Monday 10 May 2021

தேசிய தொழில்நுட்ப தினம்..!


 

#தேசிய_தொழில்நுட்ப_தினம் 

#National_Technology_Day


இந்திய அரசு 1998ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி ஆப்பரேஷன் சக்தி என்ற பெயரில் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியது. மொத்தம் ஐந்து அணுவெடிப்பு சோதனைகள் நடத்தப்பட்டன. அனைத்து சோதனையும் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.

இதன் மூலம் உலகின் அணுஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது. இதனை அங்கீகரிக்கும் விதமாக மே 11ஆம் தேதி தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவித்து, அறிவியல் துறையில் சாதனை செய்தவர்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக விருதுகள் வழங்கப்படுகின்றன.

இன்றைய காலத்தையே நாம் நவீன காலம் என்று தான் குறிப்பிடுகிறோம். தகவல் தொழில்நுட்பங்கள் மனித வளர்ச்சிக்கும் அப்பாற்பட்ட ஒரு வளர்ச்சியாகவே இருக்கிறது என்றால் மிகையே. தொழில்நுட்பங்கள் வளர வளர மனிதனின் மனங்கள் சுருங்கிக் கொண்டே செல்கிறது என்ற உண்மையும் மறு(ற)க்க முடியாது. 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏதேனும் ஒரு கேட்ஜெட் இல்லாமல் பார்ப்பது அரிது. நாளுக்கு நாள் புதிய புதிய கண்டுப்பிடிப்புகள். புதிய புதிய மாற்றங்கள். ஏவுகனை முதல் திறம்படச் வரை அனைத்திலும் அட்வான்ஸ் செயல்பாடுகள். 

எந்த அளவுக்கு தொழில்நுட்பங்களில் தமிழைப் பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு தமிழ் செம்மைப்படுத்த இயலும். இன்று அனைத்தும் இணைய வழி பயன்பாடுகள் தான். அதனை தமிழில் இயக்குவதும் செயல்படுவதும் கூட ஒருவகையில் பெரிய முன்னேற்றம் தான். நாளைய தலைமுறைக்கு இணையத்தமிழின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். 

கணித்தமிழ் என்ற அமைப்பு அனைத்து கல்லூரிகள் பள்ளிகளில் செயல்பட்டால் நாமும் தமிழில் இணையத்தில் எளிதாக செயல்பட முடியும். கணித்தமிழ் தொடர்பாக அரசாங்கம் ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. ஆனால் அதனை பயன்படுத்த குறைவான அளவிலே மக்கள் உள்ளன. இதுவும் ஒரு தொழில்நுட்ப வளர்ச்சி தான். கூகுள் நிறுவனம் தமிழில் இயங்குபவர்களுக்கு விளம்பரம் வழியாகவும் வருமானம் ஈட்ட வழிவகை செய்கின்றது.  அனைத்து தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


வாழ்க தமிழ்.வளர்க இணையத் தமிழ்.


அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...