Monday 6 July 2020

மகிழ்ச்சிக்கும் அன்புக்கும் விலை என்ன ?




துன்பம் உண்டாயின் அன்றே இன்பமும் உண்டாகும் என்று குகப்படலத்தில் ராமபிரான் தனது படகு ஓட்டி நண்பரான குகனிடம் கூறுவார். இந்த வரிகள் நான் பள்ளி பருவத்தில் கம்பராமாயணம் படிக்கும் போது மனதில் ஆழமாக பதிந்தவை. 

எவ்வளவு நெருக்கடி நிலையில் இருந்தாலும் இந்த வாக்கியமே சற்று உயிர்தெழும்ப செய்யும். இன்றைய காலகட்டத்தில் சிரிப்பு & மகிழ்ச்சி என்பது எல்லாமே ஏதோ மளிகை பொருட்கள் வாங்குவது போல மிகவும் சிக்கனமாக பயன்படுத்துகிறோம். 

நம்மையே அறியாமல் நாம் சிரிக்கும் தருணத்தில் உடனே உள்மனம் நம்மிடம் பேச துவங்கும். ஏய் வேண்டாம் இவ்வளவு சிரிக்காதே.! நீ சிரிக்கற அளவுக்கு அழுகையோ கஷ்டமோ வரும். அப்படின்னு சொல்லும். இது எதார்த்தம் தான். ஆனால் இதுவும் ஒரு அனுபவம். வாழ்க்கை எல்லா நேரங்களிலும் இன்பத்தையோ துன்பத்தையோ மாறி மாறி தான் தரும். ஒன்றை மட்டுமே நீண்ட நாட்களுக்கு நம்முடன் இருந்தால் நமக்கே சலித்து விடும். 

இப்ப இருக்கின்ற காலத்தில் காசு கொடுத்து லாஃபிங் தெரபி என்று சொல்லிக் கொண்டு கூட்டம் கூட்டமாக சிரிப்பு பயிற்சியை எடுக்கிறார்கள் படித்த மேதாவிகள். கேட்டால் உடல் & மனம் கட்டுப்பாடு என்று சொல்வார்கள். மனம் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பது சிறு குழந்தைக்கும் தெரியும் அல்லவா. 

துன்பம் வரும் வேலையில் கண்களை மூடி அழுவதை காட்டிலும் மனம் திறந்து சிரித்து பழகுங்கள். சிரிப்புகள் கூட பல்வகை உண்டு. எதற்கு சிரிக்கிறோம் ? எந்த சூழலில் சிரிக்கிறோம் ?  பிறரின் மனம் நோகும்படி சிரிக்கிறோமா ? என்று ஆராய்ந்து பார்த்து இன்பமாக சிரிக்கலாம். என்னடா சிரிங்க சொல்லிட்டு இத்தனை கட்டுப்பாடா என்று யோசிக்க வேண்டாம். ஒரு நிமிட சிரிப்பு கூட பல நேரத்திற்கு நம்பிக்கையை நம்முள் விதைக்கும். அதனால் நிலையறிந்து இன்பமாக இருக்க வேண்டும்.


எதற்கும் அளவு உண்டு என்பார்கள்.ஆனால் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தை அணைப்போட்டு தடுக்க இயலுமா ? அதுபோல தான் அளவு கடந்த இன்பத்தையும் அன்பையும் தடுக்க நம்மை தவிர வேறு யாருமே இல்லை என்பதை புரிந்து கொண்டாலே வாழ்வில் பெரிய துன்பங்களையும் இலகுவாக இன்பத்தில் கடந்து விடலாம். 

மகிழ்ச்சிக்கும் அன்புக்கும் விலையும் எல்லையும்  இல்லை..
மகிழ்ச்சியை பரப்புங்கள்.. அன்பை விதையுங்கள்.. சிரிப்பை பரிசளியுங்கள்..வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும்.. 




16 comments:

Anu patricia said...

Lovely Ka❣️

Ramya manoharan said...

❤️ unmaiiyae

Unknown said...

அருமை சகோதரி 👌✨

Allan said...

நல்ல கருத்து என் தோழி. ஆனால் எதற்கும் அளவு உண்டு என்பது உண்மை. அதை மாற்ற முடியாது. நானும் சிரிக்கின்ற நேரத்தில் எல்லை இல்லாமல் சிரித்து விடுவேன். அது தேவை தான்.

YUVARANI said...

அற்புதமான பதிவு உண்மையில் இன்றைய காலத்தில் நிறைய பேர் சிரிப்பை சிக்கனமாக தான் பயன்படுத்துகின்றார்கள். காலத்திற்கு ஏற்ற பதிவு தான்

Vidhya Chandran said...

மிகவும் அருமையான செய்தி அக்கா....

said...

வாய் விட்டு சிரித்தாள் நோய் விட்டு போகும்.கை கொட்டி சிரித்தாள் பிறர் மனம் புன்பட்டு போகும்.தோள் தட்டி சிரித்தாள் உற்சாகம் ஊற்றெடுக்கும்.ஊற்று போல நாம் நம் புன்னகையால் நம் சுற்றத்தை உற்சாகப்படுத்துவோம்

வைசாலி செல்வம் said...

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் தங்கையே .

வைசாலி செல்வம் said...

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.

வைசாலி செல்வம் said...

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் சகோ

வைசாலி செல்வம் said...

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.மகிழ்ச்சி நண்பா

வைசாலி செல்வம் said...

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.மகிழ்ச்சி

வைசாலி செல்வம் said...

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் தங்கையே.

வைசாலி செல்வம் said...

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.மகிழ்ச்சி

Unknown said...

Spread love

வைசாலி செல்வம் said...

மகிழ்ச்சி

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...