கூட்டத்தில் தனித்து விளங்குவது சாலச்சிறந்தது..
என்னென்ன காத்திருக்கிறதோ..😞
தாய்மை என்பதற்கு அஃறிணை உயர்திணை என்ற வேறுபாடுகள் எதுவும் இல்லை..
நன்றியில் மனிதனை விட சிறந்தது.. (அஃறிணை படுத்தி கூற விரும்பவில்லை..)உயர்ந்தவர்கள் என்று சொல்லவே விரும்புகிறேன்.. உடல் மெலிந்த நிலையிலும் தனது குட்டிகளின் பசியை போக்கும் இவள். அன்பில் உயர்ந்தவளாக தெரிகிறாள்..
இவர்களை காணும் போது மனிதர்கள் ஏன் உயிரில்லாத பணத்தையும் புகழையும் பகையும் தேடி ஓடுகிறான் என்று தெரியவில்லை. இவர்களிடம் எதுவும் இல்லை ஆனால் ஏதோ ஒரு நம்பிக்கையுடன் வாழ்கிறது.. குறிப்பாக நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ்கின்றன..
இங்கு விலங்குகளை மட்டும் நான் குறிப்பிடவில்லை. ஏழையின் சிரிப்பிலும் இதனை காணலாம்.. பணத்தை உருவாக்கிய நாமே அதற்கு அடிமையாக இருப்பது பெருமையா. ? அற்பமா.? நோயா.? என்று தெரியவில்லை..
கேள்விகளுக்கு விடைத் தேடும் பயணத்தில் தொடர்கிறேன்...
No comments:
Post a Comment