வரைபடம் கமலி சு.சு |
அட கொஞ்சம் அமைதியா இருப்பா..
சத்தம் போடாதப்பா..
மெல்ல பேசுப்பா..
நொய் நொய்ன்னு இருக்காதப்பா..
சிரிச்சுட்டே இருப்பியா..
சண்டைக்குன்னே வராதப்பா..
இப்படி பல கோணங்களில் பலர் பேசி கேட்டு இருப்போம். ஏன் நாமலும் சில நேரங்களில் பயன்படுத்தி இருப்போம். வார்த்தைகள் என்பது உணர்வின் மொழி உள்ளத்தின் வெளிப்பாடு அன்பின் அடையாளம் செயலின் மூலதனம். வார்த்தைகளே நாம் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தும். சில வார்த்தைகள் வாழ்க்கையை கொடுக்கும் சில வார்த்தைகள் வாழ்க்கையை கெடுக்கும். இப்படிப்பட்ட வார்த்தைகளை அடக்க முயல்வது ஏன் ?
பெண்களுக்கும் ஆண்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன தெரியுமா ? ஆண்களை காட்டிலும் பெண்கள் தான் அதிகம் பேசுவார்களாம். இது உலகமறிந்திட்ட உண்மை. இது பலருக்கு கேலியாக இருக்கலாம். வெறுப்பாக கூட இருக்கலாம். ஆனால் பெண்கள் ஏன் இவ்வளவு பேசுகிறார்கள் என்று யோசித்தது உண்டா ? ஏன் பெண்களே யோசித்து இருப்பார்களா என்று தெரியவில்லை.
மனோவியல் படி பார்த்தால் பெண்கள் அதிகம் ஆழ்மனம் அளவில் தனிமையில் இருப்பவர்கள் தான். சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும் தன் உள் உணர்வுகளை வெளிப்படையாக சொல்லமாட்டார்கள். காரணம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தவறு கூட தப்பு என்று தான் கூறுவார்கள்.
அதென்ன தப்பு தவறு என்று புதிராக சொல்றேன்னு யோசிக்கிறீங்களா? ஆம். தவறு வேறு தப்பு வேறு. தவறி செய்வது தவறு அதை மாற்றி கொள்ள இயலும். எனவே அது தவறு என்று ஆகாது. தப்பு என்பது தெரிந்தே செய்வது. அதிலிருந்து மீள்வது சற்று கடினம். எனவே அது தப்பு என்று கூறலாம். பெண்களை பொறுத்த வரை எல்லாம் தப்பு தான். என்னடா இப்படி சொல்றேன்னு மறுபடியும் யோசிக்காதீங்க.
ஆமாம் பெண்கள் அவ்வளவு எளிதாக யார் மீதும் முழு நம்பிக்கையும் அக்கறையும் நேசமும் காதலும் நட்பும் கோபமும் வெறுப்பும் வைக்க மாட்டாள் என்பது யாரும் எளிதில் புரிந்திடாத ஒரு புதிராகவே இருக்கும். பெண்களுக்கு முன் புத்தி பின் புத்தி என்று சொல்லுவாங்க. பின் நடக்க போவதை முன்பே அறியும் திறன் பெண்களுக்கு உண்டு.
பெண்களின் சிரிப்பு கூட வரலாற்று கதை உண்டு. மகாபாரதமே சிறந்த உதாரணம். பெண் சிரிச்சா போச்சு என்ற பழமொழி அங்கிருந்தே தொடங்கியது. அதனால் பெண் என்பவளை சிந்து சமவெளி காலம் முதல் இன்று வரை மெல்லினம் என்றே அழைக்கிறார்கள். அதாவது மென்மையானவள் என்று. பெண்கள் மென்மையாக இருப்பதால் தான் அவளின் அன்பு அக்கறை நேசம் நட்பு எல்லாவும் எளிதில் கசக்கி வேரோடு பிடுங்கி எறியப்படுகிறது.
காதலியோ தோழியோ மனைவியோ அம்மாவோ சகோதரியோ இப்படி யாராக இருந்தாலும் அவர்கள் உங்களிடம் பேசும் போது கொஞ்சம் செவி கொடுத்து கேளுங்கள். உங்களுக்கு அது புலம்பாக இருக்கலாம். சில நேரங்களில் வியப்பாகவும் வெறுப்பாகவும் இருக்கலாம். ஆனால் உங்களை சுற்றியே அவளின் மொத்த வாழ்வும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு கொஞ்சம் நேரமும் சற்று ஸ்பரிசமும் கொடுப்பதில் தவறில்லையே.
