Thursday, 11 February 2016

மூலதனம் என்றால் என்ன..?


மூலதனம்;

ஐம்பது ரூபாயில் 30 ரூபாயை எடுத்துக் கொண்ட முதலாளி அதில் 20 ரூபாயை தன்னுடைய செலவுக்கு எடுத்துக் கொண்டு மீதி 10 ரூபாயை தொழில் விருத்திக்காக பயன்படுத்துகிறார் என்றால் அந்த 10 ரூபாய் தான் மூலதனம்.உபரிமதிப்பின் எந்த பகுதி மீண்டும் உபரி மதிப்பைத் தோற்றுவிக்கப் பயன்படுத்தப்படுகிறதோ அந்த பகுதியே மூலதனம்.

மூலதனம் மற்றும் உபரிமதிப்பு;

மூலதனம் உபரிமதிப்பைத் தோற்றுவிக்கும்.உபரிமதிப்பு மூலதனத்தை பெருக்கும்.மூலதனமும் உபரிமதிப்பும் இரண்டும் எதிர் எதிர் கூறுகள்(இயங்கியலின் முதல் விதியான எதிர் கூறுகளின் ஒற்றுமையும் போராட்டமும்).



கூலியும் உபரிமதிப்பும்;

கூலியையும் உபரிமதிப்பையும் முறையே தொழிலாளியும் முதலாளிலும் எந்த விகிதத்தில் பிரித்துக்கொள்ள  வேண்டும் என்பதைத் தான் முதலாளித்துவ அறிஞர்கள் கணக்கிட்டனர்கள்.பிரச்சனையின் தீர்வாக இருவரும் அதை (கூலியையும் உபரிமதிப்பையும்)நியாமான முறையில் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று தான் அவர்கள் கூறினார்கள்.
முதலாளித்துவ அறிஞர்கள் பிரச்சனையின் முடிவை எந்த இடத்தில்  கண்டார்களோ,அதே இடத்தில் தான் சிக்கலின் ஆணிவேர் இருக்கிறது என்று மார்க்ஸ் நிருபித்தார்.மூலதனத்துக்கும் உபரிமதிப்புக்கும் இடையே உள்ள முரண்பாட்டால் முதலாளித்துவ சமூகத்தில் ஏற்படும்  அளவு மாற்றம் எப்படி இருக்கும் ..??




உபரிமதிப்பை எப்படி அதிகரிக்கலாம் என்று தான் தினமும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.அவருக்கு இரண்டு வழிகள் உள்ளன.
1.கூலி கொடுக்கப்படாத உபரி உழைப்பு  நேரத்தை அதிகப்படுத்துவது.
2.அவசியமான உழைப்பு நேரத்தை குறைப்பது.

அதென்ன கூலி கொடுக்கப்படாத உபரி உழைப்பு நேரத்தை அதிகப்படுத்துவது..??


முதலாளித்துவத்தின் ஆரம்பத்தில் ஒரு நாளில் வேலை நேரம் என்பது 16 மணி என்று கூட இருந்தது.தொழிலாளிகளின் இடைவிடாத போராட்டத்தால் அது 8 மணிநேரமாக குறைக்கப்பட்டது.உபரி உழைப்பின் நேரத்தை அதிகப்படுத்துவதில் ஒரு எல்லை உண்டு.அதாவது தொழிலாளிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.இல்லையென்றால் அவரால் தொடர்ந்து வேலைக்கு வர முடியாமல் போய்விடும்.எனவே முதலாளிகள் இரண்டாவது  வழியே பின்பற்ற ஆரம்பித்தார்கள்.அதாவது அவசியமான வேலை நேரத்தை குறைப்பது.கடந்த அத்தியாத்தில் சொல்லப்பட்ட உதாரணத்தில் அவசியமான உழைப்பு நேரம் 8 மணி நேரம் பார்த்தோம்.அதாவது ரூ.230 மதிப்பிலான ஒரு பொருள் 8 மணி நேரத்தில் தயாரிக்கப்படுகிறது.புதிய தொழில்நுட்பத்தின் காரணமாக  அதே ரூ.230 மதிப்பிலான பொருள் 4 மணி நேரத்தில் தயாரிக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம்,என்ன ஆகும்..??இன்னொரு 4 மணி நேர உழைப்பு உபரி உழைப்பு என்றாகிறது.

ஒரு நாள் வேலை;

ஒரு நாளின் 12 மணி நேர வேலை நாளில் முதலில் அவசியமான உழைப்பு நேரம் 8 மணி நேரம் என்றும் 4 மணி நேரம் என்றும் இருந்தது.இப்போது அவசியமான உழைப்பு நேரம் 4  என்றும் உபரி உழைப்பின் நேரம் 4 மணி நேரம் என்றும் ஆகிறது.ஒரு பொருளின் மதிப்பு என்பது உழைப்பின் கால அளவைப் பொருத்தது என்று முன்பே பார்த்திருந்தோம்.8 மணி நேரத்தில் தயாரிக்கப்படும் ஒரு பொருள் 4 மணி நேரத்தில் தயாரிக்கப்பட்டால் அதன் மதிப்பு பாதியாக குறையும்.எனவே எந்த ஒரு முதலாளியும் தங்களின் தொழில் நுட்பத்தை வெளியிடமாட்டார்கள்.தாங்கள் மட்டுமே அதை பயன்படுத்தி லாபம் பார்ப்பார்கள்.



தொழில்நுட்பம் வளர உபரி மதிப்பு அதிகம்;

எல்லா முதலாளிகளும் அந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தால் அந்த பொருளின் மதிப்பும் குறைந்துவிடும்.பிறகு மீண்டும் வேறொரு தொழில் நுட்பத்தை கண்டு பிடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு முதலாளிகள் தள்ளப்படுவார்கள்.எனவே முதலாளித்துவம் சுய லாபத்துக்காக தொழில் நுட்ப வளர்ச்சியை துரிதப்படுத்தியே தீரவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறது.எந்த சமூக அமைப்பின் காலக்கட்டத்திலும் இல்லாத தொழில் நுட்ப வளர்ச்சி முதலாளித்துவ சமூகத்தில் நடைப்பெறுவதற்கு காரணம் இதுதான்.தொழில்நுட்பம் வளர வளர உபரி மதிப்பும் அதிகமாகிறது.மூலதனமும் அதிகரிக்கிறது.

முடிவுரை;

முதலாளித்துவ பொருளாதார உற்பத்தி முறை என்பது வரைமுறையற்ற உற்பத்தியைக் கொண்டுள்ளது.எனவே ஒரே பண்டத்தை உற்பத்தி செய்யும் முதலாளிகள் தங்களுக்குள் போட்டியிடுகின்றனர்.தொழில்நுட்ப வளர்ச்சியால் ஒரு சில முதலாளிகள் மற்ற முதலாளிகளை வீழ்த்தி பெருகப் பெருக  அவர்கள் அமைப்பு  ரீதியில்  அணிதிரண்டு புரட்சி செய்யும் போது சமூக மாற்றம் ஏற்படும் அது ஒரு சோஷியலிச அரசாக இருக்கும்.   






No comments:

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...