ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கணினி, தொலைபேசி, சமூக வலைத்தளங்கள் என்று இருப்பதும் அவற்றின் வளர்ச்சி தொலைவில் இருக்கும் தொடர்புகளையும் அருகில் வைத்துக் கொள்ள இயலும் என்ற அடிப்படை அறிவும் தெளிவும் மட்டுமே தெரியும்.
Saturday, 4 July 2020
Wednesday, 9 January 2019
Tuesday, 8 January 2019
Friday, 4 January 2019
செல்லினம்
இணைய முகவரி
https://sellinam.com
கணினி மற்றும் மடிக்கணினி போன்றவைகளில் தட்டச்சு செய்வது மிகவும் கடினமான ஒரு சவாலாக இருந்தது முன்பு ஒரு காலத்தில். ஆனால் இன்று நம் அனைவரின் கைகளிலும் திறன்பேசி வந்துவிட்டது. அதன் பயன்பாடு மிகவும் அதிகரித்து வருகிறது. இன்னும் சொல்ல போனால் ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டி போட்டு தனது செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வரிசையில் இன்று நாம் பார்க்க இருக்கும் இணையம் தமிழுக்காக உருவாக்கப்பட்ட தமிழ் தட்டச்சு செயலி பக்கம்.
சீன நாட்டில் மூன்று விசைப்பலகை கொண்டு தட்டச்சு செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் நாம் ஒரு விசைப்பலகையில் தட்டச்சு செய்வது ஒரு பெரிய சாதனையாக நினைக்கிறோம். அதிலும் தமிழில் தட்டச்சு செய்வது ஒரு போருக்கு ஒத்திகை பார்ப்பது போல இருக்கும். அதனை எல்லாம் சுக்குநூறாக மாற்றியது என்றும் சொல்லலாம். இதில் ஒரு பெருமை ஒன்று உண்டு கர்வம் என்று கூட சொல்லலாம். தமிழுக்காக உருவாக்கப்பட்ட இந்த செயலி தமிழரான முத்து நெடுமாறன் அவர்களால் உருவாக்கப்பட்டது என்பது பெருமைக்குரியது.
2003ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட செல்லினம். அதே ஆண்டு ஆகஸ்டு 14ஆம் நாள் மலேசியாவில் மெக்சிஸ் செல்பேசி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியில் செல்லினத்தின் செயல்முறை பலருக்கும் செய்து காட்டப்பட்டது.இன்று அதிக திறன்பேசிகளில் தரவிறக்கம் செய்யப்பட்டு பயனபடுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)
அயோத்தி..
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...
-
தேனீ காற்றில் மிதந்து வரும் ஈரப்பதம் நீர்... கள்ளிக்காட்டில் தீடிரென எழுந்த முத்தமிழ் ஊற்று நீர்... கருவாச்சி காவியத்தில் பெண்மையை தீட்டிய...
-
வரைபடம் : சஞ்சுனா தேவி ஆகஸ்ட் 15 அன்று மட்டும் நம்ம பயபுல்லைங்களுக்கு எங்க இருந்து தான் தேசப்பற்று வருதுனே தெரியல..
-
முன்னுரை; உணவு, உடை, இருப்பிடம் என்பது குடிசையில் இருந்து மாட மாளிகையில் வாழ்பவர்கள் அனைவரது அடிப்படைத் தேவைகள் ஆகும்.பூமி எப்ப...