Tuesday, 7 July 2020

பேராசைப் படு தவறில்லை..



ஆசை தான் துன்பத்திற்கு காரணம் என்றார் புத்தர்.நாம் அனைவருமே ஆசைப்படுவோம். ஆசையில்லாத மனிதர்கள் இருக்க முடியுமா ? இல்லை பார்க்க தான் முடியுமா ? ஆசை யாரை தான் விட்டது ? ஆசைக்கும் விருப்பத்திற்கும் நூலிடையே வித்தியாசம் இருக்கிறது. 


பொதுவாக படித்து இருப்போம் விருப்பங்கள் எண்ணற்றவை. அவற்றிக்கு அளவு இல்லை. ஆனால் விருப்பங்களையும் கடந்தது தான் ஆசை. ஆசைக்கு அளவு தெரியாது. ஆசைகளாலே நாம் பெரிதும் துயர் அடைகிறோம் என்று நினைக்கிறோம். ஆனால் அது முற்றிலும் தவறு. 

அப்படி ஆசை தான் நம் துயருக்கு காரணம் என்றால் ? எப்படி நாம் வளர்ந்து இருப்போம் ? ஆசையால் தான் மனிதன் பரிமாணங்கள் அடைக்கின்றான். உதாரணமாக நடந்து போறவனுக்கு சைக்கிள் - ல போகணும் ஆசை. சைக்கிள் -ல போறவனுக்கு பைக் -ல போகணும் ஆசை. பைக்-ல போறவனுக்கு கார் -ல போகணும் ஆசை. இப்படி நாம் ஆசைப்பட்ட ஒரு விஷயம் நமக்கு கிடைத்த பிறகு மீண்டும் புதிய ஆசை நம்மை தொற்றிக் கொள்ளும். 


சொல்ல போனால் ஆசையும் தொற்று நோய் போல தான். புத்தர் கூட ஆசைகளை துறந்து துறவு மேற்கொள்ள வேண்டும் என்று தானே ஆசைப்பட்டார் !!  ஆசைப்பட்டால் தான் நாம் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய முடியும். 

 பணக்காரன் தந்தை ஏழைத்தந்தை என்ற நூலின் ஆசிரியர் ராபர்ட் கியோஸாகி அவர்கள் கூறியிருப்பார். பேராசை படுங்கள். அதுவே நம்மை அடுத்த கட்டத்திற்கு இட்டு செல்லும் என்று. உண்மை தான் மனிதனின் மனம் ஆசைகளால் கட்டமைக்கப்பட்டது.

காலையில் இருந்து இரவு வரை நாம் ஆசைப்பட்ட ஏதேனும் ஒன்று நமக்கு கிடைத்தால் நமது மனம் அடையும் இன்பத்திற்கு அளவே இல்லை. பேராசை படுங்கள் கண்டிப்பாக உங்களின் ஆசை நிறைவேறும்.

என்ன ரெடியா ஆசைப்பட போறீங்களா ?  இல்ல பேராசைப்பட போறீங்களா ? இல்ல நமக்கு எதுக்கு வம்பு - ன்னு இருக்க போறீங்களா ? 

16 comments:

Swanthitha Murugan said...

அளவுக்கு மீறினால் தான் ஆபத்து. ஆசை படுவதும் அதை அடைவதற்கு வேலை செய்வதும் ஒரு வித சக்தி தான் நம்மை வழி நடத்த...

வைசாலி செல்வம் said...

உண்மையே. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் அக்கா.

Janani Eswaran said...

அற்புதமான உண்மை வரிகள் தங்கையே....!!!

Jeevi said...

பேராசை படுவதில் தவறேதும் இல்லை என்று புரிய வைத்த என் அன்பு அக்காவுக்கு நான் கூறிக்கொள்ள விரும்புவது மேன்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் ����������

வைசாலி செல்வம் said...

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் அக்கா.

வைசாலி செல்வம் said...

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் தங்கையே.

Ramya manoharan said...

🌸💭

Unknown said...

Super akka 👌💯

Vidhya Chandran said...

இத்தகைய வரிகளைக் கூறி... பேராசை பட்டு வாழ தொடங்கு ஏன கூறியதற்கு ... மிகவும் நன்றி அக்கா

வைசாலி செல்வம் said...

🙏📚🌱

வைசாலி செல்வம் said...

நன்றி டா

வைசாலி செல்வம் said...

மகிழ்ச்சி டா.

Unknown said...

Super akka

வைசாலி செல்வம் said...

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.

Unknown said...

Nice da

வைசாலி செல்வம் said...

நன்றி

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...