கமலி சு.சு |
காதல் தோல்வி -ன்னு கேள்விப்பட்டு இருப்போம். அதென்ன முதல் காதல் தோல்வியா ? அப்படின்னு யோசிக்கறீங்களா? முழுமையா இந்த பதிவை படிங்க. சுறுக்கமா சொல்லிடுறேன்.அப்புறம் சொல்லுவீங்க கல்யாணத்துக்கு முன்னாடி எத்தனை காதல் தோல்விகளை நாம கடந்து வந்திருக்கோம் -ன்னு...!
காதல் என்ற வார்த்தை ஆண் பெண் இருபாலருக்கு மட்டுமே என்ற பொதுவான சிந்தனை உடைய அனைவருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.. காதல் என்பது கருவறையில் தொடங்கி கல்லறையில் முடியும் ஒரு தொடர்கதை. நாம செய்யற எல்லா விஷயங்களிலும் காதல் இருக்கும்.
முதல் நாள் பள்ளிக்கு போகும் போது முதல் முதலாக சீருடை போட்ட நாட்கள் என்றுமே பசுமையான காதல் நிறைந்த தருணமாக இருக்கும். பள்ளி முடித்து கல்லூரி, கல்லூரி முடித்து வேலை இப்படி பல பரிமாணங்கள் அடையும் போது நாம் காதலை உணர்ந்து இருப்போம்.
நாம முதன் முதலாக ஆசைப்பட்ட ஒரு பொருளோ இடமோ இதயமோ எதுவாக இருந்தாலும் சரி அது கிடைக்கா விட்டால் உடனே ஒரு தோல்வி நிலை அடைந்த உணர்வுக்கு தள்ளப்படுவோம். அதுதான் காதல் தோல்வின்னு சொல்றோம். இதுக்கும் காதலுக்கும் என்ன இருக்குன்னு தானா யோசிக்கிறீங்க. நம்முடைய ஆசை என்பது நாம் விரும்பியது தான். நம் காதல் தான் நமது ஆசை. அப்போ சின்ன வயசுல இருந்து நாம எத்தனையோ விஷயங்கள் மேல ஆசைப்பட்டு இருப்போம் அது கிடைக்காமலும் போயிருக்கும். பெரும்பாலும் கிடைச்சுருக்க வாய்ப்பில்லை. நாம ஆசைப்பட்டது சீக்கிரமாக நமக்கு கிடைச்சுருச்சுனா அதுல சுவாரசியம் இருக்காது என்பது நிதர்சனமான உண்மை.
ஆனால் பல தோல்விகளை தாங்கி கொள்ளும் நம் இதயம் காதல் தோல்வியை மட்டும் தாங்கி கொள்ளாது. காரணம் அந்த காதலை நாம் இறுதிவரை கொண்டு போக வேண்டும்.அதனுடன் பயணிக்க வேண்டும் என்ற பல கனவுகளுடன் வாழ்ந்து இருப்போம். கால சூழ்நிலையால் பல காதலர்கள் பிரிந்து விடுக்கின்றனர். ஒன்று புரிந்து கொள்ளுங்கள். இங்கு காதலர்கள் தான் தோல்வி அடைகிறார்களே தவிர காதல் அல்ல. உண்மையான அன்பு என்றுமே நிலைத்து இருக்கும்.
பிரிவு கூட காலம் நம்மிடம் சொல்ல முற்படும் ஒரு செய்தியே. சங்க காலத்தில் காதலுக்கு பலவற்றை தூது விடுத்தார்கள். அன்று புரிதல் இருந்தது. பொறுமை இருந்தது. ஆனால் இன்று அப்படி இல்லையே. ஆணும் பெண்ணும் நீண்ட நாட்கள் நட்பாகவும் காதலாகவும் இருக்க முடியவில்லையே.காரணம் ஆசைகளின் உச்சம். உணர்வுகளின் கட்டுபாடுற்ற தன்மை தான் காரணம்.
சிலர் இருப்பார்கள் ஒரு தோல்விக்கு பிறகு காதல் இல்லை திருமணம் இல்லை வாழ்க்கை இல்லை. அவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. யாருக்கு யார் என்று ஒரு விதி இருக்கும் அதன்படியே எல்லாம் நடக்கும். ஒன்று நம்மை விட்டு விலகி செல்கிறது என்றால் அதைவிட ஒன்று நிச்சயம் நல்லது நம்மை வந்து சேரும் என்று முதலில் நம்புங்கள்.
