Saturday, 27 February 2016

இன்று காளையா..?? கரடியா..?? (28.02.2016)



பங்கு சந்தை வர்த்தகம்..!!

Image result for share market photo in tamil

அன்புடையீருக்கு வணக்கம்,
 கடந்த பதிவு(ஏன் தேவை பங்கு சந்தையில் முதலீடு) இதுக் குறித்து இன்று  ஒரு தொலைநோக்கு பார்வையை பார்க்கலாம் நண்பர்களே..!!

பங்குச்சந்தை என்றால் என்ன?

            பொருட்களை வாங்கவும் விற்கவும் பலரும் கூடுமிடம் சந்தை எனப்படுவது போல, பங்குகளை வாங்கவும் விற்கவுமான இடமே பங்குச் சந்தை எனப்படும். ஆனால், காய்கறிக்கோ, மற்ற பொருட்களுக்கோ தேவைப்படுவது போல, பங்குச்சந்தைக்கு ஒரு குறிப்பிட்ட இருப்பிடம் தேவையில்லை. கணிணி மூலமாகவும், முகவர்கள்(Brokers) மூலமாகவும் பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியும். இன்றைய தேதியில் உலகப் பொருளாதாரம் பங்குச்சந்தையைப் பெரும்பாலும் சார்ந்துள்ளது என்றால் அது மிகையன்று. எனவே பங்குச் சந்தையைப் பற்றி நாம் அறிந்துகொள்வது இன்றியமையாதாகிறது. 


பங்குச்சந்தையைப் பற்றி அறிந்துகொள்ளுமுன் வேறு சிலவற்றைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.அவற்றைப் பார்ப்போமா?

Image result for share market photo in tamil


முதலீடு செய்யும் வழிகள் :

                                மிகவும் கடினமாக உழைத்து நாம் சேமித்த பணத்தை, சரியான முறையில் முதலீடு செய்வது அவசியம். முதலீடு செய்வதற்குப் பல வழிகள் உள்ளன. அவற்றின் சாதக பாதகங்களைப்  பார்க்கலாமா?


அசையும் சொத்துகள்;

     நகை,வங்கிச்சேமிப்புகள்,கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகள்  முதலியவை இவ்வகைச் சாரும்.தங்கள் என்பது நல்ல முதலீடாக கருதப்படுகிறது.ஆனால் அதை பாதுகாப்பு குறித்து சற்று பயம் தான்.ஆனால் தங்கத்தை வாங்கி அதை விற்றால் அதிக இலாபம் ஈட்டலாம்.விலை உயரும் போது நல்ல இலாபம் பெற இயலும்.

வங்கிச் சேமிப்புகள்(Bank Deposits) நடுத்தர வர்க்கத்தினராலும், முதியவர்களாலும் மிகவும் விரும்பப் படுவது. அபாயமில்லாதது(Risk free). பரிவர்த்தனைகள் (Transactions) எளிமையானவை. ஆனால், இதில் வரவு, சற்றே குறைவுதான். கடன் பத்திரங்கள் (Bonds) பொதுவாக வங்கிச்சேமிப்புகளை விட அதிகமாகவும், பங்குகளை விடக் குறைவாகவும் லாபம் ஈட்டித்தரும் முதலீடுகள்.

அசையாச் சொத்துகள்;

     நிலம், வீடு முதலியவற்றில் செய்யப்படும் முதலீடு மிகவும் லாபகரமானது. இவற்றின் மதிப்பு பொதுவாக உயருமே அன்றிக் குறைவதில்லை. ஆனால், இது, சிறு முதலீட்டிற்கு ஏற்றதில்லை. நிலமோ, வீடோ வாங்கவேண்டுமானால், பொதுவாகப் பெருந்தொகை தேவைப்படக்கூடும். மேலும், இவற்றை, இலகுவாக அவசரத் தேவையின்போது விற்க இயலாது, மொத்தமாக, ஏதேனும் உபரிப்பணம் வரும்போது, நீண்ட காலத்தேவையை மனதில் கொண்டு, செய்யக்கூடிய சிறந்த முதலீடு இது எனினும், சிறு வருமானம் உடையவர்களோ, குறுகிய காலத்தில் தமது முதலீட்டைப் பணமாக மாற்ற வேண்டுமென்று நினைப்பவர்களோ இவ்வகை முதலீட்டினை மேற்கொள்ளுவது கடினம்.

சரி பங்கு என்றால் என்ன அதற்கு முதலில் விடை வேண்டுமல்லவா..??

Image result for பங்குகள்

பங்குகள்;

    நீங்கள் ஒரு தொழிலை தொடங்க வேண்டும் என்றால் அதற்கு மூலதனம் வேண்டுமல்லவா..??.........................................................


