#படவிமர்சனம்
படம் : மாறா
இயக்குநர் : திலீப் குமார்
கதைக்களம் :கதையின் வழியே, காதலைத் தேடிப் போகும் பயணம்.
கதை என்றால் யாருக்கு தான் பிடிக்காது. சிறுவயதில் தாத்தாவிடம் தைரியக் கதைகளை கேட்டாலும் பாட்டியிடம் கேட்கும் கற்பனை கதைகளுக்கு ஈடு இணை எதுவும் இருக்காது. பொதுவாக பெண்களுக்கு கற்பனை திறன் அதிகம் காதல் உணர்வும் அதிகம். தன் காதலையும் ஆசைகளை கற்பனையிலும் சேர்த்து கதையாக சொல்வதின் இன்பத்தை யாராலும் புரிந்திட இயலாது. சிறுவயதில் நாம் கடந்து வந்த கதைகள் ஆயிரக்கணக்காக இருந்தாலும் அதில் பெரும்பாலான கதாபாத்திரமாக வருவது இளவரசன் இளவரசி ராஜா ராணி இப்படி தான். இல்லையென்றால் பாட்டி வடை சுட்டக்கதை. இப்படி பல கதைகளை கேட்டும் அதில் வாழ்ந்தும் வந்தவர்கள் தான் நாம். இப்படம் மலையாளப் படத்தின் மறுஆக்கம் என்றாலும், நம் மொழிக்கு ஏற்ப உணர்வும் புரிதலும் அழகாக ஓவியமாக தீட்டிவிட்டார் இயக்குநர். அந்த ஓவியத்தின் இசையாக ஜிப்ரான் அவர்களின் ஒலி அலை கல் மனதையும் கரைத்து விடும் என்பது திண்ணம். படத்தின் இன்னொரு பலம் பாடல்வரிகள் தான். மிகுச சிறப்பாக தாமரை அவர்கள் உணர்வுகளைக் கோர்த்து நம்மையும் கதையில் கோர்த்து விட்டார் என்றால் என்ன சொல்வது அவ்வளவு அழகு மனநிறைவு.
சிறுவயதில் கேட்ட ஒரு கதையில் அவனை தொலைத்த இவளும், இவளை தொலைத்த இவனும் அக்கதையை கேட்ட அவர்களும் (கதாநாயகி & கதாநாயகன்) கதையின் வழியே வலியுடனும் நம்பிக்கையுடனும் காதலுடனும் தேடிச் செல்லும் பயணம். நம்மையும் சேர்த்தே பயணப்பட செய்தது என்பது மிகையே. புத்தகங்கள் ஒரு மனிதனை மனிதனாக மாற்றுவதில் எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறதோ அதே அளவிற்கு பயணங்களும் ஒரு மனிதனை மனிதனாக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. பலவிதமான பயணங்கள் உண்டு. அதில் தன்னை தொலைத்தவர்களும் உண்டு. தன்னை மீட்டெடுத்தவர்களும் உண்டு. பயணத்தின் அனுபவம் மிகவும் சுவையானது சுவாரஸ்யமானது. அனைவராலும் அந்த வழி(லி)யினை உணர்ந்திட இயலாது. மாறா போல ஒரு பயணமும், பாரு போல ஒரு தேடலும், மீனாட்சி & வெள்ளையன் மாதிரி நம்பிக்கையும் இருந்தால் காதலும் உணர்வும் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணப்படும். தொலைந்தாலும் தொலைத்தாலும் மீட்டெடுக்க இயலும். படத்தில் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, திரைக்கதை, வசனங்கள், என அனைத்திலும் நம்மால் வாழ்ந்திட முடிந்தது. ஒரு படம் நம்மை கேள்வி மட்டுமல்ல அதில் வாழ்ந்திடவும் செய்தால் அதுவே சிறந்த படம்.
மாறா, உணர்வுகளும் அன்பும் காதலும் பிரிவும் ஏக்கமும் கண்ணீரும் ஒருசேர வருகையில் மௌனம் மட்டுமே மொழியாகும்.தொலைந்துப் போன பொருளோ உறவோ எதிர்பாராத தருணத்தில் கிடைப்பதை விட எதிர்பார்த்த தருணத்தில் கிடைத்தால் அதன் உணர்வு பல எல்லைகளையும் கடந்தது. காதல் பேசும் சிரிக்கும் அழுகும் சண்டைப்போடும் மௌனமாகும் ஏன் தொலைந்துக் கூடப் போகும் ஆனால் காதல் கண்களால் மட்டுமல்ல இதயங்களால் உணர்வுகளால் பிணைக்கப்பட்ட வலி(மை)யான பயணம். காதலுக்கு முதலும் கடைசியும் இல்லை.காதல் ஒருமுறை வருவது மட்டுமல்ல இரண்டாம் முறையும் வரலாம் அது முதல் காதலை விட ஆழமானது நிலைத்திருக்கும். காமத்தை கடந்து காதலை நுகரும் போது தான் புரியும். காத்திருக்கும் வலியின் சுகத்தை யாராலும் உணர்ந்திட இயலாது காத்திருப்பவர்களைத் தவிர.முகவரி தொலைத்த அஞ்சல்கள் போல சில தேடல் பயணங்கள். கதை & பயணப் பிரியர்களுக்கான விருந்து படம் மாறா.
👣 மாறா & பாரு 🎬 காதலைத் தேடியப் பயணம் 🚶🏽♀️ love beyond limits & age & etc 😇 1st love was an accident but second one not like that 💯 I got lost through maaraaa 🧜🏻♀️ still am living with maaraa 😃 what a script 👌 wowwww alluring awwwww 🥰 i think every travelers gonna fall in love with this movie 🪄 fairy tale 🍃 happy to being a traveler 🦋
நன்றி. மீண்டும் ஒரு படவிமர்சனத்தில் சந்திக்கிறேன். கேள்விகளுக்கு விடைத்தேடும் பயணம் தொடரும்.
நம்பிக்கையுடன் வைசாலி செல்வம்..
7 comments:
சிறப்பான விமர்சனம்...
super ma
Vera level la❤️🤩
Super akka 💞😇
காதல் பேசும் சிரிக்கும் அழுகும் சண்டைப்போடும் மௌனமாகும் ஏன் தொலைந்துக் கூடப் போகும் ஆனால் காதல் கண்களால் மட்டுமல்ல இதயங்களால் உணர்வுகளால் பிணைக்கப்பட்ட வலி(மை)யான பயணம்... காதலுக்கு முதலும் கடைசியும் இல்லை...அருமை சகோதரி...என் எண்ண ஓட்டத்தை தங்கள் எழுத்துக்களின் வாயிலாக நான் பார்த்து ரசிப்பதில் மிக அதிக அளவில் ஆனந்தம் ஆக உள்ளேன்...மீண்டும் சந்திப்போம்...
Vera level ...❤️🖤
There is a pleasure mixed with the pain in waiting....
No one understand it until they experience it...😊Maara
Post a Comment