Thursday 29 April 2021

நீயே முளைப்பாய்..!!

 


#நூல்விமர்சனம் 


நூல் :நீயே முளைப்பாய் 


ஆசிரியர் : கரிசல்காரி கவிதா ஜவகர்


பதிப்பகம் : தமிழி பதிப்பகம் 

சிறுவயதில் ஞாயிறு விடுமுறை என்றால் மாமிசம் சமைப்பதும் சொந்தக்காரர்கள் ஒன்று கூடுவதும் இயல்பாக இருந்தது. அப்போதெல்லாம் காலை 10 மணிக்கு சன் டிவி மட்டும் தான் வீட்டுல போடுவாங்க சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமன்றம் தான் அன்றைய நீதிமன்றம் என்றால் கூட மிகையே. சிறுவயதில் பட்டிமன்றம் அரட்டை அரங்கம் இது போன்ற நிகழ்ச்சிகள் தான் வீட்டில் அதிகம் பார்க்கப்படும் ஆனால் எனக்கு அவ்வளவு ஈடுபாடு இருக்காது. சின்னஞ்சிறு வண்ணத்துப்பூச்சிகள் போல சிறகடித்து திறிந்து பறந்த நாட்கள் அவை. அதனால் பேச்சுகள் கேட்க அமர்ந்தது இல்லை. சில நேரங்களில் கட்டாயத்தின் பேரில் அமர்வதுண்டு. ஆனால் இப்போது அதை நினைத்தால் கூட சிரிப்பாக இருக்கிறது. இப்போது பட்டிமன்றம் என்றால் நான் தான் முதல் நபராக டிவியின் முன்பு அமர்வேன். கருத்து சுதந்திரம் என்பது இன்று யாவருக்கும் எளிதாக இருக்கிறது. எத்தனையோ குடும்பங்கள் குடும்பமாக இருக்க பட்டிமன்றமும் அரட்டை அரங்கமும் தான் காரணம் என்பதும் நிதர்சனமான உண்மை. பேச்சாளர்களால் தான் அந்நிகழ்ச்சிகள் விரும்பி பார்க்கப்படும். அப்பேச்சாளர்களில் ஒருவர் தான் கவிதா ஜவகர் அம்மா. இவரின் மொழியாளுமை எனக்கு மிகவும் பிடிக்கும். நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர். எத்தனை முறை வேண்டுமாலும் கேட்கலாம் என்று தோன்றும் பேச்சாளர்களில் ஒருவர்  கவிதா அம்மா. இரண்டு முறை நேரில் சந்தித்து உள்ளோம். இந்நூலில் எதை விட எதை சொல்ல அத்தனையும் மனதிற்கு நெருக்கமானவையாக உள்ளது. சில காட்சிகளை பார்க்கும் போதும் சில வார்த்தைகளை படிக்கும் போதும் நமக்காக படைக்கப்பட்டது போல இருக்கும். அந்த உணர்வை நான் அடைந்தேன். நீயே முளைப்பாய் எனும் தலைப்பில் சமூகத்திற்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். சிந்திக்கவும் வைத்துள்ளார். பெண்கள் ஆழ்மனதின் எண்ணோட்டங்களின் தொகுப்பை அழகுற கையாண்டு இருக்கிறார். நறுக்கு கவிதைகள் அடிப்படையில் எடுத்தியம்பியுள்ளார். போற போக்குல இரண்டு வார்த்தைகளை சேர்த்து வீசிவிட்டு சென்றுள்ளார். உறவுகள் என்பது குருதியினால் மட்டும் ஏற்படுவது இல்லை, அன்பு பாசம் பிரிவு சண்டை கோபம் இப்படி பலவற்றை மறைபொருளாக வைத்து தான் உருவாகிறது என்பதையும் நினைவுகள் என்றுமே வலியான சுகம் என்பதையும் மிகைப்படுத்தி உள்ளார். பேரிலே கவி இருப்பதால் என்பதாலோ என்னவோ கவிகள் அனைத்தும் இன்றும் மனதில் நீங்காதஇடத்தைப் பெற்றுள்ளது. சில வரிகள் மட்டுமே என்றும் உயிர் பெறுகின்றன. அவற்றை உணர்ந்தேன் அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்கிறேன்.படித்து பாருங்கள். முகநூலில் அறிமுகமாகி நேரில் நட்பு கொண்டு தொலைபேசியில் உறவுகள் ஆனோம். என்றும் இப்பந்தம் தொடர வேண்டுகிறேன் அம்மா.குறிப்பு பிறரின் திறமைகளை வெளிக்கொணர இவரும் ஒரு பாலமாக இருக்கிறார் என்பது தனிச்சிறப்பு. எனது வாழ்க்கை பயணத்தில் இவருடன் உண்டான தொடர்பு மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது.

நன்றி.

வைசாலி செல்வம் , மீண்டும் ஒரு நூல் விமர்சனத்துடன் தங்களை சந்திக்கிறேன். கேள்விகளுக்கு விடைத் தேடும் பயணம் தொடரும்.

No comments:

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...