என்ன புரியவில்லையா நண்பர்களே இப்படினா இந்த பதிவு தொடரும் என்ற அர்த்தம்.தொடர்ந்து இணைந்திருங்கள் இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்.நன்றி..

Image result for பங்குகள்

சக்கர வியூகமும் 1/7 பின்னமும்..!!



தோற்றம்;

பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே நடைபெற்ற போரில் பிரமிப்பூட்டும் பல தந்திரங்கள் கையாளப்பட்டன.அதில் ஒன்று தான் சக்கர வியூகம் எனப்படுகிறது.இது வெவ்வேறு அளவிலான ஏழு சுழலும் வட்டங்களைசக் கொண்ட போர்த் தந்திரச் செயல்திட்டம்.இதில் ஒவ்வொரு சக்கர அடுக்கும் திருகு சுழல் வடிவில் சுழன்று அமையும்.அது உள்ளே செல்லச் செல்ல இறுக்கமாக மூடிக் கொள்ளும் ஒரு வீரர் இதன் உன்பகுதிக்கு முன்னேறும் போது பெரும் குழப்பமும் சோர்வும் அடைவார்.இதன் இறுதிச் சக்கர அடுக்கில் தலை சிறந்த வீரர்கள் உள்ளே வருபவரைக் கடுமையாகத் தாக்குவதற்காகக் காத்திருப்பார்கள்.

சக்கர வியூகம் அமைப்பு;

போர்களத்தில் சுழலும் மரண இயந்திரமாகச் சக்கர வியூகம் கருதப்பட்டது.எனவே மிக நுட்பமான அறிவும் ஆற்றலும் இல்லையெனில் இதன் உள்ளே செல்பவர்கள் உயிர் பிழைத்து மீண்டும் வெளியில் வருவது மிக அரிது.பாண்டவர்களை வீழ்த்த துரோணாச்சாரியார் இந்தச் சக்கர வியூக அமைப்பை ஏற்படுத்தினார்.பெரும் சிக்கலை ஏற்படுத்தி எதிரியை மதிமயங்க வைக்கும் இந்த பயங்கரமான போர்த் தந்திரத்தை முறையாகப் புரிந்து கொண்டு இந்தச் சக்கர வியூகத்தின் உள்ளே ஊடுருவிச் சென்று போர் புரிந்து பிழைத்து அதைத் தகர்த்து உயிருக்குச் சேதமில்லாமல் மீண்டு வரும் திறமை பாண்டவர்களில் அர்ஜீனன் உட்பட ஒருசிலருக்கே இருந்தது.

அபிமன்யு இறப்பு;



மகாபாரத கதையின் படி அர்ஜீனன் தனது மகன் அபிமன்யு சுபத்திராவின் கருவில் இருக்கும் போது சக்கர வியூகத்தில்  எவ்வாறு உள்ளே செல்வது எப்படி திரும்ப வருவது குறித்து கூறுகையில் சுபத்திரா  தூங்கியதால் அபிமன்யுக்கு உள்ளே செல்ல தெரிந்தது ஆனால் வெளி வருவதற்கு தெரியாமல் கடைசி  வரை போராடி கவுர வீரர்களின் தாக்குதலுக்கு உட்பட்டு தன் உயிரை நீத்தார் அபிமன்யு.

சக்கரமாய் சுற்றும் 1/7;

நாம் ஏழு என்ற எண்ணைக் கொண்டு ஒரு சக்கர வியூகத்தை அமைக்கலாம்.உதராணமாக நாம் 1/7 என்ற பின்னத்தை எடுத்துக் கொள்வோம்.இந்த பின்னத்தை கணக்கிட்டால் மதிப்பு 0.142857 எனக் கிடைக்கும்.ஒவ்வொரு முறையும் இந்த பின்னத்தை 1 முதல் 6 வரை பெருக்கினால் 142857 என்ற எண்கள் மாறி மாறி வரும்.




உதாரணமாக,

0.1428578*1=0.142857
0.1428578*2=0.285714
0.1428578*3=0.428571
0.1428578*4=0.571428
0.1428578*5=0.714285
0.1428578*6=0.857142

சக்கரத்தை உடைத்த ஒன்று;

இப்பொழுது நாம் 1/7=0.142857142857 என்ற எண்ணை ஏழால் பெருக்கினால் கிடைப்பது  1 ஆகும்.எனவே மேலே உள்ள எண்ணை  ஏழால் பெருக்கினால் சக்கர அமைப்பு உடைந்து விடும்.எனவே முதல் தரத்திற்கு வந்து வீரராக வெளிப்படலாம்.7-ல் பெருக்குவதைப் போன்ற மிக முக்கியமான ரகசியம் தெரியாததால் இறுதி அடுக்கில் சிக்கி மாண்டார்.



