Friday, 17 July 2020

எழுதினேன் ஒரு கவிமடல்...


தலைப்பைச் சேருங்கள்

மட்டற்ற பேரின்ப மகிழ்ச்சியில்..


யாரும் எழுதாத எழுத்துகளையும் பேசாத வார்த்தைகளையும் யாராலும் பயன்படுத்தாமல் இருக்க முடியாது.. பலரின் பேச்சுக்களாலும் எழுத்துக்களாலும் வளர்ந்தவர்கள் தான் நாம்.. நான் வணிகவியல் துறை மாணவி என்பது கூட பலருக்கு தெரியாது.. நான் தமிழ்த்துறை மாணவி என்று கருதும் பலர் இங்குண்டு.. தமிழ் எனது தாய்மொழி எனது அடையாளம்.. மேடைகளில் பேசுபவர்களை பார்க்கும் போதும் பல புத்தகங்களில் புழுக்களாக இருந்து வாசிக்கும் போதும் நான் வியந்தது உண்டு.. எம் பாரதியே எனது வீரத்தின் அடையாளம்.. அவருக்கு அடுத்து நான் தமிழை இரசிக்க அவற்றில் இயங்க மற்றொரு காரணம் எனது கள்ளிக்காட்டு நாயகன் தான்.. தமிழை இயற்கையுடன் இப்படியும் ஒப்பிட்டு எழுதலாம் பேசலாம் என்று அவரிடம் இருந்து தான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.. 

கோடி இரசிகைகளில்  நானும் ஒன்று.. எத்தனை பேருக்கு இவர் பதில் அனுப்புவார் என்று தெரியவில்லை..எல்லாரையும் போல நானும் அவருக்கு ஒரு வாழ்த்து செய்தி அனுப்பினேன்.. அவருடைய நெருக்கடியான வேலைநேரத்திற்கு இடையில் எனது கவிமடல் அவருடைய பார்வைக்கு செல்லுமா என்று நினைத்தேன்.. ஆனால் எதிர்பார்க்கவில்லை அதனை படித்து எனக்கு பதிலுரை மின்னஞ்சல் செய்தி அனுப்புவார் என்று.. மின்னஞ்சல் கூட இரண்டாவது மகிழ்ச்சி தான் அவ்வளவு பெரிய மாமனிதனின் எழுத்துகளை இரசித்து வாழ்ந்து கொண்டிருப்பவள் நான்..அவருடைய பேனாவின் எழுத்துகளை தாங்கும் வெள்ளைத்தாளாக இருந்திருக்க கூடாதா என்று எண்ணாத தினங்கள் இல்லை.. இன்று அவருடைய மின்எழுதுகோலில் எனது பெயரை எழுதியது கூட ஒரு கவிதையாக கருதுகிறேன்..

என்னை எனக்கு அடையாளம் காட்டியவர் எனது ஆசான் முனைவர் இரா. குணசீலன் அவர்கள் தான். எனது பெயரை நான் விரும்பும் எனது கள்ளிக்காட்டு நாயகன் எழுதியதில் மீண்டும் உயிர்ப்புற்று எழுகிறேன்..இந்த ஆண்டில் பெரிதும் உடன்பாடு இல்லாமல் தான் இருந்தேன். வேலை மற்றும் நட்பு வட்டத்தில் பெரிதும் இழப்பை மட்டும் சந்தித்து வந்தேன். ஒன்றரை மாதங்கள் சமுகத்தளத்தில் இருந்து இடைவெளி எடுத்தேன். கள்ளிக்காட்டு நாயகன் அவர்களின் பிறந்த நாளுக்கு மீண்டும் இணையம் வர வேண்டும் என்று முடிவு செய்தேன். அதுபோலவே வந்தேன். அவருக்கு ஒரு படையல் விருந்து படைத்தேன் அதனை ருசித்து எனக்கு பதில் தந்ததும் எனது பெயரை உச்சரித்தும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..

எல்லாருக்கும் ஒரு ஆசை இருக்கும் தான் எழுதும் எழுத்துக்களை தான் நேசிக்கும் மனிதர்களின் பார்வைக்கும் அவரின் மனதிற்கும் செல்ல வேண்டும் அதற்கு ஒரு பதிலுரை வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு என்றுமே இருக்கும். அது நிறைவேறினால் அதற்கு இணை வேறு எதுவும் இருக்காது. அந்த பரவச நிலையில் தான் நான் இருக்கிறேன். பலருக்கு இது ஒரு பெரிய விஷயமாக தெரியாது. ஆனால் இந்த குறுஞ்செய்தி எனக்கு கிடைத்த அரிய பெரிய பொக்கிஷம்.அதனால் என்னுடைய இந்த மகிழ்ச்சியை எனது தமிழ் உறவுகளுடன் பகிர்ந்து மகிழ்ச்சியை இரட்டிப்பு ஆகுகிறேன்..

என்னை இணைய உலகிற்கு அறிமுகப்படுத்தியது எமது கல்லூரியும் எனது ஆசானும் தான்.. என்னை கவிஞருக்கு அடையாளம் காட்டியது எனது அன்பு அண்ணன் கேசவன் அவர்கள் தான். இவர்களுக்கு என் றும் நன்றியுடன் இருப்பேன்..

நான் அவருக்கு படைத்த விருந்தை ருசிக்காதவர்கள் மேலே உள்ள இணைப்பை சொடுக்கி ருசிக்கவும்.. எனக்கு எட்டிய தமிழில் இயற்றிய சிறிய படைப்பு..

நன்றி..
கேள்விகளுக்குவிடைத் தேடும் பயணம் தொடரும்...

13 comments:

Suhana Nasar Ahammed said...

U r so lucky ka 😎😘 proud of you ka😍

Yuvan tamizh said...

Super ma

திண்டுக்கல் தனபாலன் said...

மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

daisyasokkumar said...

நல்லது. நானும் ரசிகை அவரது ரசிகை.எனது எழுத்துக்களில் அவரது தாக்கம் இருக்கும்.

Unknown said...

மகிழ்ச்சி தோழி!! வாழ்த்துகள்!!

Unknown said...

🤩மகிழ்ச்சி சகோதரி ✨ மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் அக்கா 👍💪👌

வைசாலி செல்வம் said...

மகிழ்ச்சி தங்கையே.

வைசாலி செல்வம் said...

நன்றி

வைசாலி செல்வம் said...

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் ஐயா.

வைசாலி செல்வம் said...

நன்றி தங்கையே.

Ramya manoharan said...

sisy rocking 😍🔥🔥💯

வைசாலி செல்வம் said...

நன்றி டா

Peter Johnson said...

ஒரு தொலைநோக்குடன், ஓர் உயரிய குறிக்கோளுடன் இயங்கி வந்தால் உங்களுக்கு ஓர் ஒளிமயமான எதிர்காலம் அமைவது உறுதி. தொடர்ந்து எழுதி வாருங்கள்.பீட்டர், மலேசியா.

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...