சாதியற்ற சமூகம் கனவில் மட்டுமே...
https://m.facebook.com/story.php?story_fbid=1996184460475775&id=100002527224258
ஒவ்வொரு வரிகளையும் படிக்கும் போது கண்கள் பிரிந்து விரிந்து மூடினேன்.. இப்படியும் சிலர் இருந்தார்கள் என்று நினைக்கையில் பெண் ஒரு போதைப் பொருளாகவும் காட்சிப் பொருளாகவும் இருந்துள்ளனர். இப்பவும் சில இடங்களில் இருக்கின்றனர் என்று நினைக்கையில் நெஞ்சம் சத்தம் இடாமல் பலத்த மௌத்தால் வெதும்புகிறது..
சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லும் அதே பள்ளியின் தான் சாதிச் சான்றிதழ் கேட்கிறார்கள்.. சாதி என்பது ஒன்றே அதுவே மனிதம். சாதி வெறியர்கள் ஒழிந்தால் மட்டுமே இதற்கு விடியல் உண்டு.. உடம்பில் ஓடும் செங்குருதி நிறம் சிவப்பு தானே தவிர அதில் சாதி இல்லை.. அப்படி பார்த்தால் நாம் உண்ணும் உணவில் இருந்து அது ஜீரணமாகி வெளியேறும் மலம் முதல் எல்லாம் யாரை நீங்கள் தீண்டத்தாகதவர்கள் என்று நினைத்தீர்களோ அவர்களே அதனை உருவாக்கி சுத்தம் செய்கின்றனர். அதில் எப்படி சாதியை கண்டுப்பிடிப்பீர்கள்?
முடிக்க மனமில்லாமல் புதிரோடு செல்கிறேன்.தேடலின் தொடக்கம் தங்களிடம் ஒப்படைக்கிறேன்..
8 comments:
தேடுதல் என்ற விதைகளைத் தூவிக் கொண்டே இருங்கள். கேள்விகள் என்ற பயிர்கள் விளையும். சிறந்த கேள்விகளை பயிர்விக்கத் தேவையான நல்ல விதைகளை திரட்டுவோமாக.( HYV-seeds- High Yield Variety of Seeds)
சாட்டையடி.....
சாதி பார்க்கும் சமூகம் அனைத்திற்கும் சாதி பார்த்தால் பரவாயில்லை...போலியான சமூகம்...கருவறையில் இருந்து கட்கும் கல்வி முதல்கொண்டு கல்லறை வரையில் சாதியத்தை பேணும் இச்சமூக மக்கள் கொஞ்சமேனும் உண்ணும் உணவை சாதி பார்த்து உண்டால் பரவாயில்லை... பசியால் செத்தொழிவர்கள்...
உண்மையே ஐயா. தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி ஐயா.
தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி ஐயா.
உண்மையே நண்பா. உனது வருகைக்கு மிக்க மகிழ்கிறேன் நன்றி மனோகர்.
இப்போது உலகத்தில் சாதி என்ற ஒன்று மனிதனை மிருகமாக மாற வைக்கிறது... தங்களின் கவிதைகள் தங்களை மிகவும் கவர்ந்தது....👏👏👏👏👏👏👌👌👌👌👌
இந்த உலகத்தில பசிய விட சாதிக்கு தான் பலம் அதிகம் போல....
Post a Comment