அடுத்த முறை கணக்குப் போடும் போது நீங்களும் இந்த சக்கர வியூகத்தை தகர்த்துவிடுவீர்கள் தானே..??



Friday, 19 February 2016

ஏன் தேவை பங்குச் சந்தையில் முதலீடு ??



 


சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் வித்தியாசம் இருக்கிறதுசேமிப்பு என்பது பணத்தை செலவு செய்யாமல் வங்கியில் வைத்திருப்பதுமுதலீடு என்பது நமக்கு வருமானத்தை கொடுக்க கூடியதுசேமிப்புக்கும் முதலீட்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் பலர் இருக்கிறார்கள்இந்த வித்தியாசம் தெரிந்தவர்கள் கூட சரியான விகிதத்தில் பிரித்துக் கொள்வதில்லை.
மொத்த தொகையும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான பரிந்துரை அல்ல இந்த கட்டுரைஆனால் அதேசமயம் பங்குச் சந்தையின் மூலம் கிடைக்கும் பலனை விட்டு விடக்கூடாது என்பதை வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

ஏன் முதலீடு?
இன்ஃபோசிஸ் அல்லது விப்ரோ பங்கு வெளியான போது சில ஆயிரம் ரூபாய்களுக்கு அந்த பங்குகளை வாங்கி இருந்தீர்கள் என்றால்போனஸ் பங்கு பிரிப்பு உள்ளிட்டவற்றை சேர்க்கும் போது இப்போது அதன் மதிப்பு பல கோடிக்கு மேல் இருக்கும் என்று பங்குச் சந்தையில் பலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள்இவை கதை அல்ல முற்றிலும் உண்மைஅதேபோல மொத்த முதலீடும் காணாமல் போன கதையும் கேள்விபட்டிருப்பீர்கள்.
அதிக லாபம் சம்பாதித்தவர்களும் இருக்கிறார்கள்மொத்த முதலீட்டையும் தொலைத்தவர்களும் இருக்கிறார்கள்இப்போது முதலீடு செய்யலாமா வேண்டாமா என்று கேட்டால்முதலீடு செய்யலாம் ஆனால் சில விதிமுறைகளுடன் சந்தையில் பயணிக்க வேண்டும்தவிர நீண்ட கால அடிப்படையில் பார்க்கும் போது பணவீக்கத்தை தாண்டிய வருமானம் பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகளில் கிடைக்கிறது.

Image result for share market photo

பிரித்து முதலீடு செய்க!
பங்குச் சந்தை முதலீடு தேவைதான்ஆனால் அதற்காக முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கும் அத்தனை தொகையையும் பங்குச்சந்தையில் முதலீடு செய்யக்கூடாதுஉங்கள் வயது மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும்உதாரணமாக உங்களுக்கு 30 வயதாகிறது. 100 ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால் (100-30) 70 ரூபாயை பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம்இது பொதுவான விதிஒவ்வொருவரின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப இதனை மாற்றிக் கொள்ளலாம்அதேபோல 70 ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்துவிட்டாலும் ஒரே சமயத்தில் அனைத்து முதலீடுகளையும் செய்ய வேண்டாம். 70 ரூபாயை நான்காக பிரித்து நேரம் வரும் போது முதலீடு செய்ய வேண்டும்.

முதலீடாவர்த்தகமா?
அடுத்த கட்டத்துக்கு செல்லும் முன்புமுதலீட்டுக்கும் வர்த்தகத்துக்கும் இடையே வித்தியாசத்தை தெரிந்துகொள்வதுசில முதலீட்டாளர்கள் நல்ல பங்குகளாக தேர்ந்தெடுத்து முதலீடு செய்துவிடுவார்கள்சில காலத்துக்கு / வருடத்துக்கு பிறகு அவர்கள் விற்றுவிடுவார்கள்இது முதலீடுஆனால் சிலர் காலையில் வாங்கி மதியம் விற்பதுமாலை விற்பது போன்றவற்றில் ஈடுபடுவார்கள் இதற்கு பெயர் வர்த்தகம்இது ரிஸ்க் மிகுந்ததுநீங்கள் காலையில் வாங்கிவிடுவீர்கள்ஆனால் அந்த பங்கு தொடர்ந்து சரிய ஆரம்பிக்கும்இன்னும் சில நாளைக்கு பிறகு லாபத்துடன் விற்கலாம் என்று முடிவெடுப்பீர்கள்ஆனால் அந்த பங்கு நீங்கள் வாங்கிய விலைக்கு மீண்டும் வரவே வராதுபுதிதாக சந்தையில் நுழைபவர்கள் இதில் இருந்து கொஞ்சம் விலகியே இருக்கலாம்.

