Thursday, 11 February 2016

பசித்திருக்கும் வயிறுகள்; பாழாகும் தானியங்கள்;



உணவு தானியச் சேமிப்புக் கிடங்குகள்;

நமது நாட்டில் போதிய தரமான உணவு தானியச் சேமிப்புக் கிடங்குகள் இல்லாததால் ஆண்டிற்கு  58,000 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு தானியங்கள் வீணாகிப் பாழாகின்றன.இந்த விவரம் இப்போது கூறப்பட்டதல்ல,இரண்டரை ஆண்டுகளுக்க முன்பே நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சர் அளித்த பதில்தான் இது.அதில் நாடெங்கிலும் கிடங்குகளில் பாழாகிக் கொண்டிருக்கும் 10 லட்சம் டன் உணவு தானியங்களை ஏழை எளியோருக்கு  இலவசமாக வழங்க உத்திரவிட்டதுடன், இது அமைச்சகத்துக்கு ஆலோசனை அல்ல,ஆணை என்று கூறி எச்சரித்தது.இதனைத் தொடர்ந்து நம் நாட்டில் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் 8 கோடி குடும்பங்களில் 1.5 கோடி குடும்பங்களுக்கு மானிய விலையில் உணவு தானியங்கள் விநியோகிக்க அரசு ஆவன செய்து வருவதாகக் கூறப்படுகிறது.


உலகில் பசியால் வாடும் 100 கோடி மக்களில் மூன்றில் ஒருவர் அதாவது 33 கோடிப் பேர் இந்தியர்கள் என்பதும் ஒவ்வொரு இரவும் நான்கில் ஓர் இந்தியன் பட்டினியாகப் படுக்கைக்குச் செல்கிறான் என்பதும் இந்தியக் குழந்தைகளில் ஏறக்குறைய பாதிக்குமேல் சத்தான உணவின்றி எடை குறைவாக உள்ளனர் என்பதும் நம் இந்திய அரசுக்குத் தெரிந்திருந்தும் இந்த மெத்தனப் போக்கு ஏன்..??




சீனா மற்றும் அமெரிக்காவின் வருவாய்;

சீனாவிலும்  அமெரிக்காவிலும் மக்கள் தங்கள் வருவாயில் ஆறில் ஒரு பங்கை மட்டுமே உணவுப் பொருட்களை வாங்கச் செலவிடும் நிலையில் அதற்கு இரண்டு மடங்கு அதிகமாக இந்தியாவில் நாம் நம் வருவாயில் மூன்றில் ஒரு பங்கைச் செலவழிக்கிறோம்.காரணம் விலைவாசி என்று கூறுவர்.

உழவனின் நிலை;

சரி,உற்பத்தி செய்யும் உழவனுக்குத் தான் இதன் பலன் செல்கிறது என்று எண்ணினால் நாம்தான் ஏமாறுவோம்.உண்மையில் டன் டன்னாக உணவை நாட்டு மக்களுக்காக உற்பத்திசெய்து தரும் நம் உழவன் தன் குடுபத்தினருக்கு உணவளித்துப் பாதுகாக்க முடியாத ஏழ்மை நிலையில் இருக்கின்றான்.அதனால்தான் நம்நாட்டில்   1991 முதல் 2001 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 80 லட்சம் விவசாயிகள் தங்களுக்கு தெரிந்த ஒரே தொழிலான விவசாயத்தை விட்டு நகர்ப்புறத்துக்குக் கையேந்தும் கூலியாகச் சென்றுவிட்டனர்.அதினும் கொடுமை 1997 முதல் 2007 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சுமார்  இரண்டு லட்சம் விவசாயிகள் வறுமை பொறுக்க முடியாமல் குடும்பம் குடும்பமாகத் தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர் என்பது.இவ்வாறு உற்பத்தி செய்யும் உழவனும் உயிர்விட ஏழை மக்கள் பசித்த வயிறுடன் வாழ பொதுமக்கள் விலைவாசி ஏற்றத்தால் வதைபட அரசு சரியான தீர்வைக்காண முனைந்து செயல்படாதது வேதனையை அளிக்கிறது.உலகின் மிகப்பெரிய இரயில் போக்குவரத்துக் கொண்ட நம் நாட்டில் தனியாக தொடர்வண்டித் துறைக்கென்று நிதிநிலை அறிக்கை மற்றும் தொடர் கண்காணிப்பு இருக்கும்பொழுது  சீனாவை அடுத்து உலகில் அதிக உணவு உற்பத்தி செய்யும் நம் நாட்டில் ஏன் தனி ஒரு வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரித்து தீவிரக் கண்காணிப்போடு செயல்படுத்தக் கூடாது..??

