மே தினம்
“நான் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை எனது எதிரியே தீர்மானிக்கிறான்'' என்றார் மாவோ!
அப்படித்தான் உருவானது மே தினமும்.18 -ம் நூற்றாண்டின் இறுதியில், வளரும் நாடுகளில் முதலாளித்துவ வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தொழிலாளர்களை 18 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்ய நிர்பந்தித்தனர். பிரான்ஸ், ரஷ்யா, ஆஸ்திரியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நெசவாளர்கள், விவசாய கூலிகள், கட்டிட தொழிலாளர்கள் என பல்வேறு பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்கள் கால நேரம் பார்க்காமல், செக்கு மாடுகளைப் போன்று உழைத்தனர். ரத்தம் சிந்திய மே தினம் ..! இதை எதிர்த்து பல நாடுகளிலும் தொழிற்சங்கங்கள் தோன்றின. பல இடங்களில் போராட்டமும் நடந்து வந்தன. 1886-ல் அமெரிக்காவில், 'தொழிலாளர் கூட்டமைப்பு' நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர். இதன் காரணமாக அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. முதலாளித்துவத்துக்கு எதிராக மிகப்பெரிய அதிர்வலைகள் எழுந்து கொண்டிருந்த சூழலில் சிகாகோவில் தொழிலாளர்கள் மாபெரும் கண்டனப் பேரணியை நடத்தினர். அப்போது கூட்டத்தை கலைக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் நான்கு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த போராட்டத்துக்காக கூட்டத்தை திரட்டியதாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது.
எட்டு மணி நேர வேலை,ஊதிய உயர்வு ஆகிய கோரிக்கைகள் நிறைவேறிய அந்த தினமே 'மே தினம்'.
நன்றி : விகடன்
மனிதன் உழைப்பை ஏமாற்றலாம்.உழைப்பு மனிதனை ஏமாற்றுவதில்லை.. நீ உழைக்க தயாராக இருந்தால் இந்த உலகம் உனக்கு உழைக்க கற்றுத் தரும்.. உழைப்பின் மூலம் பெறுவதே அகமகிழ்ந்து இன்பம் தரும்.. உழைக்கும் அனைத்து உழைப்பாளர்களுக்கும் மே தின வாழ்த்துகள்.
No comments:
Post a Comment