Image result for share market photo

போர்ட்போலியோ!
பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் போதுமொத்த முதலீட்டையும் ஒரே சமயத்தில் முதலீடு செய்யக்கூடாதோ அதேபோலமொத்த முதலீட்டையும்ஒரே பங்கு அல்லது ஒரு துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யக்கூடாதுஒரு துறையில் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் போதுஅந்த துறை சார்ந்த பங்குகள் அனைத்திலும் சரிவு ஏற்படும்அப்போது உங்களது முதலீடு அதிகளவு சரிய வாய்ப்பு இருக்கிறதுஅதனால் வங்கிபார்மாஐடிஎன்று துறை வாரியாக பிரித்து முதலீடு செய்து ஒரு போர்ட்போலியோவை உருவாக்க வேண்டும்அதேபோல ஒவ்வொரு துறையிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்.

தள்ளி நின்று கவனிக்க
பங்குச்சந்தை களேபரங்களில் இருந்து தள்ளி நின்று உங்கள் முதலீடுகளை செய்யுங்கள்எப்போது பங்குச் சந்தையில் உற்சாகம் மிகுதியாக இருக்கிறதோ அப்போது விற்றுவிடவேண்டும்எப்போது பங்குச்சந்தையில் பயம் அதிகமாக இருக்கிறதோ அப்போது முதலீடு செய்ய வேண்டும்இது முதலீட்டு ஆலோசகர் வாரன் பபெட் கூறிய முதலீட்டு தத்துவம்சந்தையின் இரைச்சலில் இருந்து விலகி இருந்தால்தான் என்ன நடக்கிறது என்பதை கண்டுக்கொள்ள முடியும்இல்லையெனில் கூட்டத்துடன் சேர்ந்து தவறான முடிவெடுப்போம்.

Image result for share market photo

கடன் வாங்கி முதலீடு வேண்டாம்
பங்குச்சந்தையில் முதலீடு நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கொடுத்திருக்கிறது என்றாலும்கடன் வாங்கி முதலீடு செய்வது ஆபத்தானதுஉங்களிடம் இருக்கும் உபரி பணமாக இருந்தால் யாருக்கும் பதில் சொல்லத்தேவை இல்லைஆனால் கடன் வாங்கும் போது விட்டதை பிடிக்க மேலும் மேலும் கடன் அதிகமாக அந்த சுழலில் இருந்து வெளியே வரமுடியாமல் போய்விடலாம்.

Image result for share market photo


மறு ஆய்வு
தங்கம் இன்று எவ்வளவு வர்த்தகம் ஆகிறதுவீட்டின் சதுரடி மதிப்பு இன்று எவ்வளவு என்பதை யாரும் பார்ப்பதில்லைஆனால் முதலீடு செய்த பங்குகள் மட்டும் இன்று எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதை பார்க்கத் தவறுவதில்லைமுதலீடு செய்த பங்குகளின் மதிப்பை தினமும் பார்ப்பது எப்படி தவறோ அதேபோல பார்க்காமல் விட்டுவிடுவதும் தவறுபங்குகளின் விலையை பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு முதலீடு செய்திருந்த பங்குகளை பற்றி என்ன செய்திகள் வருகின்றன என்பதில் கவனம் செலுத்தலாம்செய்திகள் சரியாக இல்லை என்றால் அவற்றை விற்பதை பற்றி பரிசீலனை செய்யலாம்.

எதில் முதலீடு?
பங்குச் சந்தையில் முதலீடு ஏன் தேவை என்பதற்கு காரணங்கள் கூறலாமே தவிரஎந்த பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பது தனிநபர் விருப்பத்துக்கு உட்பட்டதுமுதலீடு செய்வதற்கு முன்பு பங்குகளை பற்றி ஆராய்ச்சி செய்த பிறகு முதலீடு செய்யுங்கள்பங்குச்சந்தை வல்லுநர்களுடன் விவாதியுங்கள்.
நீங்கள் முதலீடு செய்யப்போவது பங்குகளில் அல்லதொழிலில் முதலீடு செய்கிறீர்கள் என்பதை உணருங்கள்அதேபோல உங்களுக்கு தெரியாத தொழிலில் முதலீடு செய்யாதீர்கள் என்ற வாரன் பபெட்டின் ஆலோசனையை நினைவில் கொள்வதும் நல்லது.

Image result for share market photo

சிறு துளி பெருவெள்ளம் போல சிறு சேமிப்பு என்பதை முதலீடு செய்து இலாபம் ஈட்டலாம்.இதை குறித்து இன்னும் எளிமையாக அடுத்த பதிவில் பார்க்கலாம் நண்பர்களே..!!

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...