ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கணினி, தொலைபேசி, சமூக வலைத்தளங்கள் என்று இருப்பதும் அவற்றின் வளர்ச்சி தொலைவில் இருக்கும் தொடர்புகளையும் அருகில் வைத்துக் கொள்ள இயலும் என்ற அடிப்படை அறிவும் தெளிவும் மட்டுமே தெரியும்.
பள்ளிக் காலங்களில் எதிலும் ஈடுபாடுகள் அவ்வளவு பெரியதாக இருந்தது இல்லை. நன்றாக படிக்கனும் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் அப்போது தான் அப்பா அம்மா சந்தோமா இருப்பார்கள் என்ற எண்ணங்களுடனே பள்ளிப்பருவம் முடிந்தது. வாழ்க்கையின் கால் பகுதி முடித்து அடுத்த பகுதி நோக்கிய பயணம் தொடங்கியது. பள்ளி முடிந்தால் போதும் அது படி இது படி இந்த படிப்புக்கு தான் மரியாதை இந்த பட்டத்திற்கு தான் அரசு வேலை என்ற கூச்சல்களுக்கு நடுவில் கணக்கு பதவியியல் ( Chartered Accountant) படிப்பை தேர்வு செய்து ஒரு தனியார் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து ஆறு மாதங்களில் அதற்கான தேர்வுகளும் வந்தது அத்தேர்வுகளையும் எழுதி அதற்கான தேர்வு முடிவுகளும் வந்தது. கணக்கு பாடம் என்னவோ குழந்தைப் பருவத்தில் இருந்தே அலர்ஜி மாதிரி இருக்கும். தேர்வு முடிவில் கணக்கு பாடத்தில் தோல்வி என்று வந்தது. சரி நமக்கு இந்த படிப்பு சரி வரவில்லை என்று அப்படியே நிறுத்தி விட்டு. மீண்டும் கல்லூரி தொடங்க ஆறு மாதங்கள் இருக்கின்ற சூழலில் அடுத்த படிப்பை சரியாக தேர்வு செய்ய அந்த ஆறு மாதங்களை பயன்படுத்தினேன். என்னுடன் பள்ளியில் படித்த நண்பர்கள் கல்லூரியில் இரண்டாமாண்டு செல்கிறார்கள். அப்போது முதலாம் ஆண்டு கல்லூரி வாழ்க்கையில் நுழைகிறேன்.
பெரியதாக ஒரு வருடத்தை வீண் செய்து விட்டேன் என்று நான் கவலைப்பட வில்லை. காரணம் அங்கு கற்றத்தை இங்கு சரியாக பயன்படுத்தினேன். இளங்கலை வணிகவியல் தேர்வு செய்து மீண்டும் முதலில் இருந்து படித்தேன். பாடப்புத்தகத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் இந்த முறை ஒரு புதிய முயற்சியாக என்னையே அறியாமல் ஒரு புதிய கோணத்தில் படிக்கவும் தெரிந்து தெளிந்தும் கற்ற துவங்கினேன். துவங்கினேன் என்பதை விட தெரிந்து கொள்ள தூண்டப்பட்டேன். எந்த தொழில்நுட்பங்கள் பற்றி அறிவு இல்லாமல் இருந்தேனோ அதை பற்றி கற்று கொள்ள முற்பட்டேன்.
கல்லூரியில் வழங்கிய அனைத்து இலவசப் பயிற்சிகளையும் வகுப்புகளையும் குறிப்பாக ஆசிரிகர்களையும் அவர்கள் என்மீது வைத்திருந்த நம்பிக்கையும் எனக்கு வழங்கிய சுதந்திரத்தையும் ஒரு அளவுக்கு சரியாக பயன்படுத்தினேன். வலைப்பூ தான் எனது முதல் அடையாளமாக இருந்தது. எனது ஆசானின் தலைச்சிறந்த மாணவியாக இருந்தேன் இருக்கின்றேன். பிறகு என்னை போல் அங்கு இருக்கும் பல சகதோழிகளுக்கும் நான் கற்றத்தை பகிர்ந்து பயன்படுத்தினேன். அதன் மூலம் பல அறிஞர்கள் பிரபலமான எழுத்தாளர்கள் மேலும் சினிமா துறை சார்ந்த சில முகங்களும் எனக்கு அறிமுகம் ஆனார்கள்.
கல்லூரியில் மாணவிகளின் முதல்வராக இருந்தேன். அதன் மூலம் பல நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பு செய்தேன் இன்றும் செய்து வருகின்றேன். அதற்கு எமது கல்லூரியில் எனக்கு வழங்கிய ஊக்கமும் உந்துதலுமே காரணம். எந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த தயங்கினேனோ அதே தொழில்நுட்பங்கள் மூலம் இன்று எனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கி இருக்கிறேன். நான் உருவாக்கினேன் என்பதை விட என்னை உருவாக்கி இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.
என்னை எனக்கே அடையாளம் காட்டியவர் எனது ஆசான் முனைவர் இரா.குணசீலன் அவர்களே. பிறகு எமது கல்லூரியின் முதல்வர் முனைவர் மா. கார்த்திகேயன் ஐயா அவர்களும் கல்லூரி நிர்வாகமும் தான். அவர்களுக்கு என்றுமே பேரன்பு கலந்த நன்றியுடன் செயல்படுவேன். இன்று கல்லூரி வாசலில் இருந்து விடைபெற்று இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டது. இன்று வி.எஸ். ஈவன்ட் மேக்கர்ஸ் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்தை உருவாக்கி செயல்பட்டு வருகிறேன். காலங்கள் உருண்டு ஓடி வருகின்றது. கூடவே நானும் எனது நாட்களும் அதைவிட வேகமாக ஓடி வருகிறது. திரும்பி பார்க்க ஒரு நேரம் கிடைத்தது. உலகையே கண்ணுக்கு தெரியாமல் அஞ்சி நடுங்க வைத்திருக்கும் நுண்ணிய கிருமி கொரோனா மூலமே இன்று இது சாத்தியம் ஆனது. இல்லையென்றால் ஏன் ஓடுகிறேன் எதற்கு வாழ்கிறேன் என்று தெரியாமலே கடந்து இருப்பேன். சில நாட்களாக சும்மா இருக்கேன் என்ற சொல்லை தவிர வேறு சொல் என்னிடம் இல்லை.
எனவே நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் எனது வலைப்பக்கத்தை புதுபிக்க உள்ளேன். ஏதோ பிறந்தோம் இருந்தோம் இறந்தோம் என்று இல்லாமல் இருந்தேன் வாழ்ந்தேன் மீண்டும் பிறப்பேன் என்ற எண்ணங்களுடனே எனது பல கேள்விகளுக்கு விடைத் தேடும் பயணத்தை எனது தமிழ் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதற்கும் எனது ஆசானின் தூண்டுதலே காரணம். தெரிந்து கொண்டத்தை நம்மிடமே வைத்து கொள்வதால் பலன் ஏதுமில்லை என்பதால் எனக்கு தெரிந்த சிலவற்றையும் நான் கற்றுக் கொள்ள போகிற பலவற்றையும் தங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன்.
மீண்டும் நான் வைசாலி செல்வம்..
கேள்விகளுக்கு விடைத் தேடும் பயணம் தொடரும்..
தொடர்ந்து வாரு(சியு)ங்கள் சேர்ந்து கற்போம்.....
2 comments:
Superb vaishu. Keep writing. Cherish ���������� ������������. ������������ ����������������. ������ ������ �������������� ����������. �������������� ��������
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் அக்கா.
Post a Comment