Friday, 19 February 2016

வரலாற்று நாயகன் சார்லஸ் டார்வின்..!!




சார்லஸ் டார்வின் இவர் பரிணாம வளர்ச்சி சித்தாந்தத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர்.
இவர் 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ம் நாள் இங்கிலாந்து நகரில் பிறந்தார்.
இவரது தாத்தாவும்  தந்தையும் மருத்துவர்களாக  இருந்ததால் இவரையும் மருத்துவம் படிக்க எடின்பர்க் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தார் இவரது தந்தை.
இவர் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சை  பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.அப்போதெல்லாம் மயக்க மருந்து இன்றி அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதால் அந்தக் குழந்தை பட்ட வேதனையைக் கண்டும் கேட்டும் மருத்துவத்தின் மீது இருந்த ஆர்வத்தை இழந்தார்.
இது இவரது தந்தைக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அடுத்த இவர் கேம்ஃப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இறையியல் பட்டம் பெற்றார்.
அப்போது அதே பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் பேராசிரியராக இருந்த ஜான் ஸ்டீஃபன் ஹேன்ஸ்லோ என்பவரிடம் நெருங்கிய நட்பு கொண்டார் டார்வின்.
அவர் மூலமாக கேப்டன் ராபர்ட்  என்பவரின் நட்பு இவருக்கு கிடைத்தது.எனவே ராபர்ட் தலைமையில் தென் அமெரிக்க கடலோரப் பகுதியில் ஆய்வு செய்ய செல்லவிருந்த HMS  BEAGLE என் கப்பலில் இவருடன் டார்வினும் 1831-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி தனது ஆய்வு பயணத்தைத் தொடங்கினர்.
ஐந்து ஆண்டுகள் நீடித்த அந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த அந்த பயணம் தான் பரிணாம வளர்ச்சி சித்தாந்தம் உருவாவதற்கு அடிப்படை காரணமாக அமைந்தது.இந்த பயணத்தின்  போது அந்தக் கப்பல் உலகையே ஒரு வலம் வந்தது.
பல இடரும்,இன்னல்கறும் நிறைந்த அந்த பயணத்தில் தான் சேகரித்த விபரங்களையும் ஆய்வுகளையும் வைத்து அவர்  THE VOYAGE OF THE BEAGLE என்ற புத்தகத்தை வெளிட்டார்.
சிறிது நாட்கள் கழித்து பல ஆய்வுக்குப் பிறகு 1859-ம் ஆண்டு உலகையே வியப்பில் ஆழ்த்திய இயற்கையில் உயிரினங்களின் தோற்றம் என்ற புத்தகத்தை வெளிட்டார்.
அடுத்ததாக மனித பரம்பரை 1871-ம் ஆண்டு வெளியானது.இந்த நூலில் மனிதனின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி மிக விரிவாக எழுதியுள்ளார்.
இந்நூல் உராங்குட்டன்,சிம்பான்சி,கொரில்லா போன்ற குரங்குகளுக்கு உள்ள நான்கு கைகளும் ரோமமயமாய் உள்ள ஒரு மிருக பாரம்பரியத்திலிருந்து சீர் பெற்று தோன்றியவனே மனிதன் எனத் தகுந்த ஆதாரங்களுடன் காட்டுகிறார்.
இவருக்கு எழுதுவதில் அதிக ஆர்வம் இல்லை என்றாலும் மொத்ததில் பதினெட்டு நூல்களை எழுதியுள்ளார்.
அவர் கடைசியாக எழுதிய நூல் மனிதனும் மிருகங்களும் தம் உணர்ச்சிகளை வெளியிடும் விதம் என்பதாகும்.
மனிதகுல மூதாதையரின் முகவரியை உலகிற்குக் காட்டிய முன்னோடி அறிவு ஒளியான சார்லஸ் டார்வின் 1882-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி அடங்கிப் போனார்.  










முகநூலில் இருக்கும் பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தும் சைபர் குற்றவாளிகள்..!!



