Saturday, 11 July 2020

வாழ்க்கை எனும் ஓடத்தில்...



இன்றைய பதிவுக்கு போறதுக்கு முன்னாடி ஒரு கேள்வி.? முடிந்தால் எனக்கும் பதில் சொல்லுங்கள். ஆனால் கண்டிப்பாக உங்களுக்கு நீங்களே பதில் சொல்லிருங்க..
உங்களுடைய வாழ்க்கையின் முக்கியத்துவம் என்ன என்று தெரியுமா ? நீங்களா?  சமுதாயமா? 


நாம் எல்லாருமே ஏதோ ஒரு நோக்கத்திற்காக படைக்கப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் அல்லவா.. ஆனால் அது என்ன நோக்கம்?  எதற்கு ஓட்டம் ? ஏன் அமைதி?  எதற்காக விரக்தி?  முதலில் யாருக்காக வாழ்கிறோம்?  நமக்காக நாம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோமா?  என்ற பல ஐயங்களுடன் விடை தெரியாமலும் விடையைத் தேட முற்படாமலும் தானே கடந்து செல்கிறோம். என்றேனும் ஒரு நாள் நம்முடைய வாழ்க்கையின் படகு கடலில் இருக்கும் அலைகளை போல காற்று போகும் திசையில் போகிறதே அதனை நிறுத்தி வைக்க நங்கூரம் போன்ற கருவி எப்போது நம் வாழ்க்கையில் வரும் என்று யோசித்ததுண்டா? 

காரணம் நாம தானே ரொம்ப பிஸியா இருக்கிறோம் இதை பற்றி யோசிக்க நேரமில்லை. சாப்பிட்ட கூட நேரமில்லை. கிடைக்கும் நொடியில் தான் உறக்கமே இதுல வாழ்க்கையின் நங்கூரம் அப்படின்னு கேட்டா எப்படி யோசிப்போம். 

ஒரு நாளைக்கு எத்தனை (ஏ)மாற்றங்கள். எவ்வளவு இழப்புகள். விடியல் இருக்கான்னு தெரியாது ஆனாலும் அலாரம் வைப்போம். இறப்பு இருக்குன்னு தெரியும் ஆனாலும் ஆட்டம் போடுவோம். சூழ்ச்சி இருக்குன்னு தெரியும் ஆனாலும் மகிழ்ச்சியோடு இருப்போம். இப்படி ஒரு நாணயத்தின் இரண்டு பக்கம் போல வாழ்க்கையை வாழ்கின்றோம். இதுவா வாழ்க்கை ? 


  ஒரு வாழ்க்கை தான் நமக்கு பிடிச்ச மாதிரி இருக்க வாய்ப்பில்லை. அடுத்தவன் என்ன சொல்லுவான் அப்படின்ற கேள்வியின் பயத்தோடு மிச்ச வாழ்க்கையை மிச்சதோடு வாழ்றோம். கண் காது வாய் இவற்றுடன் நமது வாழ்க்கையும் கட்டி போட்டு தானே வாழ்கின்றோம்.கேட்டால் இப்படி பதில் வரும் ஒவ்வொரு கணமும் வாழனும் நேரம் பயனுள்ளதாக இருக்க வேண்டும் அப்படின்னு பல பதில்கள் வரும். இப்படி குதிரைக்கு கட்டிய கடிவாளம் மாதிரி ஒரே நேர் கோட்டில் பயணிப்பதில் என்ன சுவாரசியம் இருக்க போகிறது. ?

இறக்க தான் போகிறோம். எண்ணிலடங்கா சொத்துகளை சேர்த்து வைக்க ஓடினாலும் ஒரு ரூபாய் கூட எடுத்து செல்ல இயலாது. அதுவே நியதி. ஆனாலும் சமூகத்தில் நமக்கென்று ஒரு அந்தஸ்து ஏற்படுத்தவே ஓடுகிறோம் . அந்தஸ்துக்கு ஆசைப்பட்டு வாழ்க்கையை அவஸ்தைக்கு உள்ளாக்கி கொண்டு இருக்கிறோம்.இதுவே எதார்த்தம்.

இறப்பதற்கு ஒரு நொடி முன்பாக உங்களுக்காக நீங்கள் வாழ முயற்சி செய்யுங்கள். இங்க யாரும் யாருக்காவும் காத்திருக்க மாட்டார்கள். நொடிபொழுதில் மாற்றி கொண்டும் முகமூடி அணிந்து கொண்டும் தான் செல்கிறார்கள். அதனால் ஓடம் போல வாழாமல் இரசித்து ருசித்து அனுப்பவிச்சு வாழுங்கள். 

வாழ்க்கை வாழ்பவர்களுக்கு மட்டுமே சுவாரசியமாக இருக்கும். நான் சொல்றது சரியா இருந்தா ? இந்நேரம் உங்களுக்கு பதில் கிடைத்திருக்கும்...

கேள்விகளுக்கு விடைத் தேடும் பயணம் தொடரும்.. 

17 comments:

Swanthitha Murugan said...

Well said vaishu

Anu patricia said...

Akka🔥the reality is well said

Ramya manoharan said...

👏👏👏

Janani Eswaran said...

Exactly...

YUVARANI said...

Super

Vidhya Chandran said...

Ama ka .. விடையும் கிடைத்தது.. எனக்காக ஒடவும் தொடங்கினேன்.

Jeevi said...

💥🤩👏🔥

Unknown said...

Crt ha soninga akka 💯👌

திண்டுக்கல் தனபாலன் said...

இதுவும் கடந்து போகும்...

வைசாலி செல்வம் said...

நன்றி அக்கா

வைசாலி செல்வம் said...

மகிழ்ச்சி டா

வைசாலி செல்வம் said...

நன்றி

வைசாலி செல்வம் said...

மகிழ்ச்சி டா. வாழ்த்துகள்

வைசாலி செல்வம் said...

நன்றி

வைசாலி செல்வம் said...

உண்மை தான் ஐயா. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா.

Kasthuri Rengan said...

அலசல் அருமை

வைசாலி செல்வம் said...

மகிழ்ச்சி

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...