முடிவுரை;

வறுமைக் கோட்டிற்குகீழ் வாழும் 41 கோடிமக்களைக் கொண்ட நம் நாடு உயரவேண்டுமெனில் அவர்களையும் நாட்டுக்கு முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளையும் சேர்த்துதான் வளரமுடியும்.அவர்களை நாட்டின் பாரம் அல்ல.அவர்கள் தான் நாட்டின் பலம் அஸ்திவாரம்.இவர்களையும் சேர்த்து வளர்ந்தால் மட்டுமே  அது வளர்ச்சி.இவர்களை சேர்த்து இல்லாத வளர்ச்சி அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் போல பொடிப்  பொடியாகிவிடும்.இதனை உணர்ந்து அடிப்படையை அறுத்துக் கொண்டு வளர முயலாமல் சேர்த்துக் கொண்டு வளர முயலாமல் சேர்த்துக் கொண்டு சீர்பட வாழ்வோம் நேர்பட உயர்வோம்.



வயிறுகள் வாடாது தானியங்களைக் காத்திடுவோம்..!!

பயிர்கள் விளைத்திடும் உழவர்களை உயர்த்திடுவோம்..!!

முகநூலில் இருக்கும் பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தும் சைபர் குற்றவாளிகள்..!!



சமீபத்தில் பிரபல ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரை ஒன்று தீவிர பேஸ்புக் பயனர்களை சற்றே கலக்கத்தில் ஆழ்த்தில் உள்ளது.குறிப்பாக பேஸ்புக்கில் நொடிக்கு நொடி தம்படம்(செல்ஃபி) பதிவேற்றும் பெண்களுக்கு எச்சரிக்கையாகவே அமைந்துள்ளது.முகநூலில் இருக்கும் மிகப்பெரிய குறைப்பாடு யாருடையக் கணக்கில் இருந்தும் யார் வேண்டுமானாலும் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.இந்த ஒரு விஷசயத்தை பயன்படுத்திக் கொண்டுள்ள சைபர் குற்றவாளிகள் ஆபாச வலைத்தளங்களை பிரபலப்படுத்த முகநூலில் இருக்கும் புகைப்படத்தை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.இதற்காக இயங்கும் குழுக்கள் முகநூலில் இருக்கும் அழகானப் பெண்களின் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்துக் கொண்டு அவர்களை தன்னோடு தொடர்புடைய மற்றொரு குழுவிற்கு அனுப்புகிறது.

அந்தக் குழு குறிப்பட்ட அந்த பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக மார்ப் செய்து தங்களின் ஆபாச வலைத்தளங்களுக்கு பயன்படுத்திக்  கொள்கிறது.இப்படி சிக்கும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகம் என்பது பல்வேறு ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.இது தொடர்பாக சைபர் குற்றங்கள் நிபுணர் கிஸ்லே சவுத்ரி கூறுகையில் இன்று நாம் சந்திக்கும் மிக அச்சுறுத்தலான சைபர் குற்றங்களில் ஒன்று தான் முகநூலில் உள்ள பெண்களின் புகைப்படத்தை ஆபாச வலைத்தளங்களுக்கு பயன்படுத்துவது தான்.கவரும் விதமாக இருக்கும் பெண்களின் புகைப்படத்தை தான் இத்தகைய குற்றங்களுக்கு பெரிதும் பயன்படுத்துப்படுகிறது.இது தொடர்பாக நாங்கள் மிகத் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

Tuesday, 2 February 2016

சில நதிகளின் சிறப்பு..!!


 நதியின் செய்திகள்;


காக்ரா நதி

1.கோமதி,காக்ரா,கண்டகி,கோசி ஆகிய நதிகள் கங்கை நதியின் துணை நதிகள்.
கோசி நதி

2.சீலம்,சீனாப்,ராவி,பியாஸ்,சட்லெஜ் ஆகியவை சிந்து நதியின் துணை நதிகள்.

சீனாப் நதி

3.கோதவரி நதி தட்சிண கங்கை என்று அழைக்கப்படுகிறது.

ராவி நதி

4.மணலாறு என்று  அழைக்கப்படுவது பாலாறு.