உங்களுக்காக எதையும் செய்ய நினைப்பவளுக்கு காசும் சொத்தும் வேண்டாம். அவளுக்கு தேவை அவளின் மௌனங்களை உரிமையாக உண்மையாக சப்தமாக நம்பிக்கையுடன் தோழமையுடன் உடைக்க ஒரு தோளும் அரவணைப்பும் தான். அதை மட்டும் வழங்கி பாருங்கள். பெண்கள் என்றால் டார்ச்சல் வாயாடி திமிரு பிடிச்சவள் என்பதை கடந்து அவளுக்கும் உணர்வுகள் உண்டு அக்கறை உண்டு என்று நினைப்பீர்கள்.
ஆண்களே உங்களுக்கு காதல் தோல்வி இருப்பது தெரிந்தும் ஒரு பெண் உங்களிடம் உரிமை எடுத்து அன்பு அக்கறை காட்டுகிறாள் என்றால் அது உங்களின் எதிர்காலம் மீதும் உங்களின் நலனின் மீதும் நீங்காத நம்பிக்கையும் அன்பும் தான் காரணமே தவிர மீண்டும் உங்களை ஏமாற்ற அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக பெண்களுக்கும் காதல் தோல்வி உண்டு. இங்கு யாரும் சீதையும் இல்லை ராமனும் இல்லை என்பதே நிதர்சனம்.
இன்று இப்போதைய நிலை நாளை மாறலாம். மனிதர்களும் மாறலாம். ஆனால் நம்முடைய இந்த கணம் இந்த நினைவுகள் என்றுமே பசுமையானதாக இருக்கும். பெண்களை மதியுங்கள் என்று சொல்லவோ பெண்களுக்கு மட்டுமே இதெல்லாம் இருக்கிறது என்று சொல்லவோ இந்த பதிவு இல்லை. ஆண்கள் கூட வெளிப்படையாக தன் உணர்வுகளை வெளிப்படுத்த இயலும். கவலையை மற(றை)க்க பல வழிகள் உண்டு ஆனால் பெண்களுக்கு அவள் வெளிப்படுத்தினால் அடுத்த நொடி முதல் அவள் ஒதுக்கி வைக்கப்படுவாள்.
கொஞ்சம் நேரத்தை செலவிடுங்கள் உங்கள் மௌனத்தை புரிந்து கொள்ளும் தோழிக்கு கொஞ்சம் செவியும் சில வார்த்தைகளையும் சில நேரம் அன்பளிப்பாக வழங்குங்கள்.
அன்பு கொடுத்து பெற வேண்டும். ஒருவர் மட்டுமே கொடுப்பதும் அதை நிராகரிக்கப்பட்டு இருப்பதும் உறவின் விரிசலுக்கு வழிவகுப்பது ஆகும். ஈகோ என்பது உறவில் இருக்க தேவையில்லை.
பல மௌன தாரகைகளின் ஒருவராக எனது கேள்விகளுக்கு விடைத் தேடும் பயணம் தொடரும்...
15 comments:
அருமை அக்கா .. இவ்வாறு அனைவரும் புரிந்து கொண்டாள் பெண்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள்
👍👍👍👍🤝🤝
True lines 👌❣️
Super madam! 💐
என் மனதின் மொழிகள் போல் தோன்றுகிறது
நான் வெளிபடுத்த நினைத்த கருத்துக்கள்
மௌனத்தின் மொழிகளுக்கு பல அர்த்தங்கள் உண்டு.சில நேரங்களில் கேள்வியாக பேசும் !சில சமயங்களில் பதிலாக!சில இடங்களில் புதிராக!... தொடரும் அர்த்தங்கள்...
தங்கள் பயணத்தில் ஒருவராக நானும் தொடருகிறேன் மௌனமாக..
உண்மை தான் தங்கையே.
🙂
நன்றி
மகிழ்ச்சி
உண்மையே.
பேரன்பு மகிழ்ச்சி. மௌனத்தை கலைக்க முயற்சி செய்யுங்கள். நான் செவி கொடுக்கிறேன். சகோ
nice
👏👏👏
Post a Comment