இணைய முகவரி
http://tamilmanam.net
கூகுள் போன்ற தேடு தளத்தில் முன்பு ஒரு காலத்தில் தமிழில் தேடுவதற்கான வசதிகள் இருக்காது.ஏன் தமிழ் தட்டச்சு கூட இல்லாத காலமும் உண்டு. ஆனால் இன்று தமிழ் தட்டச்சு செய்ய பல்வேறு வழிமுறைகள் உண்டு. மடிகணினி கணிப்பொறி மற்றும் திறன்பேசி என எல்லாவற்றிலும் தமிழ் வந்து விட்டது. இன்று தேடு தளத்தில் தங்கிலீஷ் - இல் தட்டச்சு செய்தாலும் தமிழை உள்வாங்கி கொள்ளும் அளவிற்கு தளங்கள் இருக்கிறது.
முன்பெல்லாம் விக்கிப்பீடியா போன்ற தளத்தில் மட்டுமே அனைத்து செய்திகளும் கிடைக்கும் என்று இருந்தது. ஆனால் கூகுள் போன்ற நிறுவனங்களில் திறந்தவெளி மென்பொருள்கள் இயங்குதளம் என பல்வேறு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. அதன் வரிசையில் தமிழ்மணம் என்ற இயங்குதளம் உலகில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தமிழர்களின் தமிழ் ஆர்வலர்களின் பிளாக்கர் என்ற வலைத்தளத்தை ஒரே இடத்தில் பார்க்க இயலும்.
இங்கு சினிமா முதல் கல்வி வரை அனைத்துமே ஒரே பகுதியில் பார்க்க இயலும்.மேலும் இந்த இயங்குதளம் கருத்துரையாளர்கள் பார்வையாளர்களின் எண்ணிக்கை பிடித்த கட்டுரைகளுக்கு ஓட்டு போடும் வசதி என பல்வேறு வகையில் இயங்கி வருகிறது.
உண்மையில் தமிழில் மணத்தை உலகெங்கும் எடுத்து செல்கிறது. இந்த தமிழ்மணம். தமிழ் அவமானம் அல்ல அடையாளம்.
6 comments:
"முன்பு ஒரு காலத்தில்' என்று முக்கியமான வரிகளுக்கு முன் சேர்த்து விடவும்.....!
All the best...
சேர்த்து விட்டேன் ஐயா. தங்களின் தொடர் வருகைக்கு மகிழ்கிறேன் ஐயா.
மிகவும் மகிழ்கிறேன் நண்பா. உன்னுடைய வருகைக்கு நன்றி சங்கர் ஆனந்த்..
அருமையான தகவல் அக்கா...வாழ்த்துக்கள் அக்கா
தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி இந்திராணி.
Post a Comment