சமீபத்தில் பிரபல ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரை ஒன்று தீவிர பேஸ்புக் பயனர்களை சற்றே கலக்கத்தில் ஆழ்த்தில் உள்ளது.குறிப்பாக பேஸ்புக்கில் நொடிக்கு நொடி தம்படம்(செல்ஃபி) பதிவேற்றும் பெண்களுக்கு எச்சரிக்கையாகவே அமைந்துள்ளது.முகநூலில் இருக்கும் மிகப்பெரிய குறைப்பாடு யாருடையக் கணக்கில் இருந்தும் யார் வேண்டுமானாலும் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.இந்த ஒரு விஷசயத்தை பயன்படுத்திக் கொண்டுள்ள சைபர் குற்றவாளிகள் ஆபாச வலைத்தளங்களை பிரபலப்படுத்த முகநூலில் இருக்கும் புகைப்படத்தை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.இதற்காக இயங்கும் குழுக்கள் முகநூலில் இருக்கும் அழகானப் பெண்களின் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்துக் கொண்டு அவர்களை தன்னோடு தொடர்புடைய மற்றொரு குழுவிற்கு அனுப்புகிறது.

அந்தக் குழு குறிப்பட்ட அந்த பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக மார்ப் செய்து தங்களின் ஆபாச வலைத்தளங்களுக்கு பயன்படுத்திக்  கொள்கிறது.இப்படி சிக்கும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகம் என்பது பல்வேறு ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.இது தொடர்பாக சைபர் குற்றங்கள் நிபுணர் கிஸ்லே சவுத்ரி கூறுகையில் இன்று நாம் சந்திக்கும் மிக அச்சுறுத்தலான சைபர் குற்றங்களில் ஒன்று தான் முகநூலில் உள்ள பெண்களின் புகைப்படத்தை ஆபாச வலைத்தளங்களுக்கு பயன்படுத்துவது தான்.கவரும் விதமாக இருக்கும் பெண்களின் புகைப்படத்தை தான் இத்தகைய குற்றங்களுக்கு பெரிதும் பயன்படுத்துப்படுகிறது.இது தொடர்பாக நாங்கள் மிகத் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை... !!



வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை.

இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின்
பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது:

* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு.

அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். 




அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக
போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.


* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத வேண்டும்.

* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள்.

எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண்
பரிசோதனை செய்வது நல்லது.

* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது.

இது முற்றிலும் தவறு.

மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு
எச்சரிக்கை சின்னம்.

ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர
நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.



* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும்.

அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும்.

அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும்.

ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து
திரும்புகின்றனர்.

இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

* கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது

சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது.

அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர்.

காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில்
இருந்து கண்களை பாதுகாக்கும்.

வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின்
வேர்கள் அதிகம் வெளி வராது.

இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை
அதிகம் "அப்சார்ப்' செய்கிறது.

விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.


* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது.

மொபைல் போன் "சிக்னல்' இல்லாத
இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு' இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.

மொத்தத்தில்விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து

நம்மை பாதுகாக்கும்.

Thank info

Puthiya Thalaimurai TV

இந்த நல்ல விஷயத்தை பலருடன் பகிரலாமே!!!!




நாணயங்கள்..!!


 
பிரிட்டிஷ் ஆட்சியின் போது
          
இந்திய விடுதலையான பிறகு
சோழர் காலத்தில்






இவை அனைத்தும் பழங்கால நாணயங்கள் 







இந்த நாணயங்களும் நம் நாட்டில் பயன்படுத்தியவை என்பதில் ஆச்சரியம் தான்.தெரிந்துக் கொள்வோம் நம் வரலாற்று பக்கத்தை கொஞ்சம்.நாணயங்கள் ரூபாய்களாய் மாறின மனிதன் பூதமாக மாறினான்.


காலங்கள் மாறினாலும் நம் பழமைகள் என்றும் அழிவதில்லை..!!!

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...