Thursday, 23 July 2020

களவாடிய பொழுதுகள்...



#நூல்விமர்சனம்

நூல் : களவாடிய பொழுதுகள்

ஆசிரியர் :  இரா.புகழேந்தி

பதிப்பகம் : தெரியவில்லை ( அமேசான் கின்டலில் இலவசம் )


களவு என்றாலே திருட்டு தான்.  பெரும்பாலும் நமது எண்ணங்கள் செயல்கள் கருத்துகள் எல்லாவுமே பிறரால் களவு செய்யப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை. நமது பொழுதுகள் களவாடுவதும் அன்பின் உச்சம் தான். தனிமை என்பது வரம் தான். அதை நாமாக எடுக்கப்படும் போது தனிமை வரமாக இருக்கும். அதுவே ஒருவரால் நமக்கு தனிமை தரப்பட்டால் அது கொடுமையானது தான். தனிமையான பொழுதுகளில் நம்மால் நம்மை ஆழமாக புரிந்து கொள்ள முடியும். தனிமையில் தான் நமது பலமும் பலவீனமும் நமக்கு தெரிய வரும் என்பது திண்ணம்.

நம்மில் பலருக்கும் தனிமை பிடிக்கும். அதுவே நமக்கு பிடித்த நபர்களுடன் ஒரு தனிமை என்றால் இன்னும் பிடிக்கும் அல்லவா.? அதுவே தாம் விரும்பு மனம் சிறிது தள்ளி இருக்கும் போது அவர்கள் பற்றிய எண்ணங்களின் தொகுப்பு இன்னும் தனிமையை அழகாக்கும் அல்லவா. நம்மவர்களின் நிழல் கூட நம் பொழுதுகளை களவாடி விடும். எதிரெதிர் பாலினம் என்றே ஒரு ஈர்ப்பு இருக்கும். இந்நூல் கவிதைத் தொகுப்பு நூல். நூலின் ஆசிரியர் தன்னுடைய என்னவளுக்காக கற்பனையில் வண்ணம் தீட்டுகிறார்.அவளின் பிரிவு காலத்தில் அவர் மேற்கொள்ளும் தனிமையை ஓவியமாக தீட்டுகிறார். "பாதி எழுதிவிட்ட காவியமா புரட்டிய பக்கங்களும் திரும்பிடுமா இது எழுத்து பிழையா இல்லையெனில் எழுதாத பிழையா அதையும் தாண்டி எழுதிக் கிழித்திட்ட நிலையா!" என்னை மிகவும் கவர்ந்த வரிகள் என்று கூட சொல்லலாம். முதல் கவிதையில் இவ்வரிகளோடு தொடர்ந்து "தொலைத்துவிட்ட என் எழுத்துக்களை மீட்டெக்கிறேன் - என் யாழே அதன் வழியே உன்னை மீட்டெடுக்க!!! " இவ்வரிகளோடு தீட்டி முடிக்கிறார்.

ஒரு எழுத்தாளருக்கு எழுதுவது தான் மிக கடினம். காரணம் எழுத்துகளுக்கு சக்தி உண்டு. மன எண்ணங்களின் ஓட்டம் தான் எழுத்துகள். பேச்சுக்களை விட எழுத்துகளுக்கு சக்தி அதிகம். ஆயிரம் முறை படித்தாலும் ஒரு முறை எழுதி பார்த்தால் மனதில் தங்கிவிடும். அதுபோல தான் இந்நூலில் தனது காதலி மீது தனக்குள்ள காதலை எழுத்துகள் மூலம் மெய்பித்துள்ளார் கவிஞர்.

நன்றி.
மீண்டும் ஒரு நூல் விமர்சனத்துடன்தங்களை சந்திக்கிறேன். கேள்விகளுக்கு விடைத் தேடும் பயணம் தொடரும்.


16 comments:

Ramya Prabu said...

Nicely narrated

கரந்தை ஜெயக்குமார் said...

படிக்கத் தூண்டும் விமர்சனம்

வைசாலி செல்வம் said...

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் சகோ.

வைசாலி செல்வம் said...

மகிழ்ச்சி ஐயா.வாசியுங்கள்..

Unknown said...

Fantastic dear

Ramya manoharan said...

💜supr ah solirukinga💜kaa

Joy Mellow Queen said...

Awesome sis🔥

Unknown said...

😍அருமை சகோதரி 👌 தனிமையை நேசிக்கும் அனைவரும் மனது அளவில் பலம் உடையவராக இருப்பார்கள் ✨🔥.

indhujasenthilkumar said...

நல்ல எண்ணத்தை களவாடியதால் பல நூல்கள் சிலரை களவாடுகிறது..

indhujasenthilkumar said...
This comment has been removed by a blog administrator.
வைசாலி செல்வம் said...

நன்றி

வைசாலி செல்வம் said...

நன்றி டா

வைசாலி செல்வம் said...

நன்றி மா

வைசாலி செல்வம் said...

உண்மையே

வைசாலி செல்வம் said...

உண்மையே.

Anu patricia said...

Super akka

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...