Friday 31 July 2020

வார்த்தைகளே எல்லாம்...



வரைபடம் : சஞ்சுனா தேவி 

வார்த்தைகள் பாராட்டும் போதும் மனமகிழ்ச்சி தருகிறது. அதே வார்த்தை ஆறுதல் தரும் போது விமோசனம் தருகிறது.. 


கோவத்தின் போது வெளிப்படும் வார்த்தைகள் மன உளைச்சலை தருகிறது.. வார்த்தைகளே சிலரின் வெளிப்பாடு ஆகும்..

பிடிக்காதவர்கள் பேசும் வார்த்தைகள் எரிச்சல் தருகிறது.. பிடித்தவர்கள் பேசும் வார்த்தைகள் நம்பிக்கை தருகிறது.. 

பெற்றவர்கள் பேசும் வார்த்தைகள் சிந்திக்க வைக்கிறது. உறவினர்கள் பேசும் வார்த்தைகள் வேதனையை தருகிறது. வயதானப் பிறகு பேச ஆள்ளில்லையே என்ற வருத்தம்.

நண்பர்கள் பேசும் வார்த்தைகள் சில மகிழ்ச்சியான நேரங்களில் மன நிம்மதியை தருகிறது.

வார்த்தைகளுக்கு சக்தி உண்டு தான்.. வார்த்தைகள் பலரை உருவாக்கவும் உதவும் சிலரை அழிக்கவும் செய்யும்... 

கேட்கும் காதுகள் கிடைத்தால் எவ்வளவு வார்த்தைகள் இருக்கிறது பேசுவதற்கு.. காதுகளாக இருக்கவே சில நேரங்களில் விரும்புவேன்.. ஒவ்வொரு மனிதனுமே ஏதோ ஒரு காலச் சூழலில் சிக்கிக் கொண்டு தான் தவிக்கின்றனர். அவர்கள் உதவிச் செய்ய முடியவில்லை என்றாலும் ஆறுதலாகவும் நம்பிக்கையாகவும் இருந்திடப் பெரிதும் விரும்புகிறேன். 

வார்த்தைகளுக்கு சக்தி உண்டு என்பதை அதைவிட பெரியதாக நம்புகிறேன்.. எனக்கு மிகவும் பிடித்த ஒரு வாக்கியம் இரண்டு வயது ஆவதற்குள் பேசக் கற்றுக் கொள்கிறோம். ஆனால் எத்தனை வயது ஆனாலும் எப்படிப் பேச வேண்டுமென்று தான் கற்றுக் கொள்ளவதில்லை. இதன் பொருள் மிகவும் அழகானது.  நான் பல நேரங்களில் அன்பின் மிகுதியால் வார்த்தைகளை அதிகம் விதைத்து விடுவேன். அப்போதெல்லாம் என்னை சற்று கவனிக்க வைக்கும் வரிகள் இவை.

அதனால் தான்  நாவினால் சுட்ட வடு  என்றாரோ  வள்ளுவர்.. அடித்தால் கூட தாங்கி கொள்ள முடியும்.. பேசி விட்ட வார்த்தைகள் அதனால் ஏற்பட்ட  வடுவை ஏற்படுத்தியவரை தவிர வேறு யாராலும் சரி செய்ய முடியாது என்பதும் நிதர்சனமான உண்மை. 

கெட்டது பேச கேலிப் பேச குறைகள் பேச ஆயிரம் வாய்களும் நாக்குகளும் உண்டு. ஆனால் நம்பிக்கை விதைத்திட ஆறுதல் அளித்திட அன்பை பகிர்ந்திட சில வார்த்தைகளும் சில மௌனங்களும் தான் இருக்கும். 

அன்பானவர்களுக்கு உங்கள் வார்த்தையில் அன்பையும் ஆறுதலையும் நம்பிக்கையும் விதைத்துப் பெற்றிடுங்கள்..பேசுங்கள் மற்றவர்களையும் பேசவிட்டு அவர்களின் வலிகளுக்கு வழிக்கொடுங்கள்..முடிந்தால் விடைக் கொடுங்கள்..

கேள்விகளுக்கு விடைத் தேடும் பயணம் தொடரும்..

5 comments:

Janani Eswaran said...

உண்மை...! உண்மை ....!மறுக்க முடியாத உண்மை .!!

Unknown said...

Nice

Ramya manoharan said...

ur 'words' melted ♥️kaa....,,,

Unknown said...

Nice

Unknown said...

உண்மை தோழி

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...