முதல் காதலியோ காதலனோ பிரிந்தால் அதனுடன் வாழ்க்கை முடிந்து விட்டது என்று அர்த்தமில்லை. அவர்கள் இருந்த இடத்தில் இன்னொருவரை வைத்து பார்க்க மனதை செலுத்தக் கூட முயற்சி செய்யாமல் இருக்க வேண்டாம். காதல் என்றுமே இருக்கும் ஆனால் அந்த காதலை உணர தான் காதலர்கள் இல்லை. முன்னாள் இருந்த காதலை விட அடுத்த காதல் உங்களை நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகம் காதலும் அக்கறையும் கொண்டு இருந்தால் வெறுத்து ஒதுக்கி வைப்பது யாருடைய தவறு ? பிறகு காதல் தோல்வி-ன்னு சொல்லிட்டு சுற்றி திரிய போறீங்களா?
போங்க பாஸ் இங்க காதலை வெளிப்படுத்தி காதல் தோல்வி அடைந்தவர்களை விட தன்னுடைய காதலை வெளிப்படுத்த முடியாமல் அவங்க சந்தோஷமா இருக்கட்டும்-ன்னு வெளில சொல்லமா தோற்ற காதல்களோட எண்ணிக்கை அதிகம். அதுக்கு தான் வலி அதிகம். காதல் தோற்கவில்லை. காதலர்கள் தான் தோற்கிறார்கள் காதலிடம்.
இரண்டாவது வர வாய்ப்பை தவற விடாதீங்க.அது முதல் வாய்ப்பை விட அதிகம் திறன் வாய்ந்ததாக இருக்கலாம். அது காதலாக இருந்தாலும் சரி நட்பாக இருந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் சரி. காதலை கொண்டாடுங்கள் காதல் உங்களை அரவணைக்கும். ஒரு புரிதல் இல்லாத பிரிவு நன்மைக்கே. புரிதல் உள்ள உறவு என்றுமே காத்திருக்கும் அதிக நம்பிக்கையுடன். அந்த நம்பிக்கைக்கு உங்கள தயார் செய்யுங்கள்.
முதல் காதல் யாருக்கும் தோல்வியே.யாரும் முதல் காதலில் வெற்றி அடைந்தவர்கள் இல்லை என்பதே நிதர்சனம். வீணாக மனதை மேலும் மேலும் காயப்படுத்தாம அடுத்து என்ன என்பதை ஆழமாக யோசிங்க. உங்களை தொடர்ந்து தேடி வரும் உறவுகளை மறுபடியும் தவறவிட்டு தேடி அலையாதீர்கள். அந்த உறவை உதாசீனம் படுத்தாதீர்கள். முதலில் உங்களை நீங்களே காதல் செய்ய பழகுங்கள். அதுவே மற்றவர்கள் உங்களை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும்.
இப்போ புரிஞ்சு இருக்கும் என்று நம்புகிறேன்.தோல்வியே அனைத்திற்கும் முதற்படி. காதல் மட்டும் என்ன விதிவிலக்கா? கொண்டாடுங்கள் உங்கள் முதல் தோல்வியை..உடைத்து விடுங்கள் உங்கள் ஆழ்மன சோகத்தை இன்றுடன்..வண்ணத்துப்பூச்சியாக பறந்து செல்லுங்கள் வானமும் வசப்படும்..
கேள்விகளுக்கு விடைத் தேடும் பயணம் தொடரும்....
25 comments:
💞 Super sis 💞
Nice akka
Super akka .. awesome ha sonigaa
அருமை
What you said is absolutely true vaishu
🔥your words are ...🔥
👌👌
நன்றி டா
நன்றி டா.
மகிழ்ச்சி டா.
மகிழ்ச்சி
பேரன்பு மகிழ்ச்சி அக்கா.
பெரு மகிழ்ச்சி அனு.
🥰🙂
words🔥
Love is not about how many days, months or years you've been together. Love is about how much you love each other every day...
மிக அருமையான பதிவு அக்கா...
வாழ்க்கையில் சில தருணங்களில் வழுக்கி விழுதல் இயல்பே. வீறு கொண்டு எழுதல் பெருமையைத் தரும் என்பதை நாம் நினைவில் கொள்ளுதல் வேண்டும்.
காதலிக்கும் மனதிற்கு மனவலிமை அதிகம்.காதலுக்கு அன்பை கொடுக்க மட்டுமே தெரியும்.காதல் அனைத்து உயிர்களிடமும் காணும் பாச உணர்வு....
மகிழ்ச்சி
உண்மையே நந்தித்தா
நன்றி டா
முற்றிலும் உண்மை ஐயா.
உண்மை இந்துஜா
அருமை சகோதரி
Post a Comment