Thursday, 5 November 2020

உடல் - உயிர் - ஆவி..!


 

#நூல்விமர்சனம்

நூல் : உடல் - உயிர் - ஆவி

ஆசிரியர்: கௌரி சங்கர்

பதிப்பகம் : தெரியவில்லை ( அமேசான் கின்டலில் இலவசம் )

நூலின் பெயர் தாக்கம் தான் படிக்கத்தூண்டியது. நீண்ட நாட்களுக்கு பிறகு நூல் வாசிப்பில் அமர்ந்தேன். அமானுஷ்யங்கள் ஆவி பேய் இதன் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. மனிதனை விட மிகபெரிய ஆவியும் பேயும் உண்டா இவ்வுலகில்..? சிறுகதை நூல் தான். நறுக்கு கதை என்று கூட சொல்லலாம்.

இன்றைய நவீன உலகில் எல்லாம் டெக்னாலஜி என்ற பெயரில் ஏதோ ஏதோ பல பரிமாணங்கள் அடைந்துக் கொண்டும் அதில் உடலையும் உயிரையும் அடைத்துக் கொண்டு வாழ்கின்றோம். இந்நூலில் இரண்டு கதாபாத்திரங்கள் உண்டு. ஆசிரியர் மற்றும் மாணவன். அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்து கதையை நகர்த்துகிறார். ஒலி என்பது மிகவும் அற்புதமான ஒரு விஷயம். காலையில் சிட்டுக்குருவிகள் முதல் இரவு தவளைகள் வரை காற்று மனிதன் என பலவற்றில் ஒலிகள் மாறுப்பட்டு நம்மை சுற்றி வரும். ஏன் இசை ஒலிக்கு அடிமையில்லாத மனிதர்கள் உண்டா என்ன ? ஒலியை பதிவு செய்யும் பல தொழில்நுட்பங்கள் உண்டு. ஆனால் இக் கதையில் ஒரு ஒலியை ஒரு நிமிடம் ஒரு மணி நேரம் ஒரு வாரம் ஏன் ஒரு வருடம் கழித்துக் கூட பதிவு செய்ய இயலும் என்று அறிவியலின் தொலைநோக்கு பார்வையுடன் கதையை மெல்ல நகர்த்துகிறார்.

அதனை விளக்கும் உதாரணமாக தான் உடல் உயிர் ஆவி என்ற எடுத்துக் காட்டுகிறார் ஆசிரியர். பலம் இல்லையென்றால் பழுது தான். அது உடலாக இருந்தாலும் சரி. பொருளாக இருந்தாலும் சரி. இதனை எப்படி ஒப்பிட்டு கதையை விளக்குகிறார்கள் என்பதே மீதமுள்ள கதைகளம். ஆர்வமாக படிக்கும் போது அடுத்து என்ன என்று ஆர்வத்தை தூண்டி விட்டு கதையை முடிவு செய்கிறார் இந்நூலின் ஆசிரியர்.

நானும் புதிராகவே முடித்துக் கொள்கிறேன். தேடி வாசியுங்கள். உங்களை நீங்களே உணருவீர்கள்..

நன்றி மீண்டும் ஒரு நூல் விமர்சனத்துடன் தங்களை சந்திக்கிறேன்.கேள்விகளுக்கு விடைத் தேடும் பயணம் தொடரும்..,

வைசாலி செல்வம். 🙏📚🌱🩸😊


No comments:

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...