Saturday, 15 May 2021

அன்புள்ள எதிரி..!


 #நூல்விமர்சனம் 

நூல் : அன்புள்ள எதிரி 

ஆசிரியர்: ராஜேஷ் குமார் 

பதிப்பகம்: புஸ்தகா பதிப்பகம் 

அன்பு தானே எல்லாம். எதிராக இருந்தாலும் புன்னகையுடன் வரவேற்பது தமிழரின் விருந்தோம்பலை வெளிப்படுத்தும். முன்னாடி எல்லாம் உன் நண்பன் யார் என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன்- ன்னு சொல்லுவாங்க. ஆனா இப்பதான் மார்டன் உலகமாச்சே உன் எதிரி யார் என்று சொல் உன்னை பற்றி சொல்கிறேன்-  ன்னு காலகட்டத்தில் இருக்கின்றோம். இதுவும் ஒரு வகையில் நல்லது தான். நம்மை நமக்கே அடையாளம் காட்டுபவர்களும் அவர்கள் தானே. எதுவும் நிலையில்லை ஆனால் அன்புக்கு மட்டும் என்றுமே எல்லை இல்லை. இந்நூல் சிறுகதை. எப்போது போல தான் இரண்டு களம் அமைத்து நகர்த்தியிருந்தார். எதிரியை கூட மன்னிக்க இயலும் ஆனால் துரோகியை மன்னிப்பது இயலாத ஒரு காரியம். எதிரிக்கு நமது பலம் தெரியும் ஆனால் துரோகிக்கு நமது பலவீனம் தெரியும். அழகு என்றுமே ஆபத்தானது என்பதை மிகைப்படுத்தி இருந்தார். இக்கதையில் அழகிய இளம் பெண்ணை எதிரியாக பாவித்து கதையை நகர்த்துவார். விஸ்வாசம் தான் நாம் செய்யும் எந்த தொழிலாக இருந்தாலும் நம்மை உயர்த்தி காட்டும் தனித்துவப்படுத்தும். அப்பெண்ணும் அப்படியே. கடத்தல் தொழில் தவறாக இருந்தாலும் விஸ்வாசத்திற்கு சிறந்து விளக்கினாள். துரோகியாக ஒருவனும் கூடவே வருகிறான். கொஞ்சம் அறிவியல் சார்ந்தும்  கஸ்டம்ஸ் ரையிடு சார்ந்தும் கதையை விறுவிறுப்புடன் நகர்த்துவார். திகில் க்ரைம் இவருக்கு கை வந்த கலையே. 

நன்றி. 

வைசாலி செல்வம், மீண்டும் ஒரு நூல் விமர்சனத்துடன் தங்களை சந்திக்கிறேன். கேள்விகளுக்கு விடைத் தேடும் பயணம் தொடரும். 

குறிப்பு : இந்நூல் அமேசான் கின்டலில் இலவசம். வாய்ப்பு இருந்தால் பயன்படுத்திக் கொள்ளவும்.

No comments:

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...