Thursday, 11 February 2016

முகநூலில் இருக்கும் பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தும் சைபர் குற்றவாளிகள்..!!



சமீபத்தில் பிரபல ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரை ஒன்று தீவிர பேஸ்புக் பயனர்களை சற்றே கலக்கத்தில் ஆழ்த்தில் உள்ளது.குறிப்பாக பேஸ்புக்கில் நொடிக்கு நொடி தம்படம்(செல்ஃபி) பதிவேற்றும் பெண்களுக்கு எச்சரிக்கையாகவே அமைந்துள்ளது.முகநூலில் இருக்கும் மிகப்பெரிய குறைப்பாடு யாருடையக் கணக்கில் இருந்தும் யார் வேண்டுமானாலும் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.இந்த ஒரு விஷசயத்தை பயன்படுத்திக் கொண்டுள்ள சைபர் குற்றவாளிகள் ஆபாச வலைத்தளங்களை பிரபலப்படுத்த முகநூலில் இருக்கும் புகைப்படத்தை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.இதற்காக இயங்கும் குழுக்கள் முகநூலில் இருக்கும் அழகானப் பெண்களின் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்துக் கொண்டு அவர்களை தன்னோடு தொடர்புடைய மற்றொரு குழுவிற்கு அனுப்புகிறது.

அந்தக் குழு குறிப்பட்ட அந்த பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக மார்ப் செய்து தங்களின் ஆபாச வலைத்தளங்களுக்கு பயன்படுத்திக்  கொள்கிறது.இப்படி சிக்கும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகம் என்பது பல்வேறு ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.இது தொடர்பாக சைபர் குற்றங்கள் நிபுணர் கிஸ்லே சவுத்ரி கூறுகையில் இன்று நாம் சந்திக்கும் மிக அச்சுறுத்தலான சைபர் குற்றங்களில் ஒன்று தான் முகநூலில் உள்ள பெண்களின் புகைப்படத்தை ஆபாச வலைத்தளங்களுக்கு பயன்படுத்துவது தான்.கவரும் விதமாக இருக்கும் பெண்களின் புகைப்படத்தை தான் இத்தகைய குற்றங்களுக்கு பெரிதும் பயன்படுத்துப்படுகிறது.இது தொடர்பாக நாங்கள் மிகத் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

No comments:

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...