#நூல்விமர்சனம்
நூல் : உன் மடியினில் மயங்கிய விழிகள்
ஆசிரியர் : தமிழ் ப்ரியன்
பதிப்பகம்: தெரியவில்லை ( அமேசான் கின்டலில் இலவசம்)
நம்ம பள்ளிபருவத்துல கல்விச் சுற்றுலா போயிருப்போம். இப்ப இருக்க ஜெனரேசன்-க்கு கல்விச் சுற்றுலா பற்றி தெரிய வாய்ப்பில்லை. இன்னைக்கு பள்ளியில் எல்லோரும் இன்பச் சுற்றுலா தான் போறாங்க. அப்பலெல்லாம் பள்ளிச்சுற்றுலா போறப்ப அம்மா அப்பா -ன்னு எல்லாருமே பள்ளிக்கூட வாசல வந்து நிப்பாங்க. கல்யாணம் பண்ணிக் கொடுத்தா கூட அப்படி அழுந்து இருப்பாங்களான்னு தெரியல. ஆனா கண்ணீர் மல்க பஸ் தெருமுனையை திரும்பற வரைக்கும் அவங்க கண்களும் கைகளும் நம்மல நோக்கி தான் இருக்கும். இப்படி சென்றது தான் அந்த கால கல்விச் சுற்றுலா. இக்கதையிலும் அதுவே மையம். கதையின் ஹீரோ யாதவ் கல்விச் சுற்றுலா செல்கிறான். அவனுடன் படிக்கும் மித்ரா கதையின் ஹீரோயின். அவனுடன் அவளும் அவளுடன் அவனும் பேசும் மௌன வார்த்தைகளே இங்கு காதல் வசைமொழியாக இருக்கிறது. பொதுவாக இன்னைக்கு இருக்குற காதல் என்பது காற்றில் கரைந்து போகும் வாசனை போல. அதற்கு உருவமும் இல்லை. காலமும் இல்லை. அதனால் தான் இன்றைய காதலர்களுக்கு இடையில் வார்த்தைகள் அதிகமாகவும் உணர்வுகளும் புரிதல்களும் குறைவாக இருக்கிறது. இதனாலேயே பல பிரிவுகள் இறப்புகள் ஏற்படுகிறது. அன்றைய காலத்தில் உணர்வுகளும் புரிதலும் மௌனமும் தான் காதலின் அதிகபட்ச வார்த்தைகள் ஆகும். அதனால் தான் அந்த காதலர்கள் இன்று வரை பேசப்படுகின்றன. இக்கதையிலும் இருவரின் எழில் மிகு மௌனமும் கண்களின் பரிபாசைகளும் அவர்களின் புரிதலையும் விருப்பத்தையும் வெளிப்படுத்தியது.
நூலை வாசிக்க இல்லை வசிக்க என்னுள் பட்டாம்பூச்சி சிறகு விரித்தது என்று கூட சொல்லலாம். சிறுகதை தான் ஆனால் ஆழம் பெரிது. பள்ளிக் காதல் கல்யாணத்தில் முடிவது என்பது வரமே. அதற்கு முக்கிய காரணம் அவர்களின் பக்குவம். அந்த காதல் காமத்தை தீர்க்க முயற்சி செய்யலாம் காதலை மட்டும் பகிர்ந்து கொள்ள முயற்சி செய்ததன் விளைவு தான் அவர்களின் அழகான இல்லற வாழ்க்கைக்கு காரணம் என்று கூட சொல்லலாம். நேரம் போனது கூட தெரியவில்லை. இந்நூலின் ஆசிரியர் காதலுடன் காதலர்களையும் அழகுற வர்ணிக்கப்பட்டு எடுத்தியம்பியுள்ளார். மௌனமே உறவின் புரிதல் என்பது மறுமுடியாத உண்மையாக இந்நூல் அமைந்துள்ளது.
நன்றி மீண்டும் ஒரு நூல் விமர்சனத்துடன் தங்களை சந்திக்கிறேன். கேள்விகளுக்கு விடைத் தேடும் பயணம் தொடரும்..
12 comments:
Spr it really crt
விமர்சனம் அருமை
நன்றி
நன்றி
அருமையான கதை .
மௌனமே உறவின் புரிதல் என்பது மறுக்க முடியாத உண்மை...அருமையான விமர்சனம் அக்கா...
அருமை
நன்றி டா
மகிழ்ச்சி டா
நன்றி சகோ
simply awesome 😻
மகிழ்ச்சி டா
Post a Comment