Saturday, 2 January 2016

எங்கே செல்கிறது நமது பாரதம்..!!

 இந்தியா ஓர் அறிமுகம்..!!!


நமது நாகரீகம் சிந்து சமவெளியில் ஆரம்பம் பெற்று இன்று  வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றும் அவர்களின் நாகரீகத்தை பின்தொடர்கின்றோம்.அன்று நம்மிடம் இருந்த இயற்கை வளத்தைக் கண்டும், வியாபாரம் செய்யவும் வந்தவர்கள் தான் போச்சுகீசியர்கள்.பிறகு தான் பிரிட்டிஷ் ஆட்சி நமது நாட்டை அடிமைப்படுத்தியது..கிழக்கிந்தியக் கம்பெனி கி.பி.1600-ல் இந்தியாவில் நுழைந்து நமது வளங்களுக்கு நாம் அவர்களிடம் கட்டினோம் வரி.அதற்கு பதிலடி கொடுத்தார் நமது கட்டபொம்மன் ..அண்ணல் காந்தி,நேரு,திலகர்.வ.உ.சி,குமரன்,காமராசன் மற்றும் பலர் நம்மை ஒருங்கிணைத்து சுதந்திர போராட்டத்திற்காக கூக்குரல் எழுப்பினார்கள்.ஆகஸ்ட் திங்கள் 15-ம் தேதி நள்ளிரவில் ஆங்கிலக் கொடி இறக்கப்பட்டு இந்தியக் கொடி ஏற்றி எப்படியோ அடைந்து விட்டோம் சுதந்திரம்.


எங்கே நமது ஒருமைபாடு..!!

அன்று நமது பாரத மக்கள் ஒற்றுமை உணர்வோடு இருந்தனர் என்று நமது பாடப்புத்தகங்களில் படித்திருப்போம்.அது உண்மை தான்.அன்றைய காலக்கட்டதில் குமரி முதல் இமயம் வரை தமிழ் மொழி மட்டுமே பேசப்பட்டது உண்மை.ஆனால் இன்று நமது நாட்டில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் மொத்தம் 22.ஏன் இந்த மொழி பிரிவினை ..?? அதற்கு நாம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இருக்கலாம்.அது மட்டுமா இல்லை ஜாதி, மதம் மற்றும் மொழி போன்ற ஏரளமான பிரிவுகள்..இன்றைய தினத்தில் நமக்காக உயிர் துறந்தவர்கள் இருந்தால் அவர்களின் எண்ணம் இதற்கா சுதந்திரம் பெற்றுத் தந்தோம் என்று வருந்துவர்.இன்று எங்கே ஒருமைபாடு..??


எங்கே விவசாயம்..!!

வானம் பார்த்து விவசாயம் செய்த புண்ணிய பூமி ஆனால் இன்று மானம் மற்றும் பணத்தைப் பார்த்து செய்கின்றோம் விவசாயம்..ஒவ்வொரு விவசாயிகளும் நமக்கு கடவுளாக இருந்தன அன்னமிட்ட கைகள்..இன்று கைதிகள் அவர்கள் ஆசை என்னும் பிடியில்.ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு திடமாக இருந்தோம் இன்று பீட்சா,பர்க்கர்,நூடுல்ஸ் என்ற ஆங்கில உணவைச் சாப்பிட்டு வருக்கின்றோம்..நாளைய சமுதாயத்திற்கு கொடுக்கப்போவது உணவா..??மரணமா..??

பணமா..??பிணமா..??

யார் புதைத்தது பணம் என்ற பிணைத்தை நம்முள்.ஒருக்கட்டத்தில் பணம் தேவைப்பட்டது உயிர் வாழ இன்று வாழ்வதே படணத்திற்காக தான்.பணத்தை உருவாக்கியதே மனிதன் தான் ஆனால் இன்று பணம் தான் மனிதனை உருவாக்குகிறது.என்ன கொடுமை..??

அரசா..??தனியாரா..??


நம் எல்லாருக்கும் தெரிந்த உண்மை.ஆனால் எதுவும் செய்ய இயலவில்லை நம்மால்.!!

அரசு நடத்த வேண்டிய கல்வி இன்று தனியார் நடத்துகிறது.தனியார் நடத்த வேண்டிய டாஸ்மார்க் அரசு நடத்துகிறது.நமது அரசாங்கத்துக்கு டாஸ்மார்க் இருந்து தான் அதிக வருமானம் கிடைக்கிறது என்பது உண்மை.

கல்வி வியாபாரமா..??சேவையா..??

கல்வி என்பது சேவையாக இருந்தது..இன்று அதே கல்வி வியாபாரம் ஆனது ..படிக்க ஆர்வமுள்ள குழந்தைகளாக படிக்க இயலவில்லை காரணம் கட்டாயக் கல்வி கட்டணம் கல்வியாக மாறியது தான் ..கல்வி முறை என்பது நாளைய சமுதாயத்தை உருவாக்குவது .ஆனால் இந்த வியாபாரம் நம்மை பகைவன் ஆக்குகிறது.அரசு பள்ளிகள்,கல்லூரிகள் மற்றும் மருத்துவமனை வேண்டாமா ஆனால் அரசு வேலை மட்டும் வேண்டுமா நம் மக்களுக்கு..

முடிவு..!!


எனது பார்வையில் நான் காணும் பாரதம்.இனம்,மொழி,மதம்,ஊழல் மற்றும் லஞ்சம் நிறைந்தது  தான் இந்தியா..இதை யாராலும் மறுக்க இயலாது..எனது கவலைகள் அனைத்தும் நமது இந்தியா எப்போது வல்லரசு அடையும் ..முடியும் இன்றைய தலைமுறைக்கு வழிவிடுங்கள் ..இன்றைய தலைமுறை நாளைய சமுதாயம் என்பது வார்த்தையால் மட்டுமில்லாமல் செயலிலும் வேண்டும்..சிந்தியுங்கள் இது நமது பாரதம்.எனது தமிழ் ஆசிரியர் முனைவர்.இரா.குணசீலன் ஐயா அடிக்கடி என்னிடம் கூறுவது எதையும் நம்மால் மாற்ற இயலாது நம்மை நம்மளே மாற்றினால் தான் உண்டு என்று இது என் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது..ஒவ்வொருவரும் தன்னை தானே மாற்றினால் கட்டாயம் மாறும் நம் பாரதம்..

1 comment:

vimal said...

அன்றைய காலக்கட்டதில் குமரி முதல் இமயம் வரை தமிழ் மொழி மட்டுமே பேசப்பட்டது உண்மை???????? [-(

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...