Friday, 24 July 2020

நீங்கள் கவலைப்பட வேண்டிய அந்த ஒரு நபர் யார் தெரியுமா...





#நூல்விமர்சனம்

நூல் : நீங்கள் கவலைப்பட வேண்டிய அந்த ஒரு நபர் யார் தெரியுமா ?

ஆசிரியர் : சாந்த குருஸ் ஜெகநாதன்

பதிப்பகம்: தெரியவில்லை (அமேசான் கின்டலில் இலவசம்)


கவலை எதுக்கு எடுத்தாலும் கவலை தான். கவலை என்பது நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு செயலாகவே இருக்கும். காலையில் நாம் குறித்த நேரத்தில் எழவில்லை என்றால் கவலை. குளிக்கும் போது தண்ணீர் நின்று விட்டால் உடனே கவலை.சாப்பாட்டுல உப்பு இல்லேன்னா அதுக்கும் கவலை. பேருந்தை சரியான நேரத்துல பிடிக்கலையா அதுக்கும் தான் கவலை. ஆபிஸ் போய் மேனேஜர் கிட்ட திட்டு வாங்கின்னா அட அதுக்கும் கவலைதாங்க. நட்பு மற்றும் உறவு வட்டத்தில் சிறிது மாற்றம் என்றால் வேறென்னப்பா கவலையோ கவலை தான். இப்படி நம்ம வாழ்க்கையில் பாதி நேரம் இல்ல இல்ல முக்கால்வாசி நேரம் கவலைப்பட்டு துக்கப்பட்டு துயரப்பட்டு இந்தனையும் பட்டு மறுபடியும் என்ன பண்ணுவோம் கவலை தான் படுவோம். அட போங்கைய நீங்களும் உங்க கவலையும் தலையே சுத்தற மாறி இருக்கே அப்படின்னு தோணுதா?

அப்ப எவ்வளவு கவலைக்கிடமாக இவ்வளவு நாள் நாம வாழ்ந்து இருக்கோம் பாத்திங்களா?  கவனிச்சு பாருங்க. இங்க நாமப்படுற கவலைகளில் பாதி அடுத்தவன் என்ன சொல்லுவான் ? என்ன பேசுவான்?  என்ன நினைப்பான்?  அப்படின்னு மத்தவங்கள நினைச்சே நம்ம பாதி வயசும் போயிரும். இந்நூலின் ஆசிரியர் குறுங்கதையாக இருந்தாலும் நறுக்குன்னு அங்க இங்க அறைந்த மாதிரி சொல்லிட்டாரு.

குறிப்பாக எனக்கு  "நாம் அனைவரும் வதந்திகளால் சூழப்பட்ட முட்டாள்களாக மாறிவிட்டோம், நமது வாயே ஒரு விளம்பர செய்தித்தாளை போல மாறிவிட்டன. நாம் சாப்பிடுவதை விட அதிகமாக பேசுகிறோம். வதந்திகளை உருவாக்குவது, நமக்கு தெரிந்தவர்களைப் பற்றிய கிசுகிசுக்களை பரப்புவது மற்றும் சூழ்நிலைகளை நமக்கு சாதகமாக எடுத்துக்கொள்வது மற்றும் அவற்றை ஊதுவது போன்றவற்றை நாம் விரும்புகிறோம்."  இந்த வரிகள் மிகவும் பிடித்திருந்தது. எவ்வளவு ஆழமான எதார்த்தமான உண்மைகள்  இவ்வரிகளில் புதைந்துள்ளது என்று கவனித்து பாருங்கள்.

எதுக்கு எடுத்தாலும் கவலைப்படுற நீங்க உங்கள பத்தி என்றைக்காவது கவலைப்பட்டு இருக்கீங்களா?  படுவோம் எப்போ அப்பையும் அடுத்தவன் எதாச்சும் சொல்லிட போறான்னு தான் கவலையே படுவோம். ஒன்றை மட்டும் ஆழமாக புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் இதை நான் புரிந்து கொள்ள எனக்கு இருபத்து மூன்று வருடங்கள் ஆயிற்று இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள ஒன்றரை மாதங்கள் ஆயிற்று. கடந்த மாதங்கள் நான் எடுத்து கொண்ட கால இடைவெளியே என்னை மீண்டும் எனக்கு அடையாளம் காட்டியது என்பது திண்ணம். இங்க யாரும் யாருக்காவும் காத்திருக்க மாட்டார்கள். தேவைகள் இருக்கும் வரை நீ தேவைப்படுவாய். தேவைகள் முடிந்த பிறகு நீ தேவையில்லாவர் ஆவாய். தேவைக்கும் விருப்பத்திற்கும் இடையே தான் அதனை அடையும் வரை தான் இங்கு எல்லாரும் எல்லாருக்கும் தேவைப்படுகிறோம் என்பது நிதர்சனமான உண்மை என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

