்தர வர்க்கத்தினராலும், முதியவர்களாலும் மிகவும் விரும்பப் படுவது. அபாயமில்லாதது(Risk free). பரிவர்த்தனைகள் (Transactions) எளிமையானவை. ஆனால், இதில் வரவு, சற்றே குறைவுதான். கடன் பத்திரங்கள் (Bonds) பொதுவாக வங்கிச்சேமிப்புகளை விட அதிகமாகவும், பங்குகளை விடக் குறைவாகவும் லாபம் ஈட்டித்தரும் முதலீடுகள்.
அசையாச் சொத்துகள்;
நிலம், வீடு முதலியவற்றில் செய்யப்படும் முதலீடு மிகவும் லாபகரமானது. இவற்றின் மதிப்பு பொதுவாக உயருமே அன்றிக் குறைவதில்லை. ஆனால், இது, சிறு முதலீட்டிற்கு ஏற்றதில்லை. நிலமோ, வீடோ வாங்கவேண்டுமானால், பொதுவாகப் பெருந்தொகை தேவைப்படக்கூடும். மேலும், இவற்றை, இலகுவாக அவசரத் தேவையின்போது விற்க இயலாது, மொத்தமாக, ஏதேனும் உபரிப்பணம் வரும்போது, நீண்ட காலத்தேவையை மனதில் கொண்டு, செய்யக்கூடிய சிறந்த முதலீடு இது எனினும், சிறு வருமானம் உடையவர்களோ, குறுகிய காலத்தில் தமது முதலீட்டைப் பணமாக மாற்ற வேண்டுமென்று நினைப்பவர்களோ இவ்வகை முதலீட்டினை மேற்கொள்ளுவது கடினம்.
சரி பங்கு என்றால் என்ன அதற்கு முதலில் விடை வேண்டுமல்லவா..??
பங்குகள்;
நீங்கள் ஒரு தொழிலை தொடங்க வேண்டும் என்றால் அதற்கு மூலதனம் வேண்டுமல்லவா..??.........................................................
என்ன புரியவில்லையா நண்பர்களே இப்படினா இந்த பதிவு தொடரும் என்ற அர்த்தம்.தொடர்ந்து இணைந்திருங்கள் இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்.நன்றி..
Subscribe to:
Posts (Atom)
அயோத்தி..
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...
-
தேனீ காற்றில் மிதந்து வரும் ஈரப்பதம் நீர்... கள்ளிக்காட்டில் தீடிரென எழுந்த முத்தமிழ் ஊற்று நீர்... கருவாச்சி காவியத்தில் பெண்மையை தீட்டிய...
-
வரைபடம் : சஞ்சுனா தேவி ஆகஸ்ட் 15 அன்று மட்டும் நம்ம பயபுல்லைங்களுக்கு எங்க இருந்து தான் தேசப்பற்று வருதுனே தெரியல..
-
முன்னுரை; உணவு, உடை, இருப்பிடம் என்பது குடிசையில் இருந்து மாட மாளிகையில் வாழ்பவர்கள் அனைவரது அடிப்படைத் தேவைகள் ஆகும்.பூமி எப்ப...