#நூல்விமர்சனம்
நூல் : அண்டா மழை
ஆசிரியர் : உதயசங்கர்
பதிப்பகம்: குறிப்பிடவில்லை (இலவச மின்னூல்)
தலைப்பை பார்த்ததும் அண்டா மழையா ? சரி ஏதோ தண்ணீர் பற்றாக்குறை தொடர்பான நூலாக இருக்கும் என்று நினைத்து படிக்க ஆரம்பித்தேன். குறுநாவல் குறைந்த பக்கங்கள் தான். நூலின் ஆசிரியர் இதனை குற்றப் புனைவு குறுநாவலாக எடுத்தியம்பியுள்ளார். நாட்டில் நிலவும் அநியாயங்களை புனைவுடன் வெளிப்படுத்தி உள்ளார். ஐம்பூதங்கள் மற்றும் ஐந்நிலங்கள் இவைகளின் இன்றைய நிலையும் இதன் பாதிப்புகளில் உள்ள அரசியல் பின்னணியும் நகைச்சுவை உணர்வுடன் இலக்கியப் பாணியில் எழுதியிருந்தார். எதிர் கட்சிக்காரன் படிச்சா என்ன ஆகும் என்பது என்னோட மைண்ட் வாய்ஸ். எழுத்துகள் மூலம் நேரடியாக தாக்கியிருந்தார். அண்டா மழையில் தொடங்கி வானவில் மறைந்து இலவசம் என்றும் திடீர் திட்டங்கள் ராஜாவை காணோம் மண்ணான பொன் என பல தலைப்புகள் எதார்த்தம் நிறைந்த உண்மைகளை தூசி தட்டிவிட்டார் ஆசிரியர். மக்களின் மன நிலையும் அரசனின் மன நிலையும் எதனை அடிப்படையாக இருக்கிறது என்றும் புதிரோடு கையாண்டு இருந்தார். இந்நூலின் சில பக்கத்தை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. நேரடியாக அரசியல் பேசியிருப்பதால் முகநூல் கம்பெனி அதனை நீக்கி விடும் என்பதால் பகிரவில்லை. அருமையான கருப்பொருள். அனைவரும் படிக்க வேண்டிய நூல். குழந்தைகளும் படிக்கலாம். அவர்களையும் ஈர்க்கும் விதத்தில் தான் இந்நூலில் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் மாபெரும் சக்தி நமது கையின் விரல் நுனியில் தான் இருக்கிறது. அதனை சாதாரணமாக ஒரு பாக்கெட் பிரியாணி குவாட்டர் மற்றும் 500 ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டு பிறகு அரசு சரியில்லை அரசியல் சரியில்லை அப்படின்னு சொல்லக் கூடா உரிமையில்லை என்பதை உணர்ந்து செயல்படுங்கள். இலவசம் என்பதே இங்கு பெருநோய். இலவசம் நல்லது தண்ணீர் மின்சாரம் கல்வி மற்றும் மருத்துவம் இவைகளில் இலவசம் என்பது என்றும் வரவேற்க தக்கது தான். ஆனால் மற்றவைகளில் பெரும் இலவசம் அது நாம் பெரும் யாசகம் (பிச்சை). இங்கு பணக்காரன் மட்டும் வளரகூடாது ஏழைகளும் வளர வேண்டும் அதுவே நாட்டின் வளர்ச்சி. கார்ப்பரேட் நிறுவனங்களின் தலையீட்டால் நாடும் வியாபாரம் ஆகிவிட்டது. ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றும் ஆங்கிலேய கார்ப்பரேட் முதலாளிகளிடம் தான் அடிமையாக வேலை பார்க்கிறோம் என்பது நிதர்சனம். ஒரு நல்ல தலைமை தொண்டனால் மட்டுமே மிகச்சிறந்த தலைமையை உருவாக்க இயலும். இனியொரு விதிசெய்வோம் என்பதை மறவாமல் ஓட்டு மூலம் நல்லதை விதையுங்கள். தொலைநோக்கு நம்பிக்கையுடன். சிந்தித்து செயல்படவும். விரல் நுனியில் நாட்டின் வளர்ச்சி இருக்கிறது என்பதை மறவாமல் இருங்கள்.
நன்றி.
வைசாலி செல்வம், மீண்டும் ஒரு நூல் விமர்சனத்துடன் தங்களை சந்திக்கிறேன். கேள்விகளுக்கு விடைத் தேடும் பயணம் தொடரும்.
2 comments:
Nice ka..enga book kidaikum ka
Very nice :) நூலின் மின்னணு தகவல் இணைப்பு செய்தால் அனைவருக்கும் படிப்பதற்க்கு சுலபமாக இருக்கும்.
Post a Comment