கல்வி,மின்சாரம்,குடிநீர். இதைக் கொடு இலவசமாக..!!!!
நமது அடிப்படைத் தேவை உணவு,உடை,இருப்பிடம் இவை அனைவருக்கும் கிடைக்கிறது என்பது உண்மை..ஒரு சிலருக்கு கிடைப்பது இல்லை ...ஆனால் நமது அரசு எவ்வளவோ சலுகை அளிக்கிறது அதில் ஏன் இதை அளிக்கக் கூடாது..??? அளிக்கும் ஆனால் அனைவருக்கும் இல்லை..அடுத்து அரசு அளிக்க வேண்டிய முக்கியமான இலவசம் கல்வி,மின்சாரம்,குடிநீர் இவற்றை வழங்கினால் கூட நமது நாட்டில் வறுமை அளவைக் குறைக்கயியலும்..எவன் ஒருவன் கல்வி கற்கின்றானோ அவனால் தனது நிலையை மாற்ற இயலும்...அடுத்தது மின்சாரம் நாம் மூன்று நிலையில் மின்சாரக் கட்டணம் செலுத்தி வருக்கின்றோம்..அதாவது,வீடுகள் ,விவசாயம் மற்றும் தொழிற்சாலைகள் இவற்றில் வேறுபாடுகள் உள்ளன..அடுத்தது குடிநீர் ஐந்து ரூபாய் இல்லாமல் நம்மால் ஒரு குடுவைத் தண்ணீர் கூடக் குடிக்க இயலவில்லை..இலவசமாக கிடைத்தாலுமே சுகாதாரமாக கிடைப்பது இல்லை ...இவ்வாறு தொடர்ந்தால் அடுத்து நாம் மரணத்தின் பிடியில் தான்..இவை மூன்றுமே நமக்கு இலவசமாக கிடைத்தால் நமது நாடு வல்லரசு அடையும் என்பது உண்மையே.. சிந்தியுங்கள் நண்பர்களே..இது கிடைத்தால் நாம் யாரிடமும் கையேந்தத் தேவையில்லை..நாமும் வளர்ந்த நாடாக முடியும்..இது ஒரு தொடக்கப் புள்ளியே...வந்து இணையுங்கள் கோடுகளாக நண்பர்களே....
நன்றி.
எனது கருத்தில் பிழைகள் இருப்பின் மன்னியுங்கள்......
No comments:
Post a Comment