#நூல்விமர்சனம்
நூல் : ஒரு மரணத்தின் மரணம்
ஆசிரியர் : ராஜேஷ் குமார்
பதிப்பகம்: குறிப்பிடவில்லை ( அமேசான் கின்டலில் இலவசம் )
இன்னும் நினைவு இருக்கிறது. பல நேரங்களில் நான் யோசித்ததும் உண்டு. எனக்கு எப்படி நூல் வாசிப்பு பழக்கம் வந்ததென்று? அடிக்கடி அம்மாவும் பெரியம்மாவும் ஒரு சின்னப் புத்தகத்த கையில வைச்சு படிச்சுட்டே இருப்பாங்க. வீட்டுல எங்க பாத்தாலும் ஒரே புத்தகமா இருக்கும். பாக்கெட் புத்தகங்கள் நிறைய இருக்கும். எனக்கு தெரிந்து அதிகமா பாக்கெட் புத்தகங்கள் போட்டது ராஜேஷ்குமார் அவர்களாக தான் இருக்கும். ஆமாம் என்னுடைய அம்மா பெரியம்மா இருவருமே ராஜேஷ் குமார் அவர்களின் தீவிர வாசிப்பாளர்கள். இருவருமே படித்த நூல்களை வீட்டுக்கு வரும் போதெல்லாம் பகிர்ந்து படிப்பதும் வழக்கத்தில் வைத்திருந்தார்கள். எனக்கு ராஜேஷ்குமார் அவர்களின் நூல்களை அறிமுகப்படுத்தியவர்களும் இவர்களே. அப்போது தான் புரிந்தது நூல் வாசிப்பு வீட்டில் இருந்து ஏதோ ஒரு விதத்தில் நம்முள் விதைக்கப்பட்டது என்று பெருமை அடைவேன். ஆர்.கே சாரோட நூல்கள் எப்போதும் இரண்டு கதைகளம் அமைத்து ஒரு விறுவிறுப்புடன் எழுதுவார். திகில் க்ரைம் போன்ற நூல்களே இவரின் அடையாளம். இவரின் எழுத்துகளே சமீபத்தில் கலைஞர் தொலைகாட்சியில் கூட நாடக வடிவில் வெளியிட்டனர். அவ்வளவு சுவாரசியமாக எழுதுவார். நூல்களுடன் நாமும் பயணிப்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. இந்நூல் சிறுகதை நூல். ஒரு மரணத்தின்மரணம் என்ற தலைப்பு என்னை படிக்க தூண்டியது. மரணம் வரை விடைத் தெரியாது எங்கு எப்போது நம் வாழ்க்கை பயணம் முடிவு பெறும் ? இங்கு இருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து கதையை நகர்த்துவார். சில வறட்டு கௌரவம் பேராசை பொறாமை மற்றும் அன்பு இதனால் நம்மை மரணத்தின் பிடியில் இருந்து காக்க இயலுமா ? ஒரு கட்டத்திற்கு மேல் எல்லாமும் எல்லைக்குள் தான் என்பதை எளிமையாக புரிய வைத்து விடும் காலம். வாழ்கின்ற போது சாகின்ற நேரம் தெரிந்து விட்டால் வாழும் நாட்கள் நரகம் என்று தான் சொல்லுவார்கள் அதனை இங்கு மிகைப்படுத்தி இருந்தார். பாசத்திற்கும் சொத்துக்கும் இடையில் இருக்கும் அவா யாரை விட்டது. புத்தர் சொல்லுவார் ஆசைகளே துன்பத்திற்கு காரணம் என்று. அதனை எளிமையாக எடுத்தியம்பியுள்ளார்.
நன்றி.
வைசாலி செல்வம், மீண்டும் ஒரு நூல் விமர்சனத்துடன்தங்களை சந்திக்கிறேன். கேள்விகளுக்கு விடைத் தேடும் பயணம் தொடரும்.
No comments:
Post a Comment