காதலோ நட்போ உறவோ எதுவாக இருந்தாலும் அவரவர் வாழ்வில் அவர்கள் அடையும் ஆசை வரை தான். இங்கு நாம் கவலைப்பட வேண்டும் ஆம். நம்மை பற்றி நாம் கவலைப்பட வேண்டும். ஆயிரம் பேரு பல விதமான சொல்லுவாங்க எல்லாதையும் கேளுங்கள் எது உங்களுக்கு சரியானது என்று தோன்றுகிறதோ அதை உடனே செய்யுங்கள். இது உங்கள் வாழ்க்கை. அதுவும் ஒரு முறை தான். வாழுங்கள் அல்லது வாழ வழி விடுங்கள். கவலையை விடுங்கள். இல்லை கவலைப்படுங்கள் உங்களை பற்றி மட்டும். இது சுயநலம் தான். ஆனாலும் உங்கள் உடலுக்கும் மனதிற்கும் நல்லது இதுவே. மண்ணிற்குள் புதைவதற்குள் காற்றில் கலப்பதற்கு முன் தண்ணீரில் கரைவதற்கு முன் ஒரு நொடியாவது உங்களுக்காக வாழுங்கள். முயற்சி செய்யுங்கள் முடியும் வரை முயற்சி செய்யுங்கள்.

அட இத சொல்ல மறந்துட்டேன் உங்கள் மேல உயிரா அல்லது அக்கறையும் அன்பும் கொண்டு நீங்க எவ்வளவு துரத்தினாலும் உங்களை சுத்தி வருவாங்க பாருங்க அவங்கள பத்தி கொஞ்சம் கவலைப்படுங்க. ஏன்னா அவங்களுக்கு போக வழியில்லாமல் இல்லை. அன்பு காட்ட மனிதர்கள் இல்லாமல் இல்லை. உங்கள தவறவிட்டுற கூடாதுன்னு தான் வராங்கன்னு புரிஞ்சுக்கோங்க பாஸ். அவங்களோட முழு கவலையும் உங்கள பத்தி தான் இருக்கும் அத மாத்தவும் முடியாது. மாறவும் மாட்டாங்க.  அந்த மாதிரி உறவு கிடைச்ச பத்திரமா வைச்சுக்கோங்க. வெளில இந்த மாதிரி ஆளுங்க கிடைக்கறது ரொம்ப கஷ்டம். என்ன நான் சொல்றது சரியா ?

ஆக நீங்கள் கவலைப்பட வேண்டிய ஒரே நபர் நீங்களே.இந்நூல் அவசியம் படிங்க. நீங்க உங்களை உணருவது சாத்தியம். ஆசிரியருக்கு நன்றிகள்.

நன்றி.
மீண்டும் ஒரு நூல் விமர்சனத்துடன்தங்களை சந்திக்கிறேன். கேள்விகளுக்கு விடைத் தேடும் பயணம் தொடரும்.


7 comments:

Unknown said...

அருமையான பதிவு அக்கா 👌

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு நூல் அறிமுகம். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

Vidhya Chandran said...

Super ha soniga ka ..ithu ipo..itha time yelarum padika vendiya onnu . daily kavala patu ena pandrathu athum puriyama erukoo elarum ..crt solierukinga . daily face pandra oru problem tha ithu

Anu patricia said...

🤝🤝pakka

Peter Johnson said...

விழுமிய கருத்துகள். அருமையான திறனாய்வு. வாழ்வுக்குப் பயன்படும் அறிவுரை.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

Ramya manoharan said...

arumai 🤗

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...