வரைபடம் : சஞ்சுனா தேவி
நம்மைச் சுற்றி எண்ணற்ற கருத்துக்களும் எதிர்மறை நேர்மறைச் சிந்தனைக் கொண்டவர்களும் உண்டு. வாழ்க்கையை இரசித்து வாழ்பவர்களும் உண்டு அதே சமயம் வாழ்க்கையை வெறுத்து வாழ்பவர்களும் உண்டு.நிறைகளைப் பார்க்கும் மனிதர்களும் உண்டு அதைவிடக் குறைகளை மட்டும் அதிகம் பார்க்கும் மனிதர்களும் உண்டு. உதவும் மனிதர்களும் உண்டு, உதவியை மறக்கும் மனிதர்களும் உண்டு, உதவி செய்ததைச் சொல்லிக் காட்டும் மனிதர்களும் உண்டு. நன்றியுடன் இருக்கும் மனிதர்களும் உண்டு நன்றியை மறந்தவர்களும் உண்டு. பலன் எதிர்பார்க்கமால் செய்பவர்களும் உண்டு எதிர்பார்த்து செய்பவர்களும் உண்டு.அன்பு செலுத்துபவர்களும் உண்டு, அதை வெறுப்பவர்களும் நிராகரிப்பவர்களும் உண்டு.
மகிழ்ச்சியாக இருப்பவர்களும் உண்டு, துன்பத்தில் இருப்பவர்களும் உண்டு. ஆடை அணிந்த மனிதர்களும் உண்டு, ஆடையற்ற மனிதர்களும் உண்டு. நாத்திகம் பேசும் மனிதர்களும் உண்டு ஆத்திகம் பேசும் மனிதர்களும் உண்டு. பெண்ணியவாதியும் உண்டு ஆன்மீகவாதியும் உண்டு ஆணாதிக்க வர்க்கமும் உண்டு. உடல்நலத்துடன் இருப்பவர்களும் உண்டு, உடல் ஊனமுற்றவர்களும் உண்டு. மனநிலை சீராகவும் சுயநினைவு இழந்தவர்களும் உண்டு. திறன் உடையவர்களும் உண்டு, திறனற்றவர்களும் உண்டு. வெற்றியாளர்களும் உண்டு, தோல்வியாளர்களும் உண்டு. அறிவுரையாளர்களும் உண்டு, அரசியல்வாதிகளும் உண்டு, தத்துவ ஞானிகளும் உண்டு, அறிஞர்களும் உண்டு, ஆளுமைகளும் உண்டு, கவிஞர்களும் உண்டு, சண்டையிடும் மனிதர்களும் உண்டு. சமாதானம் செய்யும் மனிதர்களும் உண்டு. அகிம்சை போராளிகளும் உண்டு, போர் செய்பவர்களும் உண்டு.
இப்படி பல முகங்களுடனும் முகமூடிகளும் அணிந்த எண்ணற்ற மனிதர்களை கடந்துச் சென்று தான் நமக்கான ஒரு பாதையை உருவாக்க இயலும். சிலர் பிறரை சார்ந்தே கடைசி வரை வாழாமல் போகின்றனர். சிலர் போராடினால் மட்டுமே வாழ்க்கை என்று நினைத்து நினைத்தே வாழாமல் போகின்றனர். என்ன செய்தாலும் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் தான் நிறைய பேர் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்.
பயணிப்போம் மனிதர்களைக் கடந்து மனித மனங்களைக் கடந்து பல இலட்சியங்களும் ஒரே இலக்கை மட்டும் வைத்துக் கொண்டு பயணிப்போம். அங்கீகாரம் பிறர் தரவில்லை என்றாலும் நமக்கு நாமே அங்கீகாரம் கொடுத்துச் செல்வோம். நம் ஆழ்மனம் நிறைவுச் செய்தால் போதும். இந்த சமூகம் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் ஏசும் என்பது தான் நிதர்சனமான உண்மை.
மகாபாரதத்தில் கிருஷ்ணர் கூறுவது போல உன் கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்பதை நினைவில் வைத்துக் கொண்டு பயணிக்கத் தயாராகுங்கள். உங்கள் வாழ்க்கைப் பயணத்திற்கு நீங்களே பாகன். மற்றவர்கள் உங்களுடன் பயணிக்கும் ஒரு நபர் மட்டுமே அவர்களுக்கான நிறுத்தம் வந்தால் இறங்கி விடுவார்கள். எனவே அவர்கள் உங்களுடன் பயணிக்கும் வரை இரசித்துப் பயணம் செய்யுங்கள். ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் முகமூடி மனிதர்களாக இருப்பதை விட உங்கள் முகங்களுக்கு நீங்களே முகவரியாக இருக்க முயற்சிச் செய்யுங்கள்.
ஏற்ற இறக்கங்கள் இருந்தால் தான் வாழ்க்கைச் சீராக இருக்கும். மனம் தளர்ந்து போகாமல் பயணப்படுங்கள். வருவதைப் பார்த்துக் கொள்ளலாம். இங்கு மாட்டாத வரை அனைவரும் நல்லவர்களே. இதுவே எதார்த்தம். புத்தங்களுடன் மனிதர்களும் வாசியுங்கள் நேசியுங்கள்.
அன்பைக் கொடுத்துப் பெறுங்கள். வாழ்க்கையை இரசித்து வாழுங்கள். உங்கள் பயணத்திற்கு நீங்களே பாகன் என்பதை மறக்க வேண்டாம். உங்கள் பயணம் சிறக்க நல்வாழ்த்துகள்..
கேள்விகளுக்கு விடைத் தேடும் பயணம் தொடரும்..
4 comments:
Well said
அருமை அக்கா 👌
வாழ்க்கை வாழ்வதற்கே.....🔥🔥இன்ப துன்பங்களை ரசித்து அனுபவித்து வாழப் பழகுவோம்....!! அருமை தங்கையே !!
Crt ka ..மாட்டாத வரை அனைவரும் நல்லவர்கள் போல் நடித்து வாழ்கின்றனர்
Post a Comment