சட்லெஜ்  நதி

5.காவிரியின் இன்னொரு பெயர் பொன்னி.


கோதாவரி  நதி


நதிக்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற நகரங்கள்;
கங்கை  நதி

1.கங்கைக் கரையில் உள்ள மிகப்பழமையான நகரம் ஹரித்துவார்.

2.கோமதி நதிக்கரையில் லக்னோ அமைந்துள்ளது.

3.நர்மதை நதியின் மீது அமைந்த நகரம் ஜபல்பூர் ஆகும்.

 4.அயோத்தி நகரில் ஓடும் நதியின் பெயர் சரயு.
சரயு  நதி
5.கோதவரி நதியின் மீது அமைந்த நகரம் நாசிக்.

6.ஹூக்ளி நதியில் அமைந்த மிகப்பெரிய நகரம் கொல்கத்தா.
ஹுக்ளி  நதி


7.யமுனா நதிக்கரையில்  அமைந்துள்ளது  உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால்.
யமுனா  நதி

சில நதிகளின் படத்தை செருகியுள்ளேன் .இந்த நதிகளும் நமது இந்தியாவில் தான் உள்ளது.எத்தனை பேருக்கு தெரியும் இது..??

நடந்தால் ஆறு..!!எழுந்தால் அருவி..!! நின்றால் கடல்லலோ..!! சிறு நதிகளே..!!நதித்தொடும் கரைகளே..!! கரைத்தொடும் நுரைகளே..!! நுரைகளின் இவள் முகமே..!! நதியே நதியே காதல் நதியே நீயும் பெண் தானே..!! 

இந்த பாடலில் கவிஞர் நதியின் அழகை சிறப்பாக பெண்ணோடு ஒப்பிட்டு கூறியுள்ளார்.நதி என்பது மங்கையின் அழகு என்பதையும்  நயப்பட கூறியுள்ளார்.


முதல் முயற்சி என் முதல் விருது..!!


    எங்கள் கல்லூரியில் நடைப்பெற்று வரும் கணித்தமிழ் பேரவையின் சிறந்த மாணவியாக கடந்த வாரம் 23.01.2016 அன்று  என்னை தேர்ந்து எடுத்து விருது வழங்கி பெருமைப்படுத்தினர்.மேலும் இது எனது முயற்சி மட்டுமல்ல என் தமிழ் ஆசிரியர் முனைவர்.இரா.குணசீலன் ஐயாவும் முக்கியக் காரணம்.நான் இவ்வளவு சிறிய நேரத்தில் இந்த உயரத்தை எட்டிப்பிடிக்க  தோள் கொடுத்தும்,தூண்டுதலாகவும்.உறுதுணையாகவும் இருந்தது ஐயா மட்டுமே.என்னுடை இந்த வெற்றி ஐயாவுடையது தான் என்பது உண்மை.சிறப்பு விருந்தினராக வந்தவர் திரு.நா.முத்து நிலவன் ஐயா அவரைப் போன்றோர் என்னை நினைவில் வைத்து எனக்கு ஒரு புத்தகத்தை பரிசாக தந்தார் என்பதை பேரின்பத்தோடு தெரிவிக்கிறேன் இங்கு.மேலும் அதே சமயம் நான் ஒன்று சொல்லுவேன் என்ற வலைப்பூவில் எழுதும் ஆசிரியரான திரு.செல்வக்குமார் ஐயாவும் அன்று என்னை சந்தித்து சில வாழ்த்துக்களைக் கூறினார்.இவர்களைப் போன்றோர் என்னை நினைவில் வைத்தது எனக்கு பேரின்பம் தான்.
   


இந்த வரிகள் உங்களுக்கு ஐயா, குருவிற்கு நிகரில்லை;குருவின்றி நிறைவில்லை; இது உங்களுக்கு நான் பறைசாற்றுக்கிறேன் ஐயா.என் முன்னேற்றமும் முயற்சியும் தங்களின் தூண்டுதலே காரணம் ஐயா.தங்களின் மாணவியாக தங்களை பெருமிதம் அடையச் செய்வேன் ஐயா.நன்றிகள் கோடி என்னுடைய இன்னொரு வழிக்காட்டும் குரு  நீங்கள் என்பது மிகையே ஐயா.


இந்த வரிசையில் என் தோழிகளையும் இடம் பெற செய்வேன்.

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...