Wednesday, 14 April 2021

தி கிரேட் இந்தியன் கிச்சன்..!!

 



#படவிமர்சனம் 


படம் : தி கிரேட் இந்தியன் கிச்சன்

இயக்குநர் : ஜோ பேபி 

கதைக்களம் : சமையலறையும் படுக்கையறையும் தான் பெண்களின் இல்லற வாழ்க்கையா?  

பெண்ணியம், பெண்களின் சுதந்திரம், பெண்ணுரிமை, பெண்களின் மணவாழ்க்கை, மறுமணம், உடன்கட்டை ஏறுதல் என பலவற்றை பற்றி பல ஆண்டுகள் ஆண்களும் பெண்களும் பல மேடைகள் பல நூல்கள் பல களத்தில் பல சிந்தனையில் பல படங்களின் பாடல்களின் வழியே கூவி கூவி எடுத்துரைத்தாலும் பெண்களுக்கு எதிராக பெண்களே இருக்கிறார்கள் என்பதும் பெண்களின் முடிவுகள் ஆண்களின் கையில் தான் உள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மையே. இப்படத்தில் புதிதாக திருமணமாகிய புதிய தம்பதிகளின் இல்லற வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். திருமணத்திற்கு பின்பு ஒரு பெண் தனது அன்றாட நாட்களை எப்படி கடத்துக்கிறாள் என்பதை பின்னணியாக வைத்துள்ளார் இயக்குநர். காலை முதல் சமையலறையும் இரவுக்கு மேல் படுக்கறைக்கும் மட்டுமே பெண் என்பவள் பயன்படுத்தப்படுகிறாள் என்பது மறுத்தாலும் அதுவே உண்மை என்பதை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர் ஜோ. மாதவிடாய் நாட்களில் மட்டுமே ஓய்வு பெறுகிறாள். அதை கூட தீட்டு என்ற ஒரு புள்ளியில் அவளை வைக்கும் சமுதாயத்தில் தான் இன்றும் வாழ்கிறோம். பெண் என்பவளுக்கு அவளது முடிவுகளை அவளே எடுப்பதில் உள்ளது அவளுக்கான சுதந்திரம். இப்படத்தில் ஒரு கட்டத்தில் ஆண் ஆதிக்கம் தாங்க இயலாமல் திருமண பந்தத்தை முடித்து அவளுக்கான பாதையை நோக்கி பயணிக்கிறாள். ஆனால் இதுபோன்ற முடிவுகளை நிஜ வாழ்க்கையில் சாத்தியம் கொஞ்சம் குறைவு தான். பெரும்பாலும் திரையில் காணும் வாழ்க்கையை நிஜத்தில் வாழ்ந்திட இயலாது என்பது திண்ணம். நிஜத்திற்கும் கற்பனைக்கும் இடையே மெல்லிய நூலிழையே மனித வாழ்க்கை என்பதனை உணர வேண்டும். ஆண் பெண் சரி சமம் என்பதை விட சரிபாதி என்ற கட்டமைப்பு இல்லற வாழ்க்கைக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும். ஆண்கள் எல்லாம் தவறானவர்கள் பெண்கள் எல்லாம் சரியானவர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. பெண்களை தசையாகவும் ஆண்களை தவறாகவும் சித்தரித்தில் பெரும்பங்கு ஊடகங்களுக்கும் சமுதாயத்திற்கும் உண்டு என்பதை மற(று)க்க வேண்டாம். வள்ளுவர் கூற்றுப்படி "அன்பும் அறனும் உண்டாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" என்பதை நினைவில் கொள்க. இங்கு யாரும் சீதையும் அல்ல யாவரும் இராமனும் அல்ல. காதல் காமம் இரண்டும் அன்பின் நிறைவு. அதனை இச்சைக்கு மட்டும் பயன்படுத்தினால் காதலும் காமமும் கலந்து உறவை நம்பிக்கையை சிதைத்து விடும். எதிர்பார்ப்பு இல்லாத உறவு எதுவும் இல்லை. எதிர்பார்ப்பு இருக்கக்கூடாது என்பது கூட ஒரு எதிர்பார்ப்பு தான். இப்படத்தின் காட்சிகள் இன்றும் பல இல்லங்களில் பல பெண்களும் எதிர் கொண்டு வரும் நிலையை தான் படமாக சித்தரித்துள்ளார். மனைவி அம்மா மகள் உடன் பிறந்தவள் உணவு சமைத்தால் ஆயிரம் குறைகளை கண்டிப்பிடிப்பதை விட மனதார பாராட்டி பாருங்கள் அதுவே அவளின் உச்சகட்ட மகிழ்ச்சியாக இருக்கும். எல்லா பெண்களின் எதிர்பார்ப்பு காசு, ஆடை, ஆபரணம் மட்டுமல்ல சில பெண்கள் விலையுயர்ந்தாக கருதுவது அன்பு பாசம் பரிமாற்றம் அரவணைப்பு நெற்றி முத்தம் நம்பிக்கை பாதுகாப்பு பாராட்டு இவையாக தான் இருக்கும். முடிந்தால் இதனை பரிசளியுங்கள் இல்லையென்றால் அவளது முடிவுகளை அவளையே எடுக்க துணைச் செய்யுங்கள். இப்படத்தை யாவரும் காணலாம். 


நன்றி மீண்டும் ஒரு பட விமர்சனத்துடன் சந்திக்கிறேன். படங்கள் பரிந்துரையும் வரவேற்கப்படுகின்றன. கேள்விகளுக்கு விடைத்தேடும் பயணம் தொடரும்.


நம்பிக்கையுடன் வைசாலி செல்வம்.

2 comments:

Unknown said...

Super dr. The way you express the feeling is awesome. Tamil rmba alaga iruku. 🥰🥰🥰

Unknown said...

Super dr. Quite interesting. Tamil rmba nala iruku 